ஜீப் ரேனகேட் : என்னென்ன சாத்தியக்கூறுகள் ?
raunak ஆல் பிப்ரவரி 18, 2016 05:14 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் என்ட்ரி -லெவல் (ஆரம்ப - நிலை ) வாகனமாக இது இருக்கலாம்.
சில காலமாக ஜீப் நிறுவனத்தினர் தங்களது ஆரம்ப -நிலை (என்ட்ரி -லெவல் ) வாகனமான ரெனகேட் வாகனத்தை இந்திய மண்ணில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை . அதிகாரபூர்வமாக இந்த மாத துவக்கத்தில் நடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த வாகனம் காட்சிக்கு வைக்கப்படுவதற்கு முன்பே இந்திய சாலைகளில் இந்த ரெனகேட் வாகனங்கள் இதன் அமெரிக்க தயாரிப்பாளர்களால் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது . இப்போதைய திட்டத்தின் படி ஜீப் நிறுவனம் வரும் மாதங்களில் க்ரேண்ட் ஷெரோகே , க்ரேண்ட் ஷெரோகே SRT மற்றும் ரேங்க்ளர் அன்லிமிடெட் ஆகிய வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
உலக சந்தையில் ஜீப் நிறுவனத்தின் என்ட்ரி -லெவல் மாடலான ரெனகேட் வாகனங்களின் இந்திய அறிமுகம் பற்றி எந்த வித அறிவிப்பும் இந்நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. இருப்பினும் , காம்பேட் க்ராஸ்ஓவர் /SUV பிரிவு வாகனங்களுக்கு இந்திய சந்தையில் பெருகி வரும் வரவேற்பை பார்த்து அந்த பிரிவை சேர்ந்த இந்த ரெனகேட் வாகனத்தை இந்தியாவில் ஜீப் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இந்த வாகனம் அறிமுகமாகும் பட்சத்தில் , ஹயுண்டை க்ரேடா வாகனங்களின் டாப் -எண்டு வேரியன்ட் , அறிமுகமாக உள்ள புதிய மேம்படுத்தப்பட்ட டக்ஸன், மஹிந்திரா XUV 500 மற்றும் இந்த பிரிவில் உள்ள மேலும் சில வாகனங்களுடன் இந்த ரெனகேட் வாகனங்கள் போட்டியிடும்.
இந்த ரெனகேட் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகமாவதற்கான சாத்திய கூறுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ இந்த வாகனம் வெளியிடப்படலாம். CBU முறைப்படி வெளிநாட்டில் முழுதும் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் முறை நிச்சயம் பயன் தராது. காரணம் அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் இதன் விலை மிக அதிகமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டி இருக்கும் என்பதால் CKD என்ற இன்னொரு முறையில் ( உதிரி பாகங்களாக இறக்குமதி செய்து உள்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் அஸம்ப்லிங் செய்யும் முறை ) ரெனகேட் வாகனங்கள் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது. ஜீப் ஒரு ப்ரீமியம் ப்ரேன்ட் என்பதால் இதன் விலை ரூ. 15 லட்சங்களாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ நிர்ணயிக்க படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இஞ்சின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை ,சர்வதேச சந்தைகளில் இந்த ஜீப் வாகனம் பியட் நிறுவன என்ஜின்களைப் பயன்படுத்தி வருகிறது. ஜீப் பியட் - க்ரைஸ்லர் குடையின் கீழ் வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், இங்கிலாந்தில் உள்ள ஜீப் வாகனங்களில் புழக்கத்தில் உள்ள என்ஜின் ஆப்ஷன்களே இங்கே வெளியாகும் வாகனங்களிலும் பொருத்தப்படும் என்று தெரிகிறது. டீசல் ஆப்ஷனைப் பொறுத்தவரை 6 - வேக கியர்பாக்ஸ் இணைப்புடன் கூடிய 1.6 லிட்டர் மல்டிஜெட் ( எஸ் - க்ராஸ் கார்களில் இந்த என்ஜின் உள்ளது ) எஞ்சினும், பெட்ரோல் ஆப்ஷனைப் பொறுத்தவரை 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்த எஞ்சினும் பொருத்தப்பட்டு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியன்ட்களில் மட்டும் 4WD அம்சம் பொருத்தப்பட்டு இருப்பதுடன் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மாடலில் உள்ளது போன்ற 9 - வேக ஆடோமேடிக் கியர் அமைப்பும் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் வாசிக்கஜீப் ராங்க்லர் அன்லிமிடெட்: ஒரு சிறப்புப் பார்வை