ஜாகுவார் லான்ட் ரோவர் நிறுவனம் 2015 / 16 ஆம் நிதி ஆண்டின் தன்னுடைய முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
published on ஆகஸ்ட் 10, 2015 10:33 am by saad
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: இங்கிலாந்தின் ஜாகுவார் லான்ட் ரோவர் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தனது முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் - ஜூன் 2015 ஆம் ஆண்டு வரை 114,905 கார்களை இந்த நிறுவனம் விற்றுள்ளது. விற்பனை விகிதம் சற்றேறக்குறைய கடந்த ஆண்டின் எண்ணிக்கையை ஒத்ததாகவே உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் £ 351 மில்லியன் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் வட அமெரிக்கா, மெயின்லேன்ட் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இந்த நிறுவனதின் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம், சீன சந்தையில் விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது.
இந்த முடிவுகளைப்பற்றி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ரால்ப் ஸ்பெத் பின்வருமாறு கூறினார். “ சீனாவில் தற்போது நிலவி வரும் சவாலான பொருளாதார சூழ்நிலையிலும் இந்த காலாண்டில் நல்ல வருவாய் ஈட்டி உள்ளோம். இது உலகின் 5 பிரதான சர்வதேச பகுதிகளில் எங்கள் சீரான வளர்ச்சியையே எடுத்துக்காட்டுகிறது. எங்களது பிரிமியம் கார்களுக்கு தொடர்ந்து நல்ல கிராக்கி இருந்து வருகிறது. தொடர்ந்து உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்திலும், தொழிற் கூடங்களிலும் , தேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதிலும் நாங்கள் செய்யும் பெருத்த முதலீடு மிகவும் சரியானதே என்று எங்களை உறுதியாக நம்ப வைக்கிறது . மேலும் எங்கள் ஒவ்வொரு செயலும் வாடிக்கையாளரை முதன்மைபடுத்தியே இருக்கும்".
2014 ஆம் ஆண்டு ஜாகுவார் நிறுவனம் மொத்தம் 462,209 வாகனங்களை விற்றுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 6.4 % அதிகமாகும். இவற்றுள் 76,930 வாகனங்கள் ஜாகுவார் பெயரிலும் 385,279வாகனங்கள் லேன்ட் ரோவர் ப்ராண்டின் பெயரிலான வாகனங்களும் ஆகும். இந்த இங்கிலாந்து நாட்டின் கார் தயாரிப்பாளர்கள் அந்த நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக திகழ்கின்றனர். சுமார் 80% வருவாய் ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனத்திற்கு ஏற்றுமதி வாயிலாக கிடைக்கிறது எ1ன்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இந்த நிறுவனம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் 50 புதிய வாகனங்களை தயாரித்து உலகம் முழுக்க சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில் 12 புதிய மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே அறிமுகமாகிவிடும் என்பது இனிப்பான செய்தி. இந்தியாவில் சற்று குறைந்த விலையில் XE செடான் மற்றும் புத்தம் புதிய 2016 XF செடான் கார்கள் அடுத்த ஆண்டு அறிமுகமாகும்.
0 out of 0 found this helpful