• English
    • Login / Register

    லேண்ட் ரோவர் நிறுவனம் முதல் கவச வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. - ரேன்ஜ் ரோவர் சென்டினல் என்று பெயர் ( வீடியோ காட்சி இணைக்கப்பட்டுள்ளது .

    raunak ஆல் செப் 07, 2015 07:13 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 17 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த வாகனத்தை 'நகரும் கோட்டை' என்கிறது. 

    ஜெய்பூர்:  டாட்டாவிற்கு சொந்தமான லேண்ட் ரோவர் நிறுவனம் முதல் முறையாக ரேன்ஜ் ரோவர் சென்டினல் என்று பெயரிடப்பட்ட கவச வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஆக்ஸ்போர்ட் சாலை தொழிற்சாலையில் உள்ள  சிறப்பு வாகன செயல்பாடுகள் பிரிவின் உதவியுடன்   (SVO)  மிக நேர்த்தியாக இந்த வாகனத்தை  கைகளாலேயே வடிவமைத்துள்ளது. மேலும் ரேன்ஜ் ரோவரின் எப்போதும் போன்ற வீல் பேஸ் கொண்ட சக்கரங்களும் இதில் உள்ளது. 

    இந்த வாகனத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன !   

    • கின்நெடிக் அமைப்பின்  VR8  வெடிவிபத்து  அல்லது தாக்குதல்கள் சம்மந்தமான தர நிர்ணய கோட்பாட்டின் படி முழுமையாக சோதிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றது. கின்நெடிக், முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பாதுகாப்பு சம்மந்தமான ஆராய்ச்சி அமைப்பு இப்போது தனித்து செயல்பட்டு வருகிறது. 
    • மிக அதிக சக்தி உள்ள ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள  ஆறு -  பிரிவு கொண்ட பயணிகள் அமர்வதற்கான இடங்கள்,  பல அடுக்கு லேமினேஷன் செய்யப்பட்ட ஆப்டிகல் தரத்துடன் கூடிய குண்டு துளைக்காத  கண்ணாடிகள் 
    • இந்த கண்ணாடிகள் 7.62 mm அளவுள்ள சீறிபாய்ந்து வரும் தோட்டாக்கள் கூட துளைக்க முடியாதவை. 
    • இதைத் தவிர 15 கிலோ எடை கொண்ட டிஎன்டி  (TNT)  வகை வெடிகுண்டு தாக்குதலில் இருந்தும் DM51  வகை எறிகுண்டு வாகனத்தின் மேல் வீசப்பட்டாலும் , பூமியில் புதைத்து வெடிக்க வைக்கப்பட்டாலும்  இந்த கவச வாகனம்  தன்னையும் பயணிகளையும் காத்துக்கொள்ளும் உறுதி மிக்கவை 
    •  மற்ற ரேன்ஜ் ரோவர் வாகனத்தில் காணப்படும்  கரடு முரடான சாலைகளில் எளிதாக பயணிக்கும் ஆற்றல்இந்த சென்டினல் வாகனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சென்டினல் சற்று கூடுதல் எடை கொண்டுள்ளதால் சஸ்பென்ஷன்  அதற்கு ஏற்றார் போல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

      

    மேலும் கூடுதலாக இந்த வாகனத்தில் ஆன்டி -  டேம்பர் எக்ஸ்சாஸ்ட் அமைப்பு , தானாக இயங்கி மூடி கொள்ளும் எரிபொருள் டேன்க், ஸ்ப்ளிட் சார்ஜிங் அமைப்பு மற்றும் கூடுதல் பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.  100 mm அளவிலான ஓட்டுனர் ஜன்னலில் உள்ள சிறிய திறப்பு டாகுமென்ட் பரிவர்த்தனைக்கு உதவுவதால் வாகனத்தின் முழு பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

    ஜான் எட்வர்ட்ஸ்,  நிர்வாக இயக்குனர் ஜாகுவார் லேண்ட் ரோவர் சிறப்பு நடவடிக்கை பிரிவு, பின்வருமாறு கூறினார்.  இது வரை ரேன்ஜ் ரோவர் வாகனங்களிலேயே இந்த சென்டினல் வாகனம் தான் மிக மிக சிறந்தது.  ரேன்ஜ் ரோவர் வாகனங்களில் உள்ள அதே சிறப்பம்சங்களும் , சொகுசும் இந்த வாகனத்திலும் இருக்கிறது என்றாலும் அதையும் விட இந்த சென்டினல் வாகனம்  லேண்ட் ரோவர் நிறுவனத்தின் SVO பிரிவின் சிறப்பு தொழில் நுட்ப அம்சங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதால்  எத்தகைய தாக்குதல்களையும் தாங்கி பயணிகளையும் தன்னையும் காத்துகொள்ளும் அசாத்திய வல்லமை பெற்றுள்ளது குறிப்பிட தக்க விஷயமாகும்..”

     இந்த வாகனம் 3.0  லிட்டர்  சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட V6   என்ஜின் மற்றும் அதனுடன் இணைந்த   சிறப்பு - கேளிபரேட் செய்த ZF  8  - வேக தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் மூலம் சக்தியூட்டப்படுகிறது.  முன்புறம் 380mm  மற்றும் பின்புறம் 365mm  என்ற அளவிலான ஹை - டென்சிடி மேம்படுத்தப்பட்ட டிஸ்க் ப்ரேகுகள் பொருத்தப்பட்டுள்ளன.  சுமார்  € 400,000( வரிகள் நீங்கலாக )  என்ற அளவில் விலைக்ஸ்` நிர்ணயிக்கப்படும் என்று லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 50,000  - மைல்/ மூன்று வருட  உத்திரவாதத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. 

    was this article helpful ?

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience