இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஹோண்டா பிஆர் - வி பற்றிய பிரத்தியேக தகவல்கள் ஜப்பான் நாட்டில் இருந்து.
published on அக்டோபர் 27, 2015 04:55 pm by raunak for ஹோண்டா பிஆர்-வி
- 12 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
ஹோண்டா பிஆர் - வி தான் நாட்டிலேயே மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட முதல் காம்பேக்ட் எஸ்யுவி
ஹோண்டா நிறுவனம் தங்களது புதிய கச்சிதமான SUV பிரிவைச் சேர்ந்த வாகனமான BR- V வாகனங்களின் தகவல்களை தங்களது டோக்யோ நகரில் உள்ள தலைமையகத்தில் வெளியிட்டது. இந்த வாகனம் 2016 ஆம் ஆண்டு நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ ஷோவில் அதிகாரப்பூர்வமாக காட்சிக்கு வைக்கப்பட்டு பின் அதன் பின் ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இப்போதைய சூழலில் இந்தியாவில் மிக அதிகமாக காம்பேக்ட் SUV பிரிவைச் சேர்ந்த வாகனங்களே விற்பனை ஆகி வருகிறது. அதிலும் ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா வாகனங்கள் அறிமுகமான பிறகு இந்த பிரிவு வாகனங்களின் விற்பனை வியத்தகு வளர்ச்சியை கண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது . அதிலும் இன்று இந்த கச்சிதமான SUV பிரிவில் மாதத்திற்கு 7 ஆயிரம் கார்கள் விற்பனையாகி முதல் இடத்தில உள்ளது க்ரேடா கார்கள். இந்த க்ரேடா தான் ஹோண்டா BR – V க்கு முக்கிய எதிரியாக இருக்கும். இருந்தாலும் ரெனால்ட் டஸ்டர் , நிஸ்ஸான் டேரானோ, ஸ்கார்பியோ மற்றும் சபாரி கார்களும் இந்த புதிய BR – V வாகனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று சொல்லலாம்.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது: ஹோண்டா பிஆர் - வி யின் மாதிரி வெளியிடப்பட்டது - இந்தோனேசியாவில் இருந்து நேரடியாக
இந்த பிஆர் - வி யின் மாதிரி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் உலகம் முழுமைக்கும் அறிமுகப்படுத்தபட்டது. மேலும் இந்தோனேசியா சந்தையில் 1.5 லிட்டர் I – VTEC பெட்ரோல் மோட்டார் பொருத்தருத்தப்பட்டு வெளியாகும் என்றும் உறுதி படுத்தப்பட்டிருந்தது. இந்தியாவிலும் ஹோண்டா நிறுவனத்தின் எர்த் ட்ரீம் தொழில்நுட்பதை பயன்படுத்தும் CVT ட்ரேன்ஸ்மிஷன் இணைக்கப்பட்டு அதே 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு தான் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் 6600 rpm ல் 118 பிஎச்பி அளவு சக்தி மற்றும் 4600 rpm ல் அதிகபட்சமாக 145 nm என்ற அளவுக்கு டார்கை வெளியிடும் திறன் கொண்டது . டீசல் என்ஜின் ஆப்ஷன் பற்றி எந்த வித தகவலும் வெளியிடப்பட வில்லை என்றாலும் 100 PS சக்தி மற்றும் 200 nm அளவுக்கு அதிகபட்ச ட்விஸ்ட் கொண்ட அதே 1.5 லிட்டர் I -DTEC டீசல் என்ஜின் தான் பொருத்தப்படும் என்று யூகங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த டீசல் என்ஜின் மேலும் மேம்படுத்தப்பட்டு ஐரோப்பிய சந்தையில் புழக்கத்தில் உள்ளது போன்ற 1.6 லிட்டர் i – DTEC என்ஜின் பொருத்தப்படவும் வாய்ப்புள்ளதாக இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.
இதையும் படியுங்கள் :
ஹோண்டா பிஆர் - வி எந்தெந்த வண்ணங்களில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டன.
அமேஸ் மற்றும் மொபிலியோ கார்கள் பயன்படுத்தி வரும் அதே ப்ரியோ பிளேட்பார்ம் தான் இந்த BR – V கார்களுக்கும் அடிப்படையாக பயன்படுத்தப்பட உள்ளன. ஆனால் இந்த பிரயோ பிளேட்பார்ம் பயன்படுத்தும் மொபிலியோ , ஜாஸ் மற்றும் அமேஸ் கார்களை விட முற்றிலும் வித்தியாசமாக இந்த புதிய BR – V வடிவமைக்கப்பட்டு புத்தம் புது தோற்றத்தை பெற்றுள்ளன. மேலும் டேஷ்போர்ட் புது விதத்தில் வடிவமைக்கப்பட்டு ப்ரியோ கார்களை விட நேர்த்தியாக காட்சி அளிக்கிறது. ஆனாலும் இந்த டேஷ்போர்ட் சிட்டி மற்றும் ஜாஸ் கார்களில் உள்ள டேஷ்போர்டின் சாயலை பெற்றிருப்பதை இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.