ஹயுண்டாய் க்ரேடா ஆடோமேடிக் கார்களுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள்
published on அக்டோபர் 16, 2015 02:36 pm by அபிஜித் for ஹூண்டாய் கிரெட்டா 2015-2020
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
ஹயுண்டாய் நிறுவனம் தனது முகப்புத்தக பக்கத்தில் 6 மில்லியன் லைக்ஸ்க்கு (likes) மேல் பெற்று விட்டதை தெரிவித்து அதன் மூலம் தங்களது அசாத்தியமான வெற்றியையும் வரவேற்பையும் சூசகமாக பறைசாற்றிக் கொண்டுள்ளது. அதிலும் அறிமுகமானது முதலே ஹயுண்டாய் நிறுவனத்தின் மிகப் பிரபலாமான வாகனமாக வாடிக்கையாளர்களின் மத்தியில் பெயரெடுத்து, மிக பிரமாண்டமாக க்ரேடா உருவெடுத்துள்ளது. க்ரேடா SUVயின் வரவால் இந்த பிரிவில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த ரெனால்ட் டஸ்டர் , போர்ட் ஈகோஸ்போர்ட் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி நிறுவனத்தின் எஸ் -க்ராஸ் கார்கள் நிலைகுலைந்து விற்பனையில் மிகவும் பின்தங்கி உள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் க்ரேடாவின் தானியங்கி (ஆட்டோமேடிக்) வேரியன்ட்கள் மற்ற வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான அளவே விற்பனை ஆகி உள்ளன.மேலும் இந்த வாகனத்தை புக் செய்துவிட்டு காத்திருக்கும் காலமும் சுமார் 6 மாதங்கள் வரை இருப்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.
இப்போது உள்ள சந்தை நிலவரத்தில் , ஆட்டோமாடிக் வேரியன்ட்களும் பிரபலமடைந்து வருகிறது என்றாலும், மேனுவல் மாடல்கள் ஆடோமேடிக் வேரியான்ட்களை விட கணிசமான அளவு விற்றுள்ளன. ஆனாலும் இந்த க்ரேடா கார்கள் தனது மிக அழகான தோற்றத்தாலும், இந்நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு காரிலும் அள்ளித்தரும் ஏராளமான தொழில்நுட்ப சிறபம்சங்களாலும் எதிர்பார்த்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஹயுண்டாய் க்ரேடா மற்றும் i20 கார்களின் விலை உயர்வு, நிறுவனம் தனது முகப்புத்தக பக்கத்தில் 6 மில்லியன் பாலோவேர்ஸ் பெற்றுள்ளது.
கிடைத்துள்ள செய்தியின் படி, பல பகுதிகளில் டீசல் வேரியன்ட்களை விட பெட்ரோல் வரியான்ட்கள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளன. மேலும் நிறைய வாடிக்கையாளர்கள் டாப் எண்ட் (விலை கூடுதலான) வேரியன்ட்களையே தேர்ந்தெடுத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
அதுமட்டுமில்லாமல் க்ரேடா கார்களின் அசாத்திய வளர்ச்சியை சமாளிக்கும் விதத்தில் மாருதி மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் தங்கள் வாகனங்கள் மீது ரூ. 1 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளன. க்ரேடா தனது காம்பேக்ட் SUV பிரிவு கார்களின் வாடிக்கையாளர்களை மட்டும் இல்லாமல் XUV500 மற்றும் ஸ்கார்பியோ வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளது என்றால் க்ரேடாவின் வெற்றி எத்தகைய அசாதரணமானது என்பது நமக்கு நன்கு விளங்கும்.
மேலும் படியுங்கள்: தயாரிப்பு குறைபாடு காரணமாக 4,70, 000 சொனாட்டா கார்களை ஹயுண்டாய் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
போட்டியை அறிந்துக்கொள்ள : மாருதி எஸ் - க்ராஸ்| ரெனால்ட் டஸ்டர்| போர்ட் ஈகோஸ்போர்ட்