கிராண்ட் செரோகீ மற்றும் ரேங்க்ளர் அன்லிமிடெட் ஆகியவற்றை காட்டும் ஜீப்-இந்தியாவின் இணையதளத்தின் இயக்கம் துவங்கியது
published on டிசம்பர் 31, 2015 04:47 pm by raunak for ஜீப் கிராண்டு சீரோகி 2016-2020
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
முடிவாக ஜீப் இங்கே வந்துவிட்டது! 2016 ஆட்டோ எக்ஸ்போவில், இந்த வாகன தயாரிப்பாளர் தனது இந்திய அணிவகுப்பை வெளியிட உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியன் ஆட்டோமேட்டிவ் ரசிகர்கள் இடையே பிராண்டை வெளியிடுவதற்கு முன், ஒரு முன்னறிவிப்பான ஒலியை (பஸ்) எழுப்பும் வகையில், ஜீப் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கு முன்பாக, ஒரு முன்-அறிமுக இணையதளத்தை வெளியிட்டுள்ளது. ஃபியட்-கிரைஸ்லர் குடையின் (FCA – ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்) கீழ் வரும் இந்த பிராண்ட், பிப்ரவரியில் நடைபெற உள்ள 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அதிகாரபூர்வமான முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போதைக்கு FCA இந்தியாவின் மூலம் ஃபியட், அபார்த், மாசெராட்டி, பெராரி ஆகிய பிராண்டுகள், நம் நாட்டிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டில் இருந்து இந்த பட்டியலில் ஜீப் பிராண்டும் இணைக்கப்பட உள்ளது.
இந்த விழாவில் பேசிய FCA இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கெவின் ஃப்ளைன் கூறுகையில், “இந்த புகழ்பெற்ற பிராண்ட்டான ஜீப்பை, இந்தியாவில் அறிமுகம் செய்வது, எங்களுக்கு மகத்தான பெருமையை அளிக்கிறது. இந்திய சந்தையில் இன்று FCA-விற்கு ஒரு புதிய உட்வேகம் தேவைப்படுகிறது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லின் மூலம் இந்தியாவில் ஜீப்பை துவக்கத்தில் இருந்து உறுதியாக நிறுவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “புதிய ஜீப் பிராண்டின் இந்த இணையதளத்தை பார்க்கும் போது, அதன் பாரம்பரியத்திற்கு விசுவாசமாக இருந்து கொண்டே, இந்த மாடலின் சர்வதேச அளவிலான எல்லையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற ஒரு விருப்பம் இருப்பதாக தெரிகிறது. எனவே ஒரு சில மாதங்களில் இந்தியாவிற்கு வரவுள்ள இந்த உற்சாகப்படுத்தும் பிராண்ட்டை குறித்து அதிகம் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்” என்றார்.
ஜீப் இந்தியாவின் இணையதளத்தை பார்வையிட - www.jeep-india.com
வரும் பிப்ரவரியில், கிராண்ட் செரோகீ மற்றும் ராங்குலர் அன்லிமிடேட் ஆகியவற்றை, இந்த அமெரிக்க SUV தயாரிப்பாளர் அறிமுகம் செய்யலாம் என்று தெரிகிறது. முன்னதாக இந்தாண்டு ஜூலை மாதம், ஃபியட்டின் ரான்ஜென்கயன் உற்பத்தி தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் லிமிடேட் உடன் இணைந்து $ 280 மில்லியன் முதலீடு செய்யப் போவதாக, FCA அறிவித்தது. ஜீப்பின் புதிய சர்வதேச வாகனத்தின் தயாரிப்பிற்கு ஆதரவாக இருக்கும் வகையில், இந்த முதலீடு அமையும். இந்தியாவில் இவ்வாகனம் உலக அரங்கேற்றம் காணலாம் என்று நிலையில், இங்கிருந்து மற்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
மேலும் வாசிக்க : இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜீப்பின் கட்டமைப்பின் கீழ் உள்ள C-SUV வேவுப் பார்க்கப்பட்டது
0 out of 0 found this helpful