Mercedes-Maybach GLS 600 காரை வாங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே
மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 காரை இதற்கு முன்னர் பாலிவுட் பிரபலங்களான டாப்ஸி பண்ணு மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் வாங்கியுள்ளனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள் அல்லது இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே சொகுசு கார்கள் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கின்றன. மேலும் அவர்களிடத்தில் நிச்சயமாக மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பிராண்ட் உள்ளது. அது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கார்களாகும். நிறைய பேர் மெர்சிடிஸின் சொகுசு கார்களை வாங்கியுள்ளனர் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான அஜிங்க்யா ரஹானே, சமீபத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு புதிய மெர்சிடிஸ்-மேபேக் GLS 600 எஸ்யூவி -யை வாங்கியிருக்கிறார். அவர் தனது மேபேக் எஸ்யூவி -யை மும்பையில் தனது மனைவியுடன் சேர்ந்து ஷோரூமில் இருந்து டெலிவரிக்காக பெற்றுக் கொண்டார்.
சமீபத்தில் மெர்சிடிஸ்-மேபெக் எஸ்யூவி -யை வாங்கிய பிரபலங்கள்
மெர்சிடிஸ்-மேபெக் GLS 600 மெர்சிடிஸ் வரிசையில் முதன்மையான எஸ்யூவி -யாக ரூ. 2.96 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் உள்ளது. செப்டம்பர் 2023 -ல், பிரபல மேபேக் ஜிஎல்எஸ் எஸ்யூவியை வாங்கியவர்கள் வரிசையில் பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு இணைந்தார். ரகுல் ப்ரீத் சிங், ரன்வீர் சிங், கீர்த்தி சனோன் மற்றும் அர்ஜுன் கபூர் போன்றவர்கள் இந்த காரை வாங்கியுள்ளனர்.
காரில் உள்ள வசதிகள் ?
மேபேக் ஜிஎல்எஸ் 600 பிரீமியம் மெட்டீரியல்களுடன் கூடிய ப்ளஷ் கேபினை கொண்டுள்ளது. இது இரண்டு 12.3-இன்ச் கனெக்டட் ஸ்கிரீன்கள், ஒரு பனோரமிக் சன்ரூஃப், பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த பின்புற ஆர்ம்ரெஸ்டில் 7-இன்ச் MBUX டேப்லெட், முன் மற்றும் பின்புறத்தில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பின்புற மின்சார சன்பிளைண்ட்கள் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற வசதிகளை பெறுகிறது. இது ஷாம்பெயின் கண்ணாடிகள், 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், விருப்பமான 11.6-இன்ச் பின்புற இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள் மற்றும் 13-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் கொண்ட ஆப்ஷனல் இன் -கார் கூல்டு பாக்ஸையும் பெறுகிறது.
மேலும் பார்க்க: விளையாட்டு வீரர்கள் 14 பேருக்கு மஹிந்திரா எஸ்யூவி -களை அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா
பவர்ஃபுல் பெட்ரோல் இன்ஜின்
மெர்சிடிஸ்-மேபெக் GLS 600 4MATIC+ ஆனது 4-லிட்டர் V8 பை-டர்போ பெட்ரோல் இன்ஜின் (557 PS/ 730 Nm) மூலம் இயக்கப்படுகிறது, இது 48V மைல்ட் ஹைப்ரிட் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கடினமான ஆக்சலரேஷனின் கீழ் கூடுதலாக 22PS மற்றும் 250Nm அவுட்புட்டை வழங்குகிறது. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவர் நான்கு சக்கரங்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த சொகுசு எஸ்யூவி வெறும் 4.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும்.
போட்டியாளர்கள்
மெர்சிடிஸ்-மேபெக் GLS 600 விலை ரூ. 2.96 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆக உள்ளது. மெர்சிடிஸ் எஸ்யூவி -யுடன் பலவிதமான கஸ்டமைஸ்டு பதிப்புகளையும் வழங்குவதால், விலை அதற்கேற்ப மாறலாம். இந்தியாவில், இது பென்ட்லி பெண்டாய்கா மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஆகியவற்றுக்கு மாற்றாக உள்ளது
மேலும் படிக்க: Mercedes-Benz GLS ஆட்டோமெட்டிக்