ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா 70,000 முன்பதிவை (புக்கிங்) கடந்தது; உலக சந்தையை குறி வைக்கிறது
ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 க்காக நவ 26, 2015 01:40 pm அன்று nabeel ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 18 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
க்ரேடா இந்திய சந்தையில் கால் வைப்பதற்கு முன்னதாகவே, ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த SUV வாகனத்தை முன்பதிவு செய்ய வரிசை கட்டி நின்றனர். அறிமுகமாகி 4 மாதங்கள் கடந்த நிலையில் , போலேரோ SUV வாகனங்கள் க்ரேடாவை விட சில நூறு வாகனங்கள் அதிகம் விற்று முதல் இடத்தைப் பிடிக்கும் வரை க்ரேடா தான் முதலிடத்தில் இருந்தது. தொடர்ந்து வெற்றிகரமாக விற்பனை ஆகி கொண்டிருக்கும் க்ரேடா கார்கள் இப்போது சர்வதேச சந்தையிலும் நல்ல வரவேற்பை பெற தொடங்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 70,000 வாகனங்களுக்கான முன்பதிவை (புக்கிங் ) பெற்றுள்ள க்ரேடா பல்வேறு உலக சந்தைகளில் இருந்தும் 15,770 புக்கிங் மற்றும் ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஹயுண்டாய் நிறுவனம், மாதம் ஒன்றிற்கு தற்போது உற்பத்தி செ வாகனங்களுடன் ய்யப்படும் 9,000 க்ரேடா என்ற எண்ணிக்கையை கூட்டி 10,000 என்ற எண்ணிக்கையை தொட முடிவு செய்துள்ளது. இலத்தீன் அமெரிக்கா , மதிய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளே க்ரேடா வாகனங்களின் முக்கிய சர்வதேச சந்தையாக அறியப்படுகிறது. மிக அதிகப்படியாக 40,000 வாகனங்கள் புக்கிங் ஆனதின் காரணமாக கடந்த செப்டெம்பரில் ஹயுண்டாய் நிறுவனம் தனது க்ரேடா SUV யின் உற்பத்தியை 7,000 ஆக உயர்த்தியதுடன் புக்கிங் செய்துவிட்டு வாகனத்தை பெற காத்திருக்கும் காலத்தை 9 மாதங்களாக நீட்டித்தது.
இந்த கொரியன் கார் தயாரிப்பளர்களின் மிக அதிகமாக விற்பனை ஆகும் வாகனமாக க்ரேடா தொடர்ந்து மூன்று மாதங்கள் இருந்தது என்பது கூடுதல் செய்தி. கடந்த வருடம் விற்பனையான 47,015 ஹயுண்டாய் நிறுவன தயாரிப்புக்களுடன் ஒப்பிடுகையில் இந்த அக்டோபரில் 24 சதவிகிதம் கூடுதல் விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹயுண்டாய் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெடிங் பிரிவின் மூத்த துணை தலைவர் ராகேஷ் ஸ்ரீவாத்ஸவா , “ பெருகி வரும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு க்ரேடா உற்பத்தியை மாதத்திற்கு 10,000 வாகனங்கள் உற்பத்தி என்ற நிலைக்கு உயர்த்துவதுடன் இந்திய சந்திலும் எங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதே எங்களது முக்கிய குறிக்கோளாகும். க்றேடாவின் வெற்றிக் கதையில் மிக முக்கிய அத்தியாயமாக க்ரேடா இணைந்துள்ளது மட்டுமின்றி , உலகம் முழுமைக்கும் சமீபத்திய இந்திய அரசின் ' மேக் இன் இந்தியா ' திட்டத்தைப் பின்பற்றி தாங்கள் அடைந்த வெற்றியை பறைசாற்றியுள்ளது. எங்களுக்கு உலக சந்தையில் இருந்து நல்ல வரவேற்பும் கிட்டியுள்ளது ". என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்