ஹயுண்டாய் க்ரேடா இந்தியன் கார் ஆப் தி இயர் ஆக தேர்வு ; பலேனோ மற்றும் க்விட் கார்களை வென்றது
ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 க்காக டிசம்பர் 21, 2015 11:09 am அன்று bala subramaniam ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை :
ஹயுண்டாய் க்ரேடா இந்தியன் கார் ஆப் தி இயர் 2016 (ICOTY) விருதை வென்றுள்ளது. க்ரேண்ட் i10 மற்றும் எளிட் i20 கார்கள் முறையே 2014 மற்றும் 15 ஆம் ஆண்டு இந்த விருதை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியான மூன்றாவது ICOTY வெற்றியை ஹயுண்டாய் பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹயுண்டாய் க்ரேடா இந்த வருடத்திய அறிமுகங்களில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக அதிகப்படியான வரவேற்பை பெற்ற காராகும். இந்த விருது க்ரேடாவின் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்க கல்லாக அமைந்துள்ளது அதிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்த மாருதி சுசுகி பலேனோ மற்றும் ரெனால்ட் க்விட் கார்களை பின்னுக்கு தள்ளி வெற்றி வாகை சூடியுள்ளதால் ஹயுண்டாய் நிறுவனத்திற்கு இந்த விருது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகியுள்ளது.
டாக்டர். ரகுபதி சிங்கானியா , சேர்மன் & நிர்வாக இயக்குனர், ஜே கே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பாப் ரூபாணி , சேர்மன் ICOTY 2016 மற்றும் அஸ்பி பதேனா, சேர்மன் , IMOTY 2016 ஆகியோர் இந்த இந்தியன் கார் ஆப் தி இயர் விருதை ஹயுண்டாய் அணிக்கு வழங்கி கௌரவித்தனர்.
வெற்றியாளர்களை கௌரவித்து பேசிய டாக்டர். ரகுபதி சிங்கானியா , “ வாகன தயாரிப்பு தொழிலும் , அதனைச் சார்ந்த உபரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்துறையும் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. தெளிவான புரிதலைக் கொண்ட கொண்ட இந்திய வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில் வாகன தயாரிப்பாளர்கள் ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் என்ற முனைப்புடன் கடுமையாக உழைகின்றனர். இத்தகைய ஒரு போட்டி மிகுந்த சூழலில் , புதுமைகளை புகுத்தி வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆழமாக புரிந்துக் கொண்டு தடைகளை கடந்து தனித்து நிற்கும் தயாரிப்பளர்களை ஜேகே டயர் மற்றும் ICOTY& IMOTY ஆகியவை இணைந்து சாதித்தவர்களை அங்கீகரிக்க என்றுமே தவறியதில்லை. எங்களுடைய கடுமையான சட்ட திட்டங்களை சற்றும் சளைக்காமல் கடந்து வெற்றி கனியை பறித்துள்ள ஹயுண்டாய் க்ரேடா மற்றும் யமஹா R3 ஆகிய இரண்டிற்கும் எங்கள் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் " என்று கூறியுள்ளார்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹயுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி , திரு Y K கூ , “ வாகன தொழிற்துறையில் மிக உயரிய விருதான இந்தியன் கார் ஆப் தி இயர் விருதை இந்தியாவில் தயாரான உலக தரம் வாய்ந்த எங்களது ஒரு முழுமையான SUV யான க்ரேடா கார்களுக்காக பெறுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த நவநாகரீக யுகத்திற்கு ஒரு மிகச் சரியான உதாரணமாக எங்களது இந்த க்ரேடா விளங்குவதோடு மட்டுமின்றி வாகன தயாரிப்பில் ஹயுண்டாய் நிறுவனம் பல புதிய அளவுகோல்களை உருவாக்கி வருகிறது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்த ICOTY விருதை வென்றிருப்பது, ஹயுண்டாய் நிறுவனத்தின் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பையும் , நம்பிக்கையையும் காட்டும் விதமாக உள்ளது. இந்த தருணத்தில் எங்களது அனைத்து வாடிக்கையாளர்கள், வர்த்தக கூட்டாளிகள் , ஊடகம் மற்றும் நடுவர்கள் ஆகிய அனைவருக்கும் க்ரேடாவை இந்த வருடத்திற்கான சிறந்த வாகனமாக தேர்ந்தெடுத்தமைக்காகவும் , இந்தியாவில் அதிகம் நேசிக்கப்படும், நம்பப்படும் கார் தயாரிப்பாளர்களாக எங்களை உயர்த்தியமைக்காகவும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து உலக தரம் வாய்ந்த தயாரிப்புக்களை அதிநவீன தொழில்நுட்பத்துடனும், எங்களது நிறுவனத்தின் பெயரை உயர்த்தும் வகையிலும், புதுமைகளைப் புகுத்துவதையே தாரக மந்திரமாக கொண்டும் , இந்திய மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் ஹயுண்டாய் நிறுவனம் கடமையாற்றி வரும் " என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்