ஹயுண்டாய் நிறுவனம் தனது டக்ஸன் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஹூண்டாய் டுக்ஸன் 2016-2020 க்காக நவ 24, 2015 04:06 pm அன்று sumit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
ஹயுண்டாய் நிறுவனம் தனது SUV வகை வாகனமான டக்ஸன் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த தென் கொரிய கார் தயாரிப்பாளர்களின் இந்தியாவில் அறிமுகமாகாத ஒரே SUV வாகனம் இந்த டக்ஸன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் ஜெனிவா மோட்டார் ஷோவில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது இந்த டக்ஸன் . இந்த கார் இப்போது தனது மூன்றாவது தலைமுறையில் உள்ளது. அனைத்து நவீன வடிவமைப்பு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு ஹயுண்டாய் நிறுவனத்தின் சேன்டா பி கார்களுடன் ஒப்பிட்டு நோக்கும் அளவுக்கு உள்ளது. இந்த புதிய டக்ஸன் கார்களில், ஹயுண்டாய் கார்களில் காணப்படும் அனைத்து சிறப்பு அம்சங்களும் காணப்படுகிறது. அறுங்கோண வடிவிலான புதிய க்ரில் அமைப்பு, பெண்டர் வரை ஸ்ட்ரெட்ச் ஆனது போல் வடிவமைக்கப்பட்டுள்ள முகப்பு விளக்குகள் மற்றும் இரண்டு தனித்தனி பல்ப்களைக் கொண்ட பாக் விளக்கு அமைப்பு ( பனி விளக்குகள் ) ஆகியவை இந்த புதிய டக்ஸன் SUV வாகனங்களுக்கு கூடுதல் அழகை தருகின்றன.
ஒரு SUV வாகனத்திற்கு உண்டான இலக்கணத்துடன் உள்ள க்ரேடா கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த டக்ஸன் நிச்சயம் வித்தியாசமான வடிவமைப்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த டக்ஸன் கார்களின் வெளிப்புறத்தில் ஏராளமான நெளிவும் வளைவும் கொடுக்கப்பட்டு ஒரு ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனம் போல் இல்லாமல் ஒரு ஸ்போர்ட்ஸ் கூபே காரை போல் வடிவமைக்கப்பட்டு கவர்ச்சியாக இருக்கிறது இந்த புதிய டக்ஸன் SUV. இது காரின் பக்கவாட்டு பகுதியை பார்க்கும் போது நன்கு விளங்குகிறது. பின்புறத்தைப் பொறுத்தவரை ஒரு SUV தோற்றத்தை இந்த டக்ஸன் வாகனத்திற்கு தர வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஹயுண்டாய் நிறுவனத்தினர் சேண்டா பி கார்களைப் போன்ற பின்புற அமைப்பை தந்துள்ளனர் என்றே தோன்றுகிறது. டக்ஸன் பெற்றுள்ள இந்த புதிய வடிவமைப்பு மறு அவதாரம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து கருத்து தெரிவித்துள்ள தலைவர் மற்றும் தலைமை வடிவமைப்பு அதிகாரியான பீட்டர் ஸ்ரெயர், “ இந்த புதிய டக்ஸன் SUV பிரிவில் ஒரு புதிய எதிர்காலத்தையே எங்களுக்கு அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக முகப்பு விளக்குகளின் அமைப்பும் க்ரில் அமைப்பும் வெகுவாக பேசப்படும் " என்று கூறினார்.
இதையும் படியுங்கள்