• English
  • Login / Register

கியா செல்டோஸ் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது: அவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கு உள்ளன

published on ஆகஸ்ட் 30, 2019 11:32 am by cardekho for க்யா Seltos 2019-2023

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

செல்டோஸ் ஆனது இந்திய சந்தையில் கொரிய உற்பத்தியாளர்களின் நுழைவைக் குறிக்கின்றது

  • செல்டோஸ் BS6 இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினுடனும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடனும் கிடைக்கும்.

  • இது 10.25 அங்குல தொடுதிரை, 8 அங்குல தலை மேல் காட்சி முறை, மூன்று இயக்க செயல் வகைகள், சுற்றுப்புற விளக்குகள், புத்திசாலியான காற்று சுத்திகரிப்பு, 8 ஒலிப்பெட்டி போஸ் ஒலி அமைப்பு, இன்னும் இது போன்ற பல முதல் வகுப்பு சிறப்பம்சங்களை பெறுகிறது.

  • இதன் விலை ருபாய் 10 லட்சம் முதல் 17 லட்சத்திற்குள் (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்களுடன் இரண்டு ஒழுங்கமைக்கபெற்ற நிலைகளில் கிடைக்கும்.

  • இது ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டூர் மற்றும் எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் போன்ற நடுத்தர அளவிலான எஸ்யூவிகளை எதிர்த்துப் போட்டியிடும்.

கியா தனது முதல் காரை இந்திய சந்தையில் நாளை அறிமுகப்படுத்த உள்ளது. செல்டோஸ் HT லைன் மற்றும் GT லைன் ஆகிய இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட நிலைகளில் கிடைக்கும், மேலும் இது பல துணை வகைகளை கொண்டிருக்கும். HT லைன் HTE, HTK, HTK+,HTX மற்றும் HTX+ என பல்வேறு வகைகளை கொண்டிருக்கையில், GT லைனில் GTK, GTX மற்றும் GTX+ ஆகியவை உள்ளடங்கும். கச்சிதமான SUVக்கு முன் அறிமுக முன்பதிவுகளை கியா இணையதளத்திலோ அல்லது கியா முகவர்களிடம் 25000 டோக்கன் தொகைக்கோ செய்யலாம்.

செல்டோஸ் பல எஞ்சின் தேர்வுடன் வழங்கப்படும்.முதலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைப் பற்றி பார்ப்போம். இந்த பிரிவு 115PS மற்றும் 144 NM உச்சபட்ச முறுக்கு விசைகளை உருவாக்குகிறது. மறுபுறம் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 115PS மற்றும் 250 NM உருவாக்கிறது. இந்த இயந்திரங்கள் கைமுறையாகவும் இல்லையேல் தானியங்கி பரிமாற்றதுடன் காணப்படும்.

1.4 லிட்டர் சுழலூட்டு பெட்ரோல் எஞ்சினுடன் செல்டோஸ் கிடைக்கும். இந்த பிரிவு 140 PS மற்றும் 242NM முறுக்கு சக்தி வெளியீட்டைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 6 ஸ்பீட் கைமுறை  கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீட் DCT யுடன் கிடைக்கும்.

எஞ்சின்

1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5-லிட்டர் பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

ட்ரான்ஸ்மிஷன் விருப்பங்கள்

6-ஸ்பீடு MT/ 7-ஸ்பீடு DCT (இரட்டை கிளட்ச் ட்ரான்ஸ்மிஷன்)

6-வேக MT / CVT

6-வேக MT / 6-வேக AT

பயன்தூர வீதம்

16.1kmpl / 16.5kmpl (DCT)

16.5kmpl / 16.8kmpl (CVT)

21kmpl / 18kmpl (AT)

வெளிப்புறமாக பார்க்கையில் உயர்வகை செல்டோஸ் ஆனது அனைத்து led முகப்பு விளக்குகள், DRL'ஸ் மற்றும் ஃபாக் விளக்குகள் போன்ற தனிச்சிறப்புக்களை கொண்டிருக்கும். இது ஒழுங்கமைக்கப்பட்ட நிலைகளை பொறுத்து 17 அங்குல அலாய் சக்கரங்களுடன் இது வழங்கப்படும். கீழ் வகைகளில் 16 அங்குல உருக்கு இரும்பு மற்றும் அலாய் சக்கரங்களுடன் கிடைக்கும். செல்டோஸ் சுறா துடுப்பை போன்ற அண்டென்னாவை பொதுவாக கொண்டு இருக்கும்.

செல்டோஸ் எட்டு ஒரு தொனி மற்றும் ஐந்து இரட்டை-தொனி வண்ண விருப்பங்களில் கிடைக்கும். GT லைன் வகைகள் சிவப்பு டோன் வண்ண விருப்பங்களை உள்ளேயும்-வெளியேயும் பெறுகின்றன, இது HT லைனை விட புத்துணர்ச்சிகரமாக தோன்றுகிறது.

சிற்றறையின் உள்ளே, செல்டோஸ், 10.25 அங்குல தொடுதிரை இன்போடைன்மெண்ட் அமைப்பு, 7 அங்குல  கலர் மல்டி-இன்போ டிஸ்பிளே(MID), 8 அங்குல தலை மேல் டிஸ்பிளே, எட்டு ஒலிபெருக்கிகளை உடைய போஸ் ஒலியம் அமைப்பு மற்றும் LED சுற்றுப்புற விளக்குகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்

செல்டோஸ் யு.வி.ஓ எனப்படும் வென்யூ போன்ற ஈசிம் அடிப்படையிலான இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்துடன் வருகிறது.  பற்றவைப்பு, ஏசி, காற்று சுத்திகரிப்பு. நேரடி கண்காணிப்பு, புவி-ஃபென்சிங் மற்றும் பலவற்றிற்கான ரிமோட் கண்ட்ரோலை வழங்குகிறது. மேலும் முதல் மூன்று வருடங்களுக்கு இலவசமாக கிடைக்கின்றது.

ஆறு காற்றுப் பைகள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், மின்னணுவியல் நிலைத்தன்மை திட்டம்(ESP), இழுவைக் கட்டுப்பாடு (Traction control), 360 டிகிரி வாகன நிறுத்த கேமரா, EBD கொண்ட ABS, மலையேற்ற துணை வசதி (Hill start assist), வாகன நிலைத்தன்மை மேலாண்மை , முன் மற்றும் பின்புற வாகன நிறுத்த உணரிகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் அடங்கும்.

கியா செல்டோஸின் விலை ரூ .10 லட்சம் முதல் ரூ .17 லட்சம் வரை இருக்கும், இது ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ், ரெனால்ட் கேப்சூர் மற்றும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் போன்றவற்றுடன் போட்டியிடும். இது டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டருடனும் மோதும்.

இதையும் படியுங்கள்: 2019 கியா செல்டோஸ் முதல் இயக்க விமர்சனம்: டீசல் & பெட்ரோல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Kia Seltos 2019-2023

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience