• English
  • Login / Register

ஜீப் ராங்க்லர் அன்லிமிடெட்: ஒரு சிறப்புப் பார்வை

published on பிப்ரவரி 15, 2016 03:30 pm by அபிஜித் for ஜீப் வாங்குலர் 2016-2019

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Jeep Wrangler Unlimited Exteriors

அடுத்த சில மாதங்களில், இந்தியாவில் அடியெடுத்து வைக்கவுள்ள ஜீப் நிறுவனம், தனது பிரத்தியேக தயாரிப்புகளான ராங்லர், கிராண்ட் செரோகி SRT மற்றும் மேலும் பல கார்களின் மூலம் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிடும். ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பெற்ற ஜீப் அரங்கத்தில், SRT பிரதானமாகக் கட்சிப்படுத்தப்பட்டிருந்தது. SRT –யைத் தொடந்து, மோபர் ட்யூன்டு ராங்லர் அனைவரையும் கவர்ந்தது. எனினும், அங்கிருந்த மற்ற ஜீப் வாகனங்களோடு ஒப்பிடும் போது, எளிமையாகக் காட்சியளித்த, கருப்பு நிற ராங்லர் அன்லிமிடெட் வாகனத்தையும் பார்வையாளர்கள் பார்க்கத் தவறவில்லை. மிகச் சிறந்த ஆஃப் – ரோடர் திறன் வாய்ந்த வாகனம் என்பதாலும், SRT வெர்ஷன் கார்களை விட மிகவும் குறைவான விலையில் இதனை அறிமுகம் செய்ய இருப்பதாலும், இந்திய சந்தையில் வேரூன்ற ஜீப் நிறுவனம் இதை ஒரு அஸ்திரமாக வைத்திருக்கிறது. அன்லிமிடெட் வாகனத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதையும், ஏனைய ஜீப் வாகனங்களை விட இந்த வாகனத்தை ஏன் மக்கள் விரும்பவர் என்பதற்கான காரணத்தையும், இங்கே பார்க்கலாம். 
இந்தியர்களான நாம் மிகவும் எளிமையானவர்கள். குறிப்பாக, நமது அன்றாட வாழ்விற்கு சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையாளும் போது, நாம் எளிமைக்கே முக்கியத்துவம் தருகிறோம். நாம் ஸ்கார்பியோ அல்லது சபாரி போன்ற பெரிய கார்களின் மீது அதீத விருப்பம் கொண்டிருந்தாலும், இந்தியாவின் அன்றாட போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், சிறப்பான மைலேஜ் தரவேண்டும் என்ற காரணங்களுக்காக, கிரேட்டா அல்லது டஸ்டர் போன்ற சிறிய கார்களையே வாங்க வேண்டும் என்று முடிவெடுப்போம். நம்மில் பலருக்கு, எரிபொருள் சிக்கனம் தராத காருக்கு அதிக எரிபொருள் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இல்லை என்றாலும், சிறப்பான மைலேஜ் தரும் வாகனங்களையே நாம் தேர்வு செய்வோம். எனவேதான், ஹை எண்ட் கார்களில் கூட டீசல் ரகத்தையே நாம் தேர்வு செய்கிறோம். இந்தியர்களின் இந்த அணுகுமுறை போற்றப்பட வேண்டியதாகும்.

Jeep Wrangler Unlimited Exteriors

மேற்சொன்ன காரணத்தினால், எளிமையான ஜீப் ராங்லர் அன்லிமிடெட் இந்தியர்களைக் கவர்ந்துவிடும். மேலும், மோபர் போன்று அதிக மாறுதல்கள் இதில் இடம்பெறவில்லை. SRT -யை விட, ராங்க்லர் அன்லிமிடெட்டின் வேகம் குறைவானதாகவே இருக்கும். ஆட்டோமாட்டிக் பாக்ஸ் இணைந்த சாதாரண டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், இது எளிமையான வாகனம் என்பது மீண்டும் நிரூபணமாகிறது. மேலும், ஜீப்பின் அன்லிமிடெட், மிகவும் நியாயமான விலையிலேயே சந்தையில் அறிமுகமாகும் என்பதை உறுதியாகக் கூற முடியும். இதன் விலை தோராயமாக 30 லட்சமாக இருக்கும் என்று தெரிகிறது. 

Jeep Wrangler Unlimited Wheel

ஜீப் பெவிலியன் பகுதியில் இருந்த இந்நிறுவனத்தின் பிரதிநிதி, ‘இந்த வாகனம் “ட்ரையல் ரேட்டட்” தரத்தில் உள்ளது, இந்த தரம் ஆஃப் – ரோடர் கார்களுக்கான கேலன்டரி அவார்ட் போன்றது’ என்று விளக்கினார். உண்மையில், தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான SUV -கள் இத்தகைய பெருமையைப் பெறவில்லை. மேலும், பல்வேறு விதமான நிலப்பரப்புகளில் அசாத்தியமாகக் கடந்து செல்வதற்காக, பிரமாதமான கிரவுண்ட் க்ளியரன்சுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இதை வாங்கும் போது கொடுக்கப்படும் எளிய கருவிகள் உதவியுடன், இதில் அனைத்து பகுதிகளையும், சுலபமாக பிரிக்க முடியும் என்றும் விவரித்தார். இதன் மேல் விதானத்தை நான்கு பாகமாக, நமது விருப்பத்திற்கு ஏற்ப, நீக்கி கொள்ளலாம். அது போல, ஆஃப் – ரோடிங்க் செல்லும் போது கீறல்கள் படாமல் இருக்க, இதன் கதவுகளையும் நீக்கிவிடலாம். மற்றொரு சிறப்பென்னவென்றால், இதன் உள்கட்டமைப்பின் தரை பகுதியில் வடிகால் பிளக்குகள் இருப்பதால், இந்த வாகனத்தின் உட்பகுதியிலும் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்ய முடியும். ‘நீங்கள் உண்மையில் முழு உட்புறத்தையும் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்ய இயலும்’, என்று அவர் கூறும் போது, நம்மால் நம்ப முடியவில்லை, ஆனால் அது உண்மையானால் நாம் அதனை நிச்சயமாக விரும்புவோம், ஏனெனில், சேற்றுப் பகுதியில் சவாரி செய்த பிறகு, காரை சுத்தம் செய்ய இந்த அமைப்பு மிகவும் உதவியாக இருக்கும். 

Jeep Wrangler Unlimited Interior

அமெரிக்க வெர்ஷனில் 200 bhp சக்தியையும், 460 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யக்கூடிய 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதும், இந்த இஞ்ஜினே பொருத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் வரும் போது, அதே இஞ்ஜின் ஒரு சில சிறிய மாற்றங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். 

Jeep Wrangler Unlimited Interior

வாகனத்தில் உள்ள அனைத்து கருவிகளும், அமைப்புகளும்,  சிறந்த முறையில் பலனளிக்கவே பொருத்தப்பட்டுள்ளன. ஹாண்டில் பகுதிகள் முழுவதையும் மூடும் பிளாஸ்டிக்; பான்னெட் ரீடைனர்கள்; மற்றும் கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள மேற்பகுதி ஆகியவை பல காலங்கள் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெவிலியன் பகுதியில் இந்த ஜீப் மிகவும் சாதாரணமாகத் தோற்றமளித்தாலும், சாலையில் செல்லும் போது கம்பீரமாகத் தோற்றமளிக்கும். மோபர் ராங்லர் மற்றும் SRT ஆகியவற்றோடு ஒப்பிடும் போது, அன்லிமிடெட் மாடல் நெடுஞ்சாலையில் வேகமாகச் சீறிப்பாய்ந்து செல்லும் போதும், அன்றாட போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கும் போதும், அனைவரின் பார்வையும் இதன் கம்பீரமாமான தோற்றத்தின் மேல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Jeep Wrangler Unlimited Gear Shifter

மேலும் வாசிக்க : சூப்பர் SUV: கிராண்ட் செரோகீ SRT காரின் புகைப்படத் தொகுப்பு

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Jeep வாங்குலர் 2016-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience