• English
  • Login / Register

மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸின் என்ஜின் சிறப்பம்சங்கள் தற்போது கசிந்துள்ளன!

published on நவ 26, 2015 04:01 pm by sumit for மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

அடுத்த தலைமுறையை சேர்ந்த மெர்சிடிஸ் E கிளாஸை, வரும் 2016 ஜனவரி மாதம் நடைபெற உள்ள டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அதன் என்ஜின் லைன்-அப் சிறப்பம்சங்கள் தற்போது இன்டர்நெட் மூலம் கசிந்துள்ளன.

இந்த ஜெர்மானிய காருக்கு, மாறுபட்ட ட்யூனிங் கொண்ட 4-சிலிண்டர் குடும்பத்தை சேர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை பெற்றுள்ளன. ஒரு 4-சிலிண்டர் டீசல் என்ஜின், 148 bhp மற்றும் 228 bhp-க்கு இடைப்பட்ட அதிகபட்ச ஆற்றல் வெளியீடை அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு 4-சிலிண்டர் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் மூலம் 181-241 bhp-க்கு இடைப்பட்டு, வகைகளுக்கு ஏற்ப ஆற்றலை வெளியிடலாம். இதை தவிர, தற்போதைய மாடலில் பயன்படுத்தப்பட்டு வரும் 3.0-லிட்டர் V6 டீசல் என்ஜினில் சில மேம்பாடுகள் அளிக்கப்பட்டு, அப்படியே தொடரலாம் என்று தெரிகிறது. மேலும் இந்த புதிய E-கிளாஸிற்கு ஆற்றலை அளிக்கும் வகையில், ஒரு ட்வின்-டர்போ ஸ்ரேய்ட்-6 டீசல் என்ஜினின் அறிமுகமும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி அறிமுகம் செய்யப்பட உள்ள E கிளாஸில், ஒரு 6-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றலான 329 bhp மற்றும் 362 bhp ஆகியவை, முறையே E400 மற்றும் E450 AMG ஆகியவற்றில் அமைந்து நிலையில் கிடைக்கும். AMG C63 மற்றும் AMG GT ஆகியவற்றில் இருந்து, 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 என்ஜினை, E கிளாஸின் உயர்ந்த AMG மாடலுக்கு பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. இதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில், ஒரு பெட்ரோல் அல்லது டீசல் ஹைபிரிடு மாடல் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

இதன் என்ஜின்கள், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஒரு 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு செயல்படும். வெளியாகியுள்ள சில சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் நம்பப்படும் பட்சத்தில், பெட்ரோல் வகைகளுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என்று தோன்றவில்லை. மேலும் மெர்சிடிஸ் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் 2 பின்பக்க வீல்களுக்கு அல்லது எல்லா 4 வீல்களுக்கும் ஆற்றலானது அளிக்கப்படலாம். மேலும் E கிளாஸின் நீண்ட-வீல்பேஸ் மாடல் ஒன்றின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள மெர்சிடிஸ் நிறுவனம், இதை இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்ய யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz இ-கிளாஸ் 2017-2021

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஸ்கோடா ஆக்டிவா vrs
    ஸ்கோடா ஆக்டிவா vrs
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூல, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஆகஸ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டைகர் 2025
    டாடா டைகர் 2025
    Rs.6.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஸ்கோடா சூப்பர்ப் 2025
    ஸ்கோடா சூப்பர்ப் 2025
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மெர்சிடீஸ் eqe செடான்
    மெர்சிடீஸ் eqe செடான்
    Rs.1.20 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience