ஹயுண்டாய் க்ரேடா - இந்தியன் கார் ஆப் தி இயர் - சரியான தீர்ப்பா?

published on டிசம்பர் 28, 2015 02:57 pm by bala subramaniam for ஹூண்டாய் கிரெட்டா 2015-2020

புது டெல்லி :

ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா உண்மையிலேயே ஒரு சிறந்த கார். இந்த கார் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள பேரன்பும் பெரும் காதலும் நாம் அறியாததா என்ன ? கார் வல்லுனர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என்று அனைத்து பிரிவினரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இந்த க்ரேடா கார்களின் தேவையும் புகழும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , ஹயுண்டாய் நிறுவனம் அந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திக்கு முக்காடி போய் உள்ளது என்றே சொல்ல வேண்டும். மேலும் க்ரேடாவின் வெற்றி மகுடத்தின் மேலுமொரு கோஹினூர் வைரமாக இந்தியன் கார் ஆப் தி இயர் 2016 விருது சேர்ந்துள்ளது. ஆனால் இந்த அத்தனை விருதிற்கும் பெருமைக்கும் க்ரேடா தகுதியானது தானா ?

பெரும்பாலான வாகன தொழில் சம்மந்தமான பத்திரிக்கைகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த கார் , சிறந்த பைக் போன்றவைகளை தேர்ந்தெடுப்பார்கள் என்பது நாம் நன்கு அறிந்ததே. ஆனால் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமனதாக ஒரு வாகனத்தை சிறந்த கார் என்று தேர்ந்தெடுப்பது ஒரு விசேஷ நிகழ்வு தானே ?

\

ஹயுண்டாய் நிறுவனம் சிறந்த தரம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை இந்திய வாகன சந்தைக்கு அளித்து வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனம். அழகிய தோற்றத்துடனும் , கையாள்வதற்கு இலகுவாகவும் , பல்வேறு பிரிவுகளிலுள்ள ஹயுண்டாய் கார்கள் அந்தந்த பிரிவுகளில் உள்ள மற்ற கார்களைக் காட்டிலும் அதிகமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதே வரிசையில் ஹயுண்டாய் க்ரேடா கார்களும் இந்த கொரியன் கார் தயாரிப்பாளர்களின் மேலும் ஒரு வெற்றி படைப்பாக அமைந்துள்ளது . இந்த க்ரேடா பெற்றுள்ள அசாதாரண வெற்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்நிறுவன தயாரிப்புக்களுக்கு ICOTY விருதைப் பெற்று தந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளில் முறையே க்ரேண்ட் i10 மற்றும் எளிட் 120 கார்கள் இந்த ICOTY விருதை வென்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹயுண்டாய் இது போன்ற விருதை வெல்வது இது நான்காவது முறையாகும் என்பது மட்டுமல்ல , நான்கு விருதுகளை வென்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையும் ஹயுண்டாய் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

ஜூலை 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை 90,000 கார்கள் ( 16,000 ஏற்றுமதி ஆர்டர்கள் உட்பட ) புக் செய்யப்பட்டுள்ளன. இந்த செய்தி பிரசுரமாகி நீங்கள் வலைத்தளத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என்று ஹயுண்டாய் நம்புகிறது. இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த க்ரேடா கார்கள் பல இலத்தீன் அமெரிக்க , மேற்கு ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்று அடிகோடிட்டு சொல்லபடுவது வெறும் பெருமை பேசிக் கொள்ளும் செயல் மட்டும் அல்ல ,அதை ஒரு முக்கிய சிறப்பம்சமாக எடுத்துக்காட்டுவதற்காகவே சொல்லப்படுகிறது . மேலும் இலத்தீன் NCAP விபத்து சோதனையில் 5ற்கு 4 மதிப்பெண்களை (ஸ்டார்ஸ்) பெற்றுள்ளதில் இருந்து இந்த க்ரேடாவின் கட்டுறுதியையும் , வலுவான வடிவமைப்பு அம்சங்களையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

இப்போதாவது இந்த இந்தியன் கார் ஆப் தி இயர் விருதிற்கு க்ரேடா தேர்ந்தெடுக்கப்பட்டது சரி என்று நினைக்கிறீர்களா ? இல்லையா ? இல்லை என்றால் உடனே அருகில் உள்ள ஹயுண்டாய் டீலர்ஷிப் சென்று ஒரு க்ரேடா வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் செய்யுங்கள் .அதன் பின் உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்

இதையும் படியுங்கள்

ஹூண்டாய் Creta

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் கிரெட்டா 2015-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience