ஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் 6.70 லட்சத்தில் தொடங்குகின்றன
ஹூண்டாய் வேணு 2019-2022 க்காக மார்ச் 30, 2020 03:20 pm அன்று dhruv ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 620 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த செயல்முறையில், வென்யூ புதிய டீசல் இயந்திரத்தைப் பெற்றுள்ளது
-
அனைத்து இயந்திரங்களும் இப்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளன.
-
1.4-லிட்டர் டீசல் இயந்திரத்தின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
-
டர்போ-பெட்ரோல் இயந்திர தயாரிப்பு வகையில் தானியங்கி முறை மட்டுமே கிடைக்கிறது.
-
1.5-லிட்டர் டீசல் இயந்திரம் க்யா செல்டோஸ் மற்றும் புதிய க்ரெட்டாவிடம் இருப்பது போலவே இருக்கின்றது.
-
விலை உயர்வு அதிகபட்சமாக ரூபாய் 51,000 வரை இருக்கும்.
-
வென்யூ தொடர்ந்து விட்டாரா பிரெஸ்ஸா, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் எக்ஸ்யூவி300 போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
ஹூண்டாய் வென்யூ இப்போது பிஎஸ்6 இணக்கமாக இருக்கின்றது. இதனுடைய விலை ரூபாய் 6.70 லட்சத்தில் தொடங்கி உயர்-சிறப்பம்சம் பொருந்திய வகைக்கு ரூபாய் 11.40 லட்சம் வரை இருக்கலாம். தனிப்பட்ட வகைகளின் விலை மற்றும் அவற்றின் பிஎஸ் 4 வகைகளிடமிருந்து உள்ள வேறுபாட்டிற்காகக் கீழே உள்ள அட்டவணையை விரிவாகப் பார்க்கலாம்.
வகை |
பிஎஸ்4 விலைகள் |
பிஎஸ்6 வகைகள் |
மாறுபாடு |
1.2-லிட்டர் பெட்ரோல் இ எம்டி |
ரூபாய் 6.55 லட்சம் |
ரூபாய் 6.70 லட்சம் |
ரூபாய் 15,000 |
1.2-லிட்டர் பெட்ரோல் எஸ் எம்டி |
ரூபாய் 7.25 லட்சம் |
ரூபாய் 7.40 லட்சம் |
ரூபாய் 15,000 |
1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஸ் எம்டி |
ரூபாய் 8.26 லட்சம் |
ரூபாய் 8.46 லட்சம் |
ரூபாய் 20,000 |
1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஸ் டிசிடி |
ரூபாய் 9.40 லட்சம் |
ரூபாய் 9.60 லட்சம் |
ரூபாய் 20,000 |
1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஸ்எக்ஸ் எம்டி |
ரூபாய் 9.59 லட்சம் |
ரூபாய் 9.79 லட்சம் |
ரூபாய் 20,000 |
1.0- லிட்டர் டர்போ-பெட்ரோல் எஸ்எக்ஸ் எம்டி டூயல் டோன் |
ரூபாய் 9.74 லட்சம் |
ரூபாய் 9.94 லட்சம் |
ரூபாய் 20,000 |
1.0- லிட்டர் டர்போ-பெட்ரோல் எஸ்எக்ஸ் (ஓ) எம்டி |
ரூபாய் 10.65 லட்சம் |
ரூபாய் 10.85 லட்சம் |
ரூபாய் 20,000 |
1.0- லிட்டர் டர்போ-பெட்ரோல் எஸ்எக்ஸ் + டிசிடி |
ரூபாய் 11.15 லட்சம் |
ரூபாய் 11.35 லட்சம் |
ரூபாய் 20,000 |
1.5-லிட்டர் டீசல் இ எம்டி |
ரூபாய் 7.80 லட்சம் |
ரூபாய் 8.10 லட்சம் |
ரூபாய் 30,000 |
1.5-லிட்டர் டீசல் எஸ் எம்டி |
ரூபாய் 8.50 லட்சம் |
ரூபாய் 9.01 லட்சம் |
ரூபாய் 51,000 |
1.5-லிட்டர் டீசல் எஸ்எக்ஸ் எம்டி |
ரூபாய் 9.83 லட்சம் |
ரூபாய் 10 லட்சம் |
ரூபாய் 17,000 |
1.5- லிட்டர் டீசல் எஸ்எக்ஸ் எம்டி டூயல் டோன் |
ரூபாய் 9.98 லட்சம் |
ரூபாய் 10.28 லட்சம் |
ரூபாய் 30,000 |
1.5-லிட்டர் டீசல்எஸ்எக்ஸ்(ஓ)எம்டி |
ரூபாய் 10.89 லட்சம் |
ரூபாய் 11.40 லட்சம் |
ரூபாய் 51,000 |
வென்யூ பெட்ரோல் வகைகளின் விலை ரூபாய் 15,000 முதல் ரூபாய் 20,000 வரை அதிகமாகி இருக்கிறது, டீசல் வகைகளில் ரூபாய் 17,000 முதல் ரூபாய் 51,000 வரை உயர்வு காணப்படுகிறது.
1.4 லிட்டர் டீசல் இயந்திரத்தை க்யா செல்டோஸிலிருந்து 1.5 லிட்டர் டீசல் இயந்திரமாக மாற்றுவதே இயந்திர அமைப்பின் மிகப்பெரிய மாற்றமாகும். எவ்வாறாயினும், இங்கே அதன் செயல்திறன் 100பிஎஸ் மற்றும் 240என்எம் மட்டுமே உருவாக்குகிறது. இது முந்தைய 1.4 லிட்டர் இயந்திரத்தைக் காட்டிலும் 10பிஎஸ் மற்றும் 20என்எம் அதிகமாக உருவாக்குகிறது. டீசல் இயந்திரத்துடன் எந்த வித தானியங்கி முறை செலுத்துதல்களும் வழங்கப்படவில்லை, மேலும் இது 6-வேகக் கைமுறையுடன் தொடர்ந்து வருகிறது.
பெட்ரோல் விருப்பங்கள் முன்பு இருந்தது போலவே இருக்கின்றன - 1.2 லிட்டர் உள் எரிப்பு மோட்டாரில் இது 83பிஎஸ் மற்றும் 113என்எம் முறுக்கு திறனை உருவாக்கும், மேலும் 5-வேகக் கைமுறை விருப்பத்துடன் மட்டுமே வருகின்றது. 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோலின் ஆற்றல் வெளியீடு 120பிஎஸ் மற்றும் 171என்எம் இல் அப்படியே உள்ளது. இது 6-வேகக் கைமுறை அல்லது 7-வேக இரு-உரசிணைப்பி செலுத்துதல் (டிசிடி) வழங்கும்.
ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, கம்பியில்லா மின்னேற்றம் மற்றும் மின் முறையிலான சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை ஆகியவற்றுடன் 8 அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்புடன் இது தொடர்ந்து வழங்கப்படுகிறது. முன்பக்க பாதுகாப்பிற்காக, வென்யூவில் ஆறு காற்றுப்பைகள் ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்சி (மின்னணு நிலைத்த தன்மை கட்டுப்பாடு), விஎஸ்எம் (வாகன நிலைத்தன்மை மேலாண்மை) மற்றும் மலை ஏற்ற கட்டுப்பாடு ஆகியவற்றை வழங்குகிறது.
அதன் பிஎஸ் 6 இயந்திரங்களுடன், வென்யூவானது மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈகோஸ்போர்ட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகியவற்றுடன் தொடர்ந்து போட்டியிடுகிறது.
மேலும் படிக்க: இறுதி விலையில் ஹூண்டாய் வென்யூ