கியா செல்டோஸுக்கு அடுத்தபடியாக ஆறு ஏர்பேக்குகளுடன் இப்போது இரண்டாவது சிறிய எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா.
published on பிப்ரவரி 03, 2023 02:14 pm by tarun for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 53 Views
- ஒரு கருத்தை எழுதுக
பல செயலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை தரநிலையாக பெறும் இந்த பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி
2023 ஆம் ஆண்டிற்கான அதன் எஸ்யூவி வரம்பை ஹூண்டாய் மேம்படுத்தியுள்ளது. இது க்ரெட்டா, அல்காசர், வென்யு ஆகியவற்றை பாதுகாப்பானதாகவும், வரவிருக்கும் உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கவும் செய்கிறது. பிரீமியமான மேம்படுத்தல்கள் வருவிருக்கின்றன.மேலும் வென்யு பற்றி ஏற்கனவே நமக்கு தகவல் கிடைத்திருந்தாலும், இப்போது க்ரெட்டா மற்றும் அல்காஸர் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நாம் பெற்றுள்ளோம்:
ஹூண்டாய் கிரேட்டா
க்ரெட்டாவில் இப்போது ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் டிஸ்க் பிரேக்குகள், சீட்பெல்ட் உயரம் சரிசெய்தல் மற்றும் ஐஎஸ்ஓஃபிக்ஸ் ஏங்கரேஜ்கள் போன்ற அனைத்து வகைகளிலும் தரநிலை உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரியர் பார்க்கிங் கேமரா, எலக்ட்ரோக்ரோமிக் ஐஆர்விஎம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் போன்ற அம்சங்கள் உயர் வேரியண்ட்களில் கிடைக்கும்.
ஹூண்டாய் க்ரெட்டாவை ஐடில் இன்ஜின் ஸ்டாப் மற்றும் கோ அம்சத்துடன் புதுப்பித்துள்ளது. இது இப்போது பிஎஸ்6 2-இணக்கமான மற்றும் E20 (20 சதவீதம் எத்தனால் கலவை) தயார் இயந்திரங்களைப் பெறுகிறது. காம்பாக்ட் எஸ்யூவி ஆனது 115பிஎஸ் 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் மற்றும் 140பிஎஸ் 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார், மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.
மேம்படுத்தப்பட்ட க்ரெட்டாவின் புதிய விலைகள் ரூ.10.84 லட்சம் முதல் ரூ.19.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.
மேலும் படிக்க: இந்த 20 படங்களில் புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸைப் பாருங்கள்
ஹீண்டாய் அல்கசார்
அல்கஸார் ஆனது இஎஸ்சி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ரியர் டிஸ்க் பிரேக்குகள், எல்இடி ஃபாக் லேம்ப்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவற்றுடன் கூடுதலாக ஆறு ஏர்பேக்குகளைப் பெறுகிறது. உயர் ரகங்களில் ஃப்ரெண்ட் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமராவும் கிடைக்கும்.
அல்காஸரை இயக்கும் 150பிஎஸ் 2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 115பிஎஸ் 1.5-லிட்டர் டீசல் என்ஜின்கள், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் வரவிருக்கும் மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இது மேம்படுத்தப்பட்டுள்ளது. த்ரீ-ரோ எஸ்யூவி இப்போது ரூ.16.10 லட்சத்தில் இருந்து ரூ.21.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை விற்பனை செய்யப்படுகிறது. இது டாடா ஸஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் மஹிந்த்ரா எக்ஸ்யூவி700 போன்றவற்றுக்கு மாற்றாக தொடர்ந்து செயல்படுகிறது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆராவிற்கான ஃபேஸ்லிஃப்ட்கள் கூட தரமானதாக அதிக பாதுகாப்பு கருவியைப் பெறுகின்றன. MY2023க்கான புதுப்பிப்பு நிலுவையில் உள்ள ஹூண்டாய் மாடல்கள் ஐ20 மற்றும் வெர்னா ஆகும், எனவே அவற்றுக்காகவும் காத்திருங்கள்.
மேலும் படிக்கவும்: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை