சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

லியோனல் மெஸ்ஸி - டாடா பேட்ஜ் இணைந்ததால், அதிஷ்ட ஸ்பரிசம் மூலம் வருங்காலம் மாறுமா?

published on ஜனவரி 13, 2016 10:14 am by konark

கடந்த 2015 நவம்பர் மாதம், இந்தியாவின் முக்கிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், தனது பயணிகள் வாகனங்களின் முதலீடுகளுக்கான சர்வதேச அளவிலான விளம்பரத் தூதராக, சர்வதேச கால்பந்து காவியமான லியோனல் மெஸ்ஸியை நியமித்துள்ளது.


இந்த குழுவிற்குள் மெஸ்ஸியை கொண்டு வந்ததற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து, டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன யூனிட்டின் தலைவரான மாயானக் பாரீக் கூறுகையில், “இளம் மக்களுடன் அதிக அளவிலான இணைப்பை வைத்து கொள்ளும் யோசனையில் நாங்கள் இருந்த போது, கால்பந்தும், மெஸ்ஸியும் இளைஞர்களுடன் அதிக இணைப்பை கொண்டிருப்பதை அறிந்தோம். இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை என்பதை நாங்கள் உணர்ந்த போதும், எங்களின் ஆய்வின் முடிவு, எங்களை மெஸ்ஸியிடம் அழைத்து சென்றது. மிகவும் சாந்தமாக காட்சியளிக்கும் இவர், ஊக்கம் அளிப்பவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருப்பதால், இந்த கால்பந்து நட்சத்திரம், இப்பணிக்கு சாலப் பொருந்தினார். மேலும் அவர், மகத்தான முறையில் சுயமாக இயங்க கூடியவர் என்பதால், கடந்த 17 ஆண்டுகளில் வந்த கடினமான பல முரண்பாடுகளையும் கடும் உழைப்பால் மேற்கொண்டு, தொடர்ந்து வெற்றி வீரராக உள்ளார். எங்களின் ஆய்வின் மூலம் தற்போதைய புதிய கவர்ச்சி கால்பந்து தான் என்றும், இன்றைய இளைஞர்கள் இடையே கிரிக்கெட் ஒரு பழமையான விளையாட்டு என்று கருதப்படுவதும் தெரியவந்தது” என்றார்.
#madeofgreat-ன் பிரச்சாரம், TV விளம்பரங்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வழியாக வெளிவர துவங்கியுள்ளது. கீழே உள்ள TVC-யை ஒரு முறை பாருங்களேன்.

இந்த செயல்பாட்டிற்கு பின்னால், டாடா மோட்டார்ஸை ஒரு சர்வதேச அளவிலான பிராண்ட்டாக மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்கு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இறுதியாக சர்வதேச அளவிலான கவனத்தை கணிசமான அளவு ஈர்த்து, இந்த பிராண்ட் தனது இலக்கை மிகவும் நெருங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸின் ஒரு நீலநிறத்திலான ஜெர்ஸியை அணிந்து கொண்டு, தனது சிறு சிறு திறமை துணுக்குகளை காட்டிவரும் மெஸ்ஸியின் இந்த வீடியோ, தொலைக்காட்சி திரைகளிலும், சமூக வளைதளங்களிலும் சர்வதேச அளவில் வேகமாக பரவி, பெரும் பிரபலமடைந்து உள்ளது.
ஒரு ரேஞ்ச் ரோவரை மெஸ்ஸி, தானாகவே ஓட்டும் நிலையில், அதன் தயாரிப்பாளரோ டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர். டாடாவிற்கும், மெஸ்ஸிக்கும் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இதன் வெற்றியை பொறுத்து இது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இந்த வீடியோவில் டாடா ஸீகாவின் முதல் படமும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி மாத மத்தியில் அது அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸீகா உடன் டாடாவின் புதிய தயாரிப்புகளின் வரிசையும், இந்திய சந்தைக்குள் நுழைய உள்ளன. இதில் டாடா நெக்ஸான் (கச்சிதமான SUV) மற்றும் டாடா ஹீஸா (பெரிதாக்கப்பட்ட SUV) ஆகியவை உட்படும். நமது சந்தையில் கச்சிதமான SUV-களுக்கான திடீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த இந்திய கார் தயாரிப்பாளரின் நெக்ஸான் அறிமுகம் ஒரு மிகச் சிறந்த செயல்பாடு ஆகும்.


சமீபத்தில் கோவா-வில் வைத்து ஸீகாவை, நாங்கள் ஓட்டி பார்த்தோம். இதோ அதன் ஃபஸ்ட் டிரைவ் விமர்சனத்தை காண்

ஸீகாவில் காணப்படும் வடிவமைப்பு, உட்புற அமைப்புகள், செயல்திறன் மற்றும் நம்பகத் தன்மை என்று எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது, இது டாடாவின் தற்போதைய நிலையை முழுமையாக மாற்றுவதாக அமையும் என்று தெரிகிறது. இதற்கு சரியான விலை நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், அது ஒரு மிகவும் முக்கியத்துவம் கொண்ட தயாரிப்பாக மாறும் என்பது நிச்சயம். ஏனெனில் இந்திய கார் தயாரிப்பாளருக்கு, மெஸ்ஸியின் விரல் ஸ்பாரிசம் மூலம் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுவது நிச்சயம்!
மேலும் வாசிக்க
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதவராக லியோனல் மெஸ்ஸி ஒப்பந்தம் செயப்பட்டார்

k
வெளியிட்டவர்

konark

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை