ஹூண்டாய் Creta

` 9.2 - 14.5 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


பிப்ரவரி 19, 2016: ஹயுண்டாய் நிறுவனம் தங்களது SUV யான க்ரேடா வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது இந்த வாகனத்தை புக் செய்யும் வாடிக்கையாளர்கள் டெலிவரிக்காக மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதால் இந்த முடிவை இந்நிறுவனம் எடுத்துள்ளது. இப்போது மாதம் ஒன்றுக்கு 10,000 க்ரேடா வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை 12,500 ஆக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு அடைந்த 16 சதவிகித வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளவே தொடர்ந்து உழைத்து வருவதாக ஹயுண்டாய் தெரிவித்துள்ளது. திரு. YK கூ அவர்களின் தலைமையின் கீழ் ஹயுண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் புதிய CEO மற்றும் நிர்வாக இயக்குனர், இனி வருடத்திற்கு இரண்டு புதிய தயாரிப்புக்களை ஹயுண்டாய் அறிமுகம் செய்யும் என்று கூறியுள்ளார்.

ஹயுண்டாய் க்ரேடா விமர்சனம்


கண்ணோட்டம்


அறிமுகம்


மற்ற கார் தயாரிப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் ஹயுண்டாய் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் சரியாக கணித்து சரியான நேரத்தில் சரியான தயாரிப்புக்களை அறிமுகம் செய்வதில் சிறந்து விளங்குகின்றனர். ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவை ஐ20 கார்களின் உதவியுடன் கைப்பற்றியதை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

image 1

மினி SUV மார்கெட் ஹேட்ச்பேக் மார்கெட்டை பின்னுக்கு தள்ளி விட்டது. இந்த மாற்றத்தை ஹயுண்டாய் கவனிக்க தவறி விட்டது. இந்த சமயத்தில் தற்காலிக ஏற்பாடாக ஐ20 கார்களை நிறுத்தியது. இந்த நடவடிக்கை ஐ20 ஆக்டிவ் கார்கள் உதயமாவதற்கு காரணமாக அமைந்தது. இந்த க்ராஸ் ஓவர் போன்ற போலியான தோற்றம் கொண்ட ஐ20 ஆக்டிவ் யாரையும் பெரிய அளவில் கவரவில்லை. மினி SUV பிரிவில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்த ரெனால்ட் டஸ்டர் வாகனங்களுக்கு சமமாக போட்டியிட ஹயுண்டாய் நிறுவனத்திற்கு இன்னும் சிறப்பான வாகனம் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் சீனாவில் ஏற்கனவே விற்பனை ஆகிக் கொண்டிருந்த ix25 வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வேலையை ஹயுண்டாய் தொடங்கியது. இந்தix25 வாகனம் i20 வாகனத்தின் பிளேட்பார்மை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெர்னா கார்களில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின் ஆப்ஷன்கள் தான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களைத் தான் இந்தியாவில் க்ரேடா என்ற பெயருடன் ஹயுண்டாய் அறிமுகம் செய்தது. இந்த வாகனத்தை 'ஒரு பெர்பெக்ட் SUV' என்று ஹயுண்டாய் கூறிக் கொள்கிறது. வாருங்கள் ! அது உன்மைதானா என்று சற்று விரிவாக பார்ப்போம்.

ப்ளஸ் பாய்ண்டுகள்1. ஹயுண்டாய் நிறுவனத்தின் ப்லூயிடிக் 2.0 வடிவமைப்பு உத்தியை பின்பற்றி மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. என்ஜின் மிகவும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதால் நகர்புற பயணத்திற்கு மிகவும் வசதியாக உள்ளது.
3. சஸ்பென்ஷன் நல்ல முறையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. மற்ற ஹயுண்டாய் வாகனங்களைப் போல் இல்லாமல் அதிர்வுகள் மற்றும் தூக்கி போடுதல் குறைவாக உள்ளது.

மைனஸ் பாய்ண்டுகள்1. விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்திருக்கலாம். கொடுக்கப்படும் பணத்திற்கு ஏற்ற அம்சங்கள் இல்லை.
2. AWD/4x4 அம்சங்கள் இல்லை. அதனால் கரடு முரடான சாலைகளில் செல்லும் திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
3. பெட்ரோல் ஆட்டோமேடிக் ஆப்ஷன் இல்லை
4. டீசல் ஆட்டோமேடிக் & பெட்ரோல் வேரியன்ட் டாப் -எண்டு ட்ரிம்மில் இல்லை. கர்டைன் காற்று பைகள் இல்லை. 17” அங்குல ரிம்கள் மற்றும் ஃபாக்ஸ் தோலினால் ஆன இன்டீரியர் இல்லை.
5. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் எரிபொருள் செயல்பாட்டையும் அது தீர்ந்து போகக் கூடிய தூரத்தையும் காடும் வசதிகள் இல்லை.

தனித்துவமான அம்சங்கள்1. நேவிகேஷன் அமைப்புடன் கூடிய 7” இன்போடைன்மென்ட் அமைப்பு.
2. அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள். 6 காற்று பைகள் ஆப்ஷனலாக கிடைக்கிறது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி ப்ரொக்ரேம் உள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட விபத்து பாதுகாப்பு சோதனையில் நல்ல மதிப்பெண்களை பெற்றது.
3. டீசல் ஆடோமேடிக் வேரியன்ட் உள்ளது.

கண்ணோட்டம்


அறிமுகத்திற்கு முன்னரே தங்களது தயாரிப்புக்களை பற்றி மக்களை பரபரப்பாக பேசச் செய்வதில் ஹயுண்டாய் நிறுவனம் எப்போதுமே வெற்றி பெற்று வந்துள்ளது. இதற்கு க்ரேடா மட்டும் விதிவிலக்கா என்ன ? ஒரு பெர்பெக்ட் SUV என்று இந்த வாகனத்தை பற்றி விளம்பரபடுத்தி வரும் இந்நிறுவனம் தனக்கே உரித்தான ஏராளமான நவீன தொழில்நுட்ப கருவிகளை இந்த க்ரேடாவில் பொருத்தி உள்ளது. இது நிச்சயம் ரெனால்ட் டஸ்டரை அச்சுறுத்தும்.

மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் (2 டீசல் மற்றும் 1 பெட்ரோல் ) க்ரேடா வெளியாகி உள்ளது. டீசல் ஆட்டோமேடிக் 6 ட்ரிம்களில் கிடைக்கிறது. இதன் மூலம் அத்தனை வகையான வாடிக்கையாளர்களையும் திருப்தி படுத்தும் வகையில் ஹயுண்டாய் மிகவும் புத்தி கூர்மையுடன் செயல்பட்டுள்ளது. நகர்புற பயணம் அல்லது தூரமாக செல்லும் பயணம் என எந்த வகை பயணத்தை மேற்கொள்ளும் வாடிக்கையாளராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற ஒரு க்ரேடா மாடல் நிச்சயம் உண்டு.

எக்ஸ்டீரியர் ( வெளிப்புற அமைப்பியல் )


இந்த பிரிவு வாகனங்களிலேயே க்ரேடா தான் மிக அழகான தோற்றம் கொண்ட வாகனம் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. உடல் பகுதியில் தெளிவான கோடுகள் , எங்கெல்லாம் சற்று பருத்து (உப்பலாக) இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் பருத்த தோற்றம் என்று நிச்சயம் ஒரு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வாகனமாக க்ரேடாவை சொல்லலாம். டஸ்டர் வடிவமைப்பு வேகமாக மக்கள் மனதில் பழையதாகி வரும் நிலையில், ஈகோஸ்போர்ட் க்ரேடா அளவுக்கு சிறப்பான தோற்றத்துடன் இல்லை என்பதே எங்கள் கருத்து. ஹயுண்டாய் நிறுவனத்தின் ப்லூயிடிக் 2.0 வடிவமைப்பு கோட்பாட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ரேடா கார்கள் ஒரு சிறிய சாண்டா ஃபி வாகனம் என்று கூட நாம் சொல்லலாம். மொத்தத்தில் ஒரு SUV வாகனத்திற்கு இருக்க வேண்டிய கம்பீரமான தோற்றம் இந்த க்ரேடா SUV வாகனங்களுக்கு உள்ளது.

image 2

முன்புறம் குரோம் பூச்சு கொடுக்கப்பட்ட ஒரு ஜோடி ஹெட்லேம்ப்கள் உங்களை வரவேற்கிறது. மூன்று அடுக்கு குரோம் பூச்சு கொடுக்கப்பட்ட க்ரில் பகுதியில் ஹயுண்டாய் நிறுவன சின்னம் கச்சிதமாக அமர்ந்து விடுகிறது.

image 3

ஹெட்லேம்ப்பில் நிறைய யூனிட்கள் உள்ளன. கீழ்பகுதியில் DRL கள், ஒரு பெரிய ப்ரொஜெக்டர் லேம்ப் யூனிட் டேர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் கார்னரிங் லேம்ப்கள் ஆகியவை உள்ளன. பெரிய அளவுடன் கூடிய பம்பரில் செங்குத்தான ஃபாக் விளக்குகள் மற்றும் வெள்ளி ஸ்கிட் பிளேட் உள்ளன. இந்த ஸ்கிட் பிளேட் போன்ற அமைப்பு பின்னாலும் உள்ளது.

image 4

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை 17 அங்குல டைமன்ட் கட் அல்லாய்கள் உங்கள் பார்வையில் பளிச்சென்று படுகிறது. வீல் ஆர்ச்சில் இந்த அல்லாய்கள் கச்சிதமாக பொருந்துகின்றன. ஆனால் டாப் டீசல் மேனுவல் வேரியண்டில் மட்டும் தான் இந்த 17 அங்குல அல்லாய் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற வேரியன்ட்களில் 16 அங்குல அல்லாய் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. ரிம்கள் டஸ்டர் வாகனத்தில் உள்ளது போன்றே 215mm அளவிலான ரப்பரால் மூடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கருப்பு வண்ண க்லேடிங் (உறைப்பூச்சு) கொடுக்கப்பட்டுள்ளது.

image 5

முன்புற வீல் ஆர்ச் பகுதியின் மேல் பகுதியில் தொடங்கி பின்புற டெயில் விளக்கு வரை தெளிவான ஒரு கோடு இழையோடுகிறது. இன்னொரு கோடு கருப்பு வண்ண க்லேடிங்கின் மேல்புறம் தொடங்கி ஒரு வீல் ஆர்ச்சில் இருந்து இன்னொரு வீல் ஆர்ச் வரை இழையோடுகிறது. ஒரு ஜோடி எளிமையான ஃரூப் ரயில்கள் காரின் கூரை பகுதியை அலங்கரிக்கின்றன. இது இந்த வாகனத்தின் உயரத்தை ஒரு சில மில்லி.மீட்டர்கள் உயர்த்திக் காட்டுகின்றன.

image 6

பின்புற வடிவமைப்பு அதிக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக உள்ளது. நம்பர் பிளேட்டிற்கு மேல்புறம் சிறிய அளவிலான குரோம் ஸ்ட்ரிப் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஸ்ப்லிட் டெயில் லேம்புகள் மற்றும் இரண்டு நீளமான ரிப்லக்டர்கள் தடித்த பம்பரில் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற பம்பர் போலவே பின்புற பம்பரிலும் பாக்ஸ் ஸ்கிட் பிளேட் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அளவுகளைப் பொறுத்தவரை க்ரேடா 4270 mm நீளம் (டஸ்டரை விட 45 மில்லி மீட்டரும் எஸ் -கிராசை விட 30 மில்லி மீட்டரும் குறைவு) கொண்டுள்ளது. ஆனால் ஈகோஸ்போர்ட் உடன் ஒப்பிடுகையில் 270 மீ.மீட்டர் பெரியதாக உள்ளது . ஈகோஸ்போர்ட், 4 மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட வாகனங்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு திட்டமிட்டே அந்நிறுவனத்தால் 4 மீட்டருக்கு குறைவான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.க்ரேடா 1780mm அகலம் கொண்டுள்ளது. இது டஸ்டரை விட 42 mm குறைவாகும்.

ஒரு புறம் ரெனால்ட் டஸ்டர் ஒரு SUV வாகனத்திற்கு உண்டான இலக்கணத்துடன் இருக்க , மறுபுறம் க்ரேடா நகர்புற வாகனத்தின் இலக்கணத்துடன் கச்சிதமாக காட்சியளிக்கிறது. ஈகோஸ்போர்ட் கார்களை போலவே இந்த க்ரேடாவின் வடிவமைப்பும் கரடு முரடான சாலைகளில் செல்வதற்கு ஏற்ற உடல் அமைப்புடன் இல்லை.

1

இன்டீரியர் (உட்புற அமைப்பியல் )


வாகனத்தின் உட்புற அலங்கரிப்பை (இன்டீரியர்ஸ்) வடிவமைப்பதில் ஹயுண்டாய் நிறுவனத்திற்கு எப்போதுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. க்ரேடாவின் உட்புறத்தில் கருப்பு வண்ணம் பிரதானமாக காட்சியளிக்கிறது. டேஷ்போர்ட் பகுதி பழுப்பு வண்ணத்தில் உள்ளது. இந்த பெய்ஜ் நிறம் ஒரு டோர் பேடில் இருந்து இன்னொரு டோர் பேட் வரை இழையோடுகிறது. உட்புறம் பொருத்தப்பட்டுள்ள கருவிகளும் அதன் பினிஷும் தற்போதய நவீன ஹயுண்டாய் கார்களில் உள்ளது போன்று படு சிறப்புடன் உள்ளது.

image 7 டேஷ்போர்டின் மத்திய பகுதியில் நேவிகேஷன் வசதியுடன் கூடிய 7 அங்குல டச்ஸ்க்ரீன் என்டர்டைன்மென்ட் சிஸ்டம் உள்ளது. விலை குறைவான அடிப்படை வேரியன்ட்களில் நேவிகேஷன் சிஸ்டம் இல்லை என்ற போதும் மீடியாவிற்கான 1GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. ப்ளூடூத், ஆக்ஸ் மற்றும் USB ஆகியவைகளை மீடியாவிற்கான இன்புட்டாக பயன்படுத்தலாம். இந்த அசத்தலான யூனிட் கையாள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது.

image 8

மேல் புறம் சிறிய டிஜிடல் கடிகாரம் டேஷ்போர்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டச் ஸ்க்ரீனின் இருபுறமும் குளிர்சாதன வசதிக்கான திறப்பான்கள் (ஏயர் -கான் வென்ட் ) உள்ளது. அவற்றை சுற்றி குரோம் இன்செர்ட்ஸ் உள்ளன.

image 9

கீழ் பக்கம் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தை இயக்குவதற்கான பொத்தான்கள் உள்ளன. நல்ல ஒரு விஷயம் என்னவென்றால் மூட் பார், நாம் செட் செய்யும் வெப்பத்திற்கு ஏற்ப நீல நிறத்தில் இருந்து சிகப்பு நிறத்திற்கு மாறுகிறது. குளிர்சாதன வசதி நல்ல சக்தி வாய்ந்ததாக உள்ளது. பின்புறமும் AC திறப்பான்கள்( வெண்ட்ஸ்) உள்ளன.

image 10

கியர் லீவருக்கு முன்பாக பெரிய பொருட்கள் வைப்பதற்கான இட வசதி உள்ளது. ஆன்டி ஸ்லிப் மெடீரியலால் இந்த பகுதிக்கு லைனிங் தரப்பட்டுள்ளது. இவைத் தவிர இதில் பவர் சாகெட், AUX &USB வசதிகள் உள்ளன. AUX மற்றும் USB க்கு மூடி ஏதும் இல்லை என்றாலும் நீல நிறத்தில் ஒளிர்வதால் இதனை எளிதில் கண்டுபிடித்து விட முடிகிறது.

image 11

ஸ்டீரிங் சக்கரம் உயர்ரக தோலினால் மூடப்பட்டுள்ளது. ஸ்டீரிங் சக்கரத்தை மேலும் கீழுமாக அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதி உள்ளதே தவிர ஓட்டுனர் ஸ்டீரிங் வீலை தனக்கு வசதியாக கையருகே அல்லது சற்றி தள்ளி வைத்துக் கொள்ள உதவும் அட்ஜஸ்ட்மென்ட் இந்த ஸ்டீரிங் சக்கரத்தில் இல்லை. i 20 யில் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் பெரும்பாலானவர்களுக்கு பொருந்தும் வகையில் தான் இந்த ஸ்டீரிங் வீல் நடுநிலையாக அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.ஸ்டீரிங் சக்கரத்தில் பல தரப்பட்ட பொத்தான்கள் மற்றும் ச்விட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்போடைன்மென்ட் அமைப்பை கண்ட்ரோல் செய்வதற்கான பொத்தான்கள் மற்றும் ஸ்விட்ச் ஸ்டீரிங் வீலின் இடப்பக்கமும் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலை இயக்குவதற்கான பொத்தான்கள் ஸ்டீரிங் வீலின் வலப்பக்கமும் உள்ளன.

image 12

இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரில் இரண்டு ஒரே அளவிலான டயல்கள் உள்ளன. ஒன்று ஸ்பீடோமீட்டர் டயல் மற்றொன்று டேகோமீட்டர் டயல் ஆகும். இதே டயல்களில் வெப்பம் மற்றும் எரிபொருள் அளவை காட்டும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. நடுவில் MID ( மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே உள்ளது.) இதில் இரண்டு ட்ரிப் கணினிகள் குறிப்பிட்ட ட்ரிப்பில் பயணம் செய்த தூரம் , சராசரி வேகம் மற்றும் ட்ரிப் நேரம் ஆகியவைகளை கட்டுகிறது. இந்த கணினி, எரிபொருள் சிக்கனம் மற்றும் எரிபொருள் தீர்ந்து போகக்கூடிய தூரம் ஆகிய தகவல்களை காட்டும் வசதி கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.

இவைகளைத் தவிர ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஸ்டேடஸ், சாவி வாகனத்தில் இல்லை என்பதற்கான எச்சரிக்கை ஒலி, கியர் ஷிப்ட் இன்டிகேடர் , வெளிப்புற வெப்ப அளவு மற்றும் பார்கிங் சென்ஸார் டிஸ்ப்ளே ஆகிய வசதிகள் உள்ளன.

ஸ்டீரிங் சக்கரத்தின் இரண்டு புறமும் உள்ள தண்டுகள் உயர்வான தரத்துடன் உள்ளது. இடப்பக்க தண்டில் முன் மற்றும் பின்புற வைபர்களை இயக்குவதற்கான கண்ட்ரோல்கள் உள்ளன. வலப்பக்கத்தில் உள்ள தண்டில் டேர்ன் இன்டிகேடர் , ஹெட்லேம்ப் மற்றும் பாக் லேம்ப்களுக்கு தேவையான கண்ட்ரோல்கள் உள்ளன.

image 13

டேஷ்போர்டில் ஓட்டுனருக்கு இடப்பக்கம் ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் உள்ளது. வலது பக்கம் ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் ஹெட்லேம்ப் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் விளக்கு ஆகியவைகளை உயக்க தேவையான ஸ்விட்ச்கள் உள்ளன. க்ரேடா வாகனத்தில் உள்ள கீலெஸ் சிஸ்டம் மிகவும் சாதுர்யமாக செயலாற்றுகிறது. அருகில் சாவி எங்குள்ளது என்பதை கண்டுபிடிப்பது மட்டுமின்றி அந்த சாவி கேபின் பகுதிக்கு உள்ளே உள்ளதா அல்லது வெளியே உள்ளதா என்பதையும் தெரிவிக்கிறது. ஓட்டுனர் கதவின் பக்கம் ரெக்வெஸ்ட் சென்ஸார் உதவியுடன் நீங்கள் காரை ஆக்செஸ் செய்யலாம். கருப்பு பொத்தானை நீங்கள் அழுத்தினாலே போதுமானது. அது உடனே இயங்கி காரை திறப்பதற்கான சாவி அருகில் உள்ளதா என்பதை தெரிவித்து விடும். சாவியை உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் எடுக்க வேண்டியதே இல்லை. ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து க்ளட்சை மிதித்து ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தானை அழுத்தினாலே போதுமானது. உடனே கார் இயங்கத் தொடக்கி விடுகிறது.

image 14

விங் மிரர் மின்சார உதவியுடன் இயங்குகிறது. பவர் விண்டோவிர்க்கான கண்ட்ரோல்கள் கதவு பகுதியின் ஆர்ம்ரெஸ்டில் உள்ளது. சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டத்திற்கான கண்ட்ரோலும் இதிலேயே உள்ளது. கதவில் முன்புற ஸ்பீக்கர்கள் மற்றும் 1லிட்டர் பாட்டில் வைக்கும் அளவிற்கான இடவசதியும் உள்ளது.

image 15

க்லோவ் பாக்ஸிற்கு எந்த வித லைனிங்-கும் கொடுக்கப்பட வில்லை . குளிரூட்டட்படவும் இல்லை . கடினமான ப்ளேஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

image 16

மேல் பகுதியில், கொடுக்கப்படும் விலைக்கு ஏற்ற நல்ல தரமான சன் வைசர்கள் பொருத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. பயணிகள் பக்க வைசரில் ஒளிரும் வசதி இல்லாத வேனிடி மிரர் உள்ளது. ஓட்டுனர் பக்க வைசரில் டிக்கெட் ஹோல்டருக்கான சிறிய ஸ்ட்ரேப் பொருத்தப்பட்டுள்ளது. கேபின் விளக்குகளைப் பொறுத்தவரை முன்புறம் இரண்டு தனித்தனி யூனிட்களாக உள்ளது. இந்த விளக்குகளுக்கான ஸ்விட்ச் மற்றும் ப்ளூடூத் மைக் ஆகியவையும் அதன் அருகிலேயே உள்ளது. இத்தி தவிர சன்க்ளாஸ் ஹோல்டரும் இந்த யூனிட்டில் உள்ளது.

image 17

டாப் -எண்டு வேரியண்டில் கருப்பு வண்ண தோல் போன்ற பொருள் கொண்டு இருக்கைகள் மூடப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள வெள்ளை நிற தையல் நேர்த்தியான தோற்றத்தை தருகிறது. லோ -எண்டு மாடல்களில் பாப்ரிக் கொண்டு இருக்கைகள் மூடப்பட்டுள்ளன. இருக்கைகள் அமர்வதற்கு மிகவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருக்கைகளின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. வாகனத்தின் உட்புகுந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்வது எளிதாக உள்ளது. தேவையான ஹெட்ரூம் உள்ளது. ஆனால் தோள் பகுதிக்கான இடவசதி சற்று குறைவாக உள்ளதாக உணர்ந்தோம்.

image 18

பின்புறமும் முன்புற இருக்கைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது. கால் வைப்பதற்கான இடவசதி தாரளமாக உள்ளதால் வசதியாக சாய்ந்து உட்கார முடிகிறது. ஆனால் நெடுந்தூர பயணத்தின் போது இவ்வாறு அமர்ந்து பயணிப்பது முதுகு வலியை ஏற்படுத்தலாம் என்றாலும் அதை ஒரு பெரிய குறையாக சொல்ல முடியாது

image 19

கப் ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் ஒன்று நடுவில் உள்ளது. பின்புற இருக்கைகளில் இரண்டு பேர் மிகவும் வசதியாக அமரலாம். ஆனால் மூன்றாவது நபர் சற்று இடுக்கமாக உணருவார் என்பதே எங்கள் கணிப்பு.

image 20

அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய இரண்டு பெரிய ஹெட்ரெஸ்ட்டுகள், பின்புற AC திறப்பான்கள் (வெண்ட்ஸ்) மற்றும் ஒரு சார்ஜிங் பாய்ன்ட் ஆகியவை உள்ளன. இந்த காரின் வடிவமைப்பின் காரணமாக பின்புற கதவுகளில் உள்ள கண்ணாடிகள் சிறிய அளவிலேயே உள்ளதால் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு தேவையான அளவு வெளியே நடப்பதை பார்க்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. நெடுந்தூர பயணத்தின் போது பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு சிறிய இடத்தில அடைபட்டிருக்கும் உணர்வு மேலோங்க வாய்ப்பிருக்கிறது.

டிக்கியின் கொள்ளளவு 400 லிட்டர்களாகும். டஸ்டர் வாகனங்களின் டிக்கியின் கொள்ளளவு 475 லிட்டர்கள் ஆகும் . வார இறுதியில் ஆனந்தமாக சுற்றுலா செல்ல தேவையான இடவசதி க்ரேடா வாகனங்களில் உள்ளது. இதையும் விட கூடுதல் இடம் தேவை படுபவர்கள் பின்னிருக்கை மொத்தமாக மடித்து விட்டு கூடுதல் இடத்தை பெற முடியும்.

2

செயல்திறன் (பெர்பார்மன்ஸ்)


பெட்ரோல்


3

க்ரேடா வாகனங்களில், வெர்னா கார்களில் பயன்படுத்தப்படும் 1.6L VTVT பெட்ரோல் என்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த என்ஜின் 121bhp சக்தி மற்றும் 151Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. இது ஈகோ ஸ்போர்ட் என்ஜின் வெளியிடும் 110bhp சக்தி மற்றும் டஸ்டர் வாகனத்தின் என்ஜின் திறனான 103 bhp ஆகியவற்றை விட கூடுதல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பெட்ரோல் என்ஜின் சற்று மந்தமாக செயல்படுகிறது. டாப் கியரில் தான் அதிக சக்தியை வெளியிடுகிறது. கூடுதல் ஆக்ஸலெரேஷன் கொடுத்து தான் இந்த சக்தியை வெளிக்கொண்டு வர வேண்டி உள்ளது. நெடுஞ்சாலையில் இந்த வாகனத்தை நாங்கள் ஓட்டியபோது ஓவர்டேக் செய்ய வேண்டிய நேரத்தில் ஒரு கியரை குறைத்து வேகத்தை ஏற்றி பின்பு தான் ஓவர்டேக் செய்யும் செயலை முழுமை செய்ய முடிகிறது. அவ்வாறு கியரை கட் செய்து ஆக்ஸலெரேஷனை அதிகரிக்கும் போது இஞ்சின் சத்தமானது காரின் உட்புற கேபின் பகுதியிலும் கேட்கிறது. அந்த சத்தம் அவ்வளவு கடுமையாக இல்லை என்பதும் நமது காதுகள் அதற்கு விரைவில் பழகி விடுகிறது என்பதும் ஆறுதல் தரும் விஷயம். இந்த பெட்ரோல் என்ஜின் 6 - வேக மேனுவல் கியர் அமைப்புடன் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோமேடிக் கியர் அமைப்பு இதில் இல்லை.

ARAI அமைப்பின் மதிப்பீட்டின் படி , இந்த பெட்ரோல் என்ஜின் க்ரேடா லிட்டருக்கு 15.29 கி.மீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஓட்டிய கார் லிட்டருக்கு 11 கி.மீ. மைலேஜ் மட்டுமே தந்தது. நகர்புற பயன்பாட்டிற்கு க்ரேடா பெட்ரோல் ஆப்ஷன் மிகவும் சரியான தேர்வாக இருக்கும். அதுவே நீங்கள் அதிகப்படியான தொலைதூர பயணங்களை மேற்கொள்பவர் என்றால் டீசல் என்ஜின் ஆப்ஷன் கொண்ட க்ரேடா பொருத்தமாக இருக்கும்.

டீசல்:


4

இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் க்ரேடா வெளியாகி உள்ளது. அவை 1.4L CRDi என்ஜின் மற்றும் சற்று பெரிய 1.6L CRDi டீசல் என்ஜின் ஆப்ஷன்களாகும். முதல் மூன்று வேரியன்ட்கள் 1.4L CRDi என்ஜின் ஆப்ஷனுடன் வெளியாக அடுத்த மூன்று டாப் வேரியன்ட்கள் 1.6L CRDi என்ஜின் ஆப்ஷன்கள் உடன் வெளியாகி உள்ளது.

1.4L CRDi


இந்த என்ஜின் i20 கார்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 89bhp அளவு சக்தி மற்றும் 220Nm அளவு டார்க் ஆகியவற்றை வெளியிடுகிறது. 6 - வேக கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. லோ - எண்டு டார்க் இந்த என்ஜினில் சிறந்த முறையில் உள்ளதால் நத்தை போல் நகரும் நகர்புற போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக உள்ளது. நெடுஞ்சாலையில் இந்த என்ஜின் 1.6 லிட்டர் என்ஜின் அளவுக்கு சிறப்பாக இல்லை என்ற போதிலும் நிச்சயம் இந்த 1.4 லிட்டர் எஞ்சின் நம்மை ஏமாற்றாது என்று சொல்ல முடிகிறது.

இந்த 1.4 லிட்டர் என்ஜின் விலை குறைந்த முதல் மூன்று வேரியன்ட்களில் மட்டும் உள்ளதால் குறைந்த விலையுடன் அதே சமயம் SUV வாகனத்தை வாங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லலாம். அதிகப்படியான நகர்புற பயன்பாட்டிற்கும் ,எப்போதாவது நெடுந்தூர பயணம் செய்வதற்கும் இந்த 1.4 லிட்டர் என்ஜின் கொண்ட க்ரேடா வேரியன்ட்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லலாம்.

1.6L CRDi


இந்த 1.6 CRDi க்ரேடாவின் மிக சிறப்பான ஒரு அம்சமாக நாம் கருதுவது இந்த இஞ்சின் ட்யூன் செய்யப்பட்டுள்ள முறையை தான். அந்த அளவுக்கு மிக அற்புதமாக இந்த இஞ்சின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த1.6L CRDi க்ரேடாவை ஸ்டார்ட் செய்தவுடன் ஐட்லிங் நிலையில் மிகவும் ஸ்மூத்தாக உள்ளது. வெர்னாவிலும் இந்த என்ஜின் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 126bhp அளவு சக்தியை வெளியிடும் இந்த என்ஜின், டஸ்டர் ( 108 bhp ) மற்றும் ஈகோஸ்போர்ட் (99 bhp ) ஆகிய கார்களின் இஞ்சின் வெளியிடும் ஆற்றலை விட அதிகமாகும்.

இந்த என்ஜினில் 1900rpm வரை டர்போ லேக் இருப்பது நன்றாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஸ்மூத்தான பவர் டெலிவரி கிடைக்கிறது. அதிக டார்க், குறைந்த அளவே டவுன்ஷிப்ட் செய்ய வைக்கிறது. கியர் பாக்ஸ் லைட்டான க்ளட்ச் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. லைட் க்ளட்ச் ஒரு ப்ளஸ் பாய்ன்ட் தான் என்றாலும் நின்று நின்று செல்ல வேண்டிய ட்ரேபிக் அதிகம் உள்ள சூழலில் சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது.

எஞ்சினின் உண்மையான திறன் நெடுஞ்சாலை பயணத்தின் போது வெளிச்சத்திற்கு வருகிறது. 100 கிலோ மீட்டருக்கு அதிகப்படியான வேகத்தில் எந்த வித சிரமமும் இன்றி இந்த என்ஜின் பலமணி நேரம் இயங்குகிறது. இதே என்ஜின் தான் வெர்னாவிலும் உள்ளது என்றாலும் இந்த இஞ்சின் க்ரேடாவில் தான் சிறப்பாக இயங்குவதாக தெரிகிறது.

image 21

பயணித்தல் மற்றும் கையாளுதல்


பயணித்தல் மற்றும் கையாளுதல் தான் க்ரேடாவின் சிறப்பம்சங்களில் ஒன்று என்று சொல்லலாம். பள்ளம் மேடு நிறைந்த சாலைகளை க்ரேடா மிக லாவகமாக, எந்த வித அதிர்வும் இல்லாமல் கடக்கும் அழகே அழகு ! இதனுடைய எடை அதிகம் என்றாலும் பாடி ரோல் கண்ட்ரோலில் உள்ளது. கரடு முரடான பாதைகளில் செல்வதற்கென்று உருவாக்கப்படவில்லை என்றாலும் இந்த க்ரேடா அப்படி ஒரு சூழல் ஏற்படுகையில் அதனை வெற்றிகரமாக கையாளுகிறது.

இந்த க்ரேடா வாகனங்களில் இன்னொரு சிறப்பான அமைப்பு ஸ்டீரிங் அமைப்பு என்று சொல்லலாம். அனைத்து ஹயுண்டாய் கார்களில் இருப்பதை விட இந்த வாகனத்தில் தான் ஸ்டீரிங் சிஸ்டம் மிகச் சிறப்பாக உள்ளது என்று சொல்லலாம். போக்குவரத்து நிறைந்த நகர்புற சாலைகளில் இந்த ஸ்டீரிங் லைட்டாகவும் அதிகமாக முயற்சி இன்றி இயக்கும் வகையிலும் உள்ளது. இது ஓட்டுனருக்கு ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் நெடுஞ்சாலையில் அதிக வேகமான பயணத்தின் போது இந்த ஸ்டீரிங் நல்ல அழுத்தத்துடன் சற்று கூடுதல் எடையுடன் இருப்பதாக உணர வைக்கிறது. இது அதிகமான வேகத்தில் செல்லும் போது ஓட்டுனரின் தன்னபிக்கையை பெருமளவு உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு


5

க்ரேடா வாகனங்களில் அனைத்து வேரியன்ட்களிலும் ABS வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான காரை விரும்புபவர்களுக்கு க்ரேடா ஒரு சரியான தேர்வாக இருக்கும். டாப் -எண்டு வேரியன்டான SX(O) வில் 6 காற்று பைகள் , ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் , எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி ப்ரொக்ரேம் மற்றும் ஹில் - ஸ்டார்ட் அஸிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

க்ரேடா அதிநவீன கூடுதல் சக்தி கொண்ட ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சக்தி அதிகம் என்றாலும் எடை குறைவு. இதன் காரணமாக விபத்து நேரும் போது பயணிகளின் பாதுகாப்புக்கு கூடுதல் உத்திரவாதம் கிடைக்கிறது. மேலும் இதை உறுதி செய்யும் விதத்தில் க்ரேடா (ix25 என்று சீனாவில் அழைக்கப்படும் இந்த கார் ) C - NCAP(சீனா புதிய கார் அசெஸ்மென்ட் ப்ரொக்ரேம் ) நடத்திய விபத்து சோதனையில் முழு மதிப்பெண்களையும் ( 5 ஸ்டார்ஸ்) பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை நடுத்தர (S+) வேரியண்டில் காற்று பைகள் இல்லாமல் நடத்தப்பட்டது என்பது இங்கே கவனத்தில் கொள்ள தக்கது.

Image-22

வேரியன்ட் (வகைகள்)


6

க்ரேடா 3 என்ஜின் ஆப்ஷன்களில் (1 பெட்ரோல் மற்றும் 2 டீசல் ) வெளியாகி உள்ளது. இதில் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 வேரியன்ட்களில் வெளியிடப்பட்டுள்ளது. பேஸ், S & SX+. சிறிய 1.4 லிட்டர் டீசல் என்ஜின் கீழே மூன்று வேரியன்ட்களில் வெளியிடப்பட்டுள்ளது. பேஸ், S &S+ . 1.6 லிட்டர் டீசல் டாப் மூன்று வேரியன்ட்களான SX, SX+ மற்றும் SX (O) ஆகிய வேரியன்ட்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஆடோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் 1.6 SX+ வேரியண்டில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

6

பெட்ரோல் க்ரேடா சிறிய தூர பயணங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். நீங்கள் SX+ ட்ரிம்மை தேர்வு செய்யலாம் ஏனென்றால் SX(O) பெட்ரோல் ஆப்ஷனில் இல்லை. அதுவே நீங்கள் அவ்வப்போது வெளி ஊர்களுக்கு பயணம் செய்பவர் என்றால் பின் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்டை தேர்வு செய்யலாம். இது SX+ ட்ரிம்மில் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் அனைத்து அம்சங்களும் நிறைந்த ட்ரிம் வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு 1.6 லிட்டர் டீசல் மேனுவல் எசின் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். எங்களைப் பொறுத்தவரை இந்த ட்ரிம் தான் அனைத்திலும் சிறந்ததாக தோன்றுகிறது. காரணம் , இதில் அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் ,17 அங்குல அல்லாய் சக்கரங்கள் மற்றும் தோலினால் அலங்கரிக்கப்பட்ட இன்டீரியர்ஸ் என்று அனைத்தும் உள்ளது.

தீர்ப்பு


image 23

ஆப் - ரோட் ( சரியான ரோட் இல்லாத பாதைகள் மற்றும் கரடு முரடான சாலைகள் ) பயணம் செய்யும் விருப்பமுள்ளவரா நீங்கள் ? அத்தகைய சாலைகளில் க்ரேடா SUVயை விட AWD வசதி கொண்ட ரெனால்ட் டஸ்டர் சிறப்பாக செயல்படும். அதே சமயம் நீங்கள் பெரும்பாலும் நல்ல சாலைகளில் மட்டுமே உங்கள் SUVயை பயன்படுத்துபவர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு க்ரேடாவை வாங்கலாம். இந்த வாகனத்தை ஒரு ' பெர்பெக்ட் SUV' என்று ஹயுண்டாய் சொல்லுவது சரியானதாக தோன்றவில்லை . காரணம் இந்த க்ரேடாவில் 4WD ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை. எப்படி இருந்தாலும் நகர்புற போக்குவரத்திற்கு உங்களுக்கு ஒரு உற்ற நண்பனாக இந்த க்ரேடா விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.