2020 ஹூண்டாய் கிரெட்டாவின் உட்புற வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டது
published on மார்ச் 05, 2020 12:59 pm by sonny for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச பட்டியலுடன் அதிக விலை கூடுதலான உட்புற அமைப்பைக் கொண்டுள்ளது
-
புதிய கிரெட்டாவின் உட்புறத்தின் முகப்புப் பக்க கட்டுப்பாட்டு மையம் முழுவதும் புதிய தளவமைப்புகளுடன் இரண்டு-தொனி உட்புறத்தைப் பெறுகிறது.
-
இது புதிய காற்றோட்ட அமைப்புகள் மற்றும் 10.25 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்புடன் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்திற்கான இஎஸ்ஐஎம் உடன் இருக்கிறது.
-
2020 ஹூண்டாய் கிரெட்டாவில் ஸ்போர்ட்டியர் திசை திருப்பி மற்றும் அரை டிஜிட்டல் கருவித் தொகுப்புக்கான 7 அங்குல டிஜிட்டல் திரை உள்ளது.
-
கூடுதலாக இதில் அழகான சூரிய ஒளி திறப்பு மேற்கூரை, ஓட்டுநர் முறைகள் மற்றும் நடுவில் இருக்கும் கை வைக்கும் இடத்தில் காற்று சுத்திகரிப்பு ஆகியவை இருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனம் இந்த புதிய கிரெட்டாவிற்கு ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 16 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் மார்ச் 17 ஆம் தேதி இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதன் வெளிப்புற அமைப்பு மட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது, தற்போது உட்புற அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டது. உளவு காட்சிகள் மற்றும் விளம்பர வரைபடத்தின் படி, கிரெட்டா ஒரு புதிய உட்புற தளவமைப்பைப் பெறுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டாவின் சிறந்த-தரவமைப்பு பதிப்பிற்காக இரட்டை-தொனி கருப்பு மற்றும் கிரீம் நிற உட்கட்டமைப்பு கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. இது புதிய 10.25-அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பை உட்புறத்தின் மையத்தில் இருக்கிறது, தற்போது மைய குளிர்சாதன வசதி கொண்ட காற்றோட்ட அமைப்புகள் அதற்கு மேலே வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒளிபரப்பு அமைப்பு இப்போது ஹூண்டாயின் ப்ளூலிங்க் இணைக்கப்பட்ட கார் அம்சங்களுக்கான ஒரு இஎஸ்ஐஎம் ஐ பெறுகிறது. இதில் ஸ்போர்ட்டியர் திசை திருப்பி கூட உள்ளது, அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தானியங்கி வகைகளில் ஆற்றல் மிக்க படல் ஷிஃப்டர்கள் கிடைக்கும், இது ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும். மற்ற சிறப்பம்சங்களைப் பொறுத்தவரையில் புதிய அரை டிஜிட்டல் கருவி தொகுