சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Land Rover Defender Sedona எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இப்போது பவர்ஃபுல்லான டீசல் இன்ஜினுடன் வருகிறது

published on மே 09, 2024 08:25 pm by rohit for லேண்டு ரோவர் டிபென்டர்

இந்த லிமிடெட் எடிஷன் மாடல், பிரத்தியேகமாக டிஃபென்டர் 110 உடன் கிடைக்கிறது. இது கான்ட்ராஸ்ட் பிளாக் எலமென்ட்களுடன் ஒரு புதிய ரெட் பெயிண்ட் ஆப்ஷனை கொண்டுள்ளது

உலகளவில் பிரபலமான சொகுசு ஆஃப்-ரோடர்களில் ஒன்றான லேண்ட் ரோவர் டிஃபென்டர் சில புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது. இது 110 பாடி ஸ்டைலுக்கான புதிய லிமிடெட் வெர்ஷனை அறிமுகப்படுத்துகிறது மற்றும் நீண்ட130 பாடி ஸ்டைல் வேரியன்ட்களுக்கு இரண்டாவது வரிசையில் கேப்டன் சீட்களுக்கான ஆப்ஷனை வழங்குகிறது. டிஃபென்டரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இதோ:

டிஃபென்டர் செடோனா எடிஷன்

லேண்ட் ரோவர் ஒரு புதிய செடோனா எடிஷன் டிஃபென்டர் 110 வேரியன்டுடன் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்துகிறது, இது ஒரு வருடத்திற்கு மட்டுமே கிடைக்கும். இந்த ஸ்பெஷல் எடிஷன் ஆனது அரிசோனாவின் செடோனாவின் மணற்பாங்கான நிலப்பரப்புகளால் ஈர்க்கப்பட்ட ரெட் கலர் எக்ஸ்ட்டீரியர் கொண்டுள்ளது. செடோனா ரெட் முன்பு டிஃபென்டர் 130 மாடலுக்கு பிரத்தியேகமாக இருந்தது. புதிய லிமிடெட் எடிஷன் டிஃபென்டர் 110-இன் டாப்-ஸ்பெக் எக்ஸ்-டைனமிக் HSE வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது.

புதிய சிவப்பு நிற ஷேடானது ஹூட்டில் உள்ள 'டிஃபென்டர்' மோனிகர், 20-இன்ச் அலாய் வீல்கள், பக்கவாட்டுகள் மற்றும் கிரில் உள்ளிட்ட பிளாக்-அவுட் ட்ரீட்மென்ட் மூலம் நிரப்பப்படுகிறது. கூடுதலாக, டெயில்கேட் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் கவர் எஸ்யூவியின் வெளிப்புறத்தில் அதே சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது, அதன் தனித்துவமான தோற்றத்திற்கு கூடுதல் அழகை சேர்கிறது.

லேண்ட் ரோவர், செடோனாவின் நிலப்பரப்பைக் காட்டும் புதிய ஆப்ஷனலான பானட் டீக்கலுடன் செடோனா எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கியர் கேரியரும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் நீங்கள் ஆஃப்-ரோடிங் உபகரணங்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

செடோனா எடிஷனின் முக்கிய உட்புற புதுப்பிப்புகளில், புதிய சாம்பல் நிற கேபின் தீம் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றை பெறுகிறது. கூடுதலாக, புதுப்பித்தலின் ஒரு பகுதியாக முன்பக்க பயணிகளுக்கு ஸ்மார்ட் ஸ்டோரேஜ் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாற்றங்களைத் தவிர, டிஃபென்டர் 110 வேரியன்ட்டிற்கு கூடுதலாக வசதிகள் எதுவும் அப்டேட் செய்யப்படவில்லை.

டிஃபென்டர் 130 -ல் கேப்டன் சீட்கள்

உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து லேண்ட் ரோவர் டிஃபென்டர் 130 ஆனது, எட்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 3-வரிசை சீட் அமைப்புடன் கிடைக்கிறது. இப்போது, இது இரண்டாவது வரிசையில் கேப்டன் சீட்டுக்கான ஆப்ஷனை வழங்குகிறது. இதில் வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் செயல்பாடுகள் உள்ளன. டிஃபென்டர் எக்ஸ் மற்றும் வி8 வேரியன்ட்களில் கேப்டனின் சீட்களிலும் விங் ஹெட்ரெஸ்ட்கள் உள்ளன. நடுவரிசையில் பயணிப்பவர்களுக்கு ஃப்ரன்ட் சென்டர் கன்சோலுக்கு பின்னால் அமைந்துள்ள இரண்டு கப் ஹோல்டர்களை பெறுகின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட டீசல் இன்ஜின்

புதுப்பிக்கப்பட்ட டிஃபென்டர் இப்போது புதிய D350 டீசல் மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜினைப் பெறுகிறது, இது முன்பு வழங்கப்பட்ட D300 மைல்ட்-ஹைப்ரிட் டீசல் பவர்டிரெய்னுக்கு மாற்றாக வழங்கப்படுகிறது. இந்த 3-லிட்டர் டீசல் இன்ஜின் இப்போது 350 PS மற்றும் 700 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது, இது முறையே 50 PS மற்றும் Nm அதிகமாகும். இது அதே 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை தொடர்ந்து பயன்படுத்துகிறது மற்றும் முன்பு போலவே ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனையும் வழங்குகிறது.

இது தவிர, லேண்ட் ரோவர் டிஃபென்டருக்கான கூடுதல் இன்ஜின் ஆப்ஷன்களில் 300 PS உற்பத்தி செய்யும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், 425 PS ஐ உருவாக்கும் 5-லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜின் மற்றும் 525 PS ஆற்றலை வழங்கும் 5-லிட்டர் சூப்பர்சார்ஜ்டு V8 பெட்ரோல் இன்ஜின் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட Rolls-Royce Cullinan அறிமுகப்படுத்தப்பட்டது, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மேம்படுத்தப்பட்ட உட்புறம்

லேண்ட் ரோவர் டிஃபென்டர், கடினமான பயணத்திற்கு பெயர் பெற்றது, டிஃபென்டர் X மற்றும் V8 மாடல்களில் தரமானதாக வரும் புதிய இன்டீரியர் பேக்கை வழங்குகிறது, மேலும் இது X-டைனமிக் HSE வேரியன்ட்டிற்கு ஆப்ஷனலாக வருகிறது. முன் வரிசையில், இது வெப்பமாக்கல், கூல்டு மற்றும் மெமரி செயல்பாடுகளுடன் 14-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் சீட்களை வழங்குகிறது. கூடுதலாக, இது டிஃபென்டர் 110 மற்றும் 130 வேரியன்ட்களுக்கு மூன்றாவது வரிசையில் விங் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் சூடான சீட்களை சேர்க்கிறது. இந்த பேக்கின் ஒரு பகுதியாக எஸ்யூவி டூயல்-டோன் கேபின் தீம்களின் தேர்வையும் வழங்குகிறது.

ஆப்ஷனல் பேக்

லேண்ட் ரோவர் இப்போது டிஃபென்டரை கீழே குறிப்பிட்டுள்ளபடி பல ஆப்ஷனல் பேக்குகளுடன் வழங்குகிறது:

  • டிரைவிங் மற்றும் ADAS பேக்குகள்

  1. ஆஃப்-ரோட் பேக் - எலக்ட்ரானிக் ஆக்டிவேட்டட் டிஃபெரென்ஷியல், பிளாக் ரூஃப் ரெயில்கள், அனைத்து நிலப்பரப்புகளிலும் பயணிக்க உகந்த டயர்கள், உள்நாட்டு பிளக் சாக்கெட் மற்றும் சென்சார் அடிப்படையிலான வாட்டர்-வேடிங் திறன் ஆகியவை அடங்கும்.

  2. மேம்பட்ட ஆஃப்-ரோட் பேக் - டெரெய்ன் ரெஸ்பான்ஸ் 2, ஏர் சஸ்பென்ஷன், அடாப்டிவ் டைனமிக்ஸ் மற்றும் ஆட்டோ ஹெட்லைட் லெவலிங் ஆகியவற்றுடன் மேம்பட்ட ஆஃப்-ரோடிங் சிஸ்டம்களைக் கொண்டுள்ளது.

