ஹயுண்டாய் நிறுவனம் தயாரிப்பிலிருந்த பிழையின் காரணமாக தன்னுடைய 4,70, 000 சொனாடா கார்களை திரும்பப் பெற்றுக்கொண்டது.
cardekho ஆல் செப் 28, 2015 04:04 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: எமிஷன் மோசடியின் காரணமாக தன்னுடைய 1.5 மில்லியன் கார்களை இங்கிலாந்தில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்ட செய்தியை மக்கள் மறப்பதற்குள் ஹயுண்டாய் நிறுவனமும் இப்போது தொழில்நுட்ப பிரச்னையில் சிக்கியுள்ளது. இஞ்சினில் கண்டுபிடிக்கபட்டுள்ள புதிய தொழில்நுட்ப பிழையின் காரணமாக அமெரிக்காவில் இருந்து தன்னுடைய சுமார் அரை மில்லியன் நடுத்தர அளவிலான கார்களை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. . திரும்ப பெறப்பட்ட கார்களில் 90% கார்கள் சொனாடா செடான் பிரிவு கார்களாகும். அதிலும் குறிப்பாக 2.0 அல்லது 2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட 2011 மற்றும் 2012 மாடல் கார்கள் தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவை.
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தைப் போலவே அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் தான் என்ஜின் கோளாறு அதிகமாக காணப்படுகிறது. . தயாரிப்பின் போது ஏற்பட்ட சில தவறின் காரணமாக என்ஜினில் சில அதிமுக்கியமான பாகங்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் அவ்வாறு மாற்றப்படவில்லை யெனில் என்ஜின் முழுமையாக செயல் இழந்து விடும் என்றும் ஹயுண்டாய் நிறுவனம் கூறுகிறது. தயாரிப்பின் போது க்ரேன்க் ஷாப்டில் இருந்து உலோக கழிவுகள் நீக்கப்படாமல் இருக்கலாம். இதன் காரணமாக கனக்டிங் ராடில் உள்ள பேரிங் பகுதிகளுக்கு ஆயில் செல்வது தடைபட்டு என்ஜின் முழுவதுமாக செயலிழக்க நேரிடும்.
இஞ்சின் முழுமையாக சோதிக்கப்பட்டு தேவைப்படும் பட்சத்தில் என்ஜின் பாகங்கள் முழுமையாக மாற்றி தரப்படும். மேலும் இன்ஜினின் உத்தரவாதம் 10 ஆண்டுகளாகவோ அல்லது 1,20, 000 மைல்கள் என்ற அளவுக்கோ நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. நிறுவனத்தில் தேவையான அளவு மாற்று பாகங்கள் கிடைக்கும் சமயத்தில் , வாகனங்கள் திரும்பப் பெறப்படுவது தொடங்கும்.
ஹோண்டா மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்களும் இத்தகைய தொழில் நுட்ப பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில் இப்போது ஹயுண்டாய் நிறுவனமும் இத்தகைய சிக்கலில் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. . அமெரிக்காவில் தொடங்கிய வோல்க்ஸ்வேகன் எமிஷன் மோசடி பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுத்து உலகம் முழுக்க பரவத் தொடங்கி உள்ள நிலையில் இன்னொரு புறம் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களில் காற்று பைகள் (ஏயர் பேக் ) சரிவர இயங்காததால் தன கார்களை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இத்தகைய பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களே பெரிய அளவிலான குறைபாடுகளுடன் வாகனத்தை வெளியிடுவதைப் பார்க்கும் போது வாகன தயாரிப்பு தொழிலில் தர நிர்ணயம் செய்யும் அமைப்புகளின் செயல்பாடுகளும் நம்பகத்தன்மையும் இப்போது கேள்விக்குறி ஆகியுள்ளது.