  3. ஏர் சஸ்பென்ஷன் பேக் - ஏர் சஸ்பென்ஷன், அடாப்டிவ் டைனமிக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் லெவலிங் ஆகியவை அடங்கும்.

  • கோல்ட் கிளைமேட் மற்றும் டோவிங் பேக்குகள்

  1. கோல்ட் கிளைமேட் பேக் - சூடான விண்ட்ஸ்கிரீன், வாஷர் ஜெட், ஸ்டீயரிங் மற்றும் ஹெட்லைட் வாஷர் ஆகியவை அடங்கும்.

  2. டோவிங் பேக் (90 மற்றும் 110) - டோவிங் அசிஸ்ட், எலக்ட்ரானிக் டிப்ளோயபிள் டோ பார் அல்லது டோ-ஹிட்ச் ரிசீவர், மேம்பட்ட ஆஃப்-ரோடிங் சிஸ்டம்கள் மற்றும் முன்பு குறிப்பிட்ட ஏர் சஸ்பென்ஷன் பேக் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.

  3. டோவிங் பேக் 2 (130) - 90 மற்றும் 110 மாடல்களுக்கான டோவிங் பேக்கை போன்றது, ஆனால் பிரிக்கக்கூடிய டோவ் பார் அல்லது டோவ் ஹிட்ச் ரிசீவரை உள்ளடக்கியது.

  • இன்டீரியர் பேக்குகள்

  1. சிக்னேச்சர் இன்டீரியர் பேக் - சிக்னேச்சர் ஹெட்ரெஸ்ட்களுடன் கூடிய முன்-வரிசை ஹீட் மற்றும் கூல்டு எலக்ட்ரிக் மெமரி சீட்கள், விங்-ஹெட்ரெஸ்ட்களுடன் கூடிய இரண்டாவது வரிசை கிளைமேட் சீட்கள், மெல்லிய துணி ஹெட்லைனிங், லெதர் ஸ்டீயரிங் வீல் மற்றும் வின்ட்சர் லெதர் மற்றும் குவாட்ராட் அல்லது அல்ட்ரா ஃபேப்ரிக்ஸால் செய்யப்பட்ட சீட்கள் ஆகியவை அடங்கும்.

  2. கேப்டன் சீட்களுடன் கூடிய சிக்னேச்சர் இன்டீரியர் பேக் - மேலே உள்ள பேக்கை போன்றது. ஆனால் வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டலுடன் கூடிய இரண்டாவது வரிசை கேப்டன் சீட்கள் மற்றும் விங்-ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவை அடங்கும்.

● மூன்றாவது வரிசை சீட் பேக்

  1. ஃபேமிலி பேக் (110) - 3-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஏர் குவாலிட்டி சென்சார் மற்றும் ஏர் ப்யூரிஃபையர், மேனுவல் மூன்றாவது வரிசை சீட்கள், முன்பு குறிப்பிட்ட ஏர் சஸ்பென்ஷன் பேக் ஆகியவை அடங்கும்.

  2. ஃபேமிலி கம்ஃபர்ட் பேக் (110) - ஃபேமிலி பேக்கை போன்று ஆனால் சூடான மூன்றாவது வரிசை சீட்கள் மற்றும் பின்புற குளிரூட்டும் உதவியுடன் 3-ஸோன் கிளைமேட் கண்ட்ரோலை சேர்க்கிறது.

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் மற்றும் விலை

லேண்ட் ரோவர் டிஃபென்டரின் செடோனா எடிஷன் இந்திய சந்தையில் கிடைக்கும் என்பது சாத்தியமில்லை என்றாலும் இது கேப்டன் சீட்களின் ஆப்ஷனை வழங்கக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியா-ஸ்பெக் டிஃபென்டர் தற்போது ரூ. 97 லட்சத்தில் இருந்து ரூ.2.35 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஜீப் ரேங்லருக்கு பிரீமியம் மாற்றாக செயல்படுகிறது.

மேலும் படிக்க: Land Rover Defender ஆட்டோமேட்டிக்

r
வெளியிட்டவர்

rohit

  • 201 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Land Rover டிபென்டர்

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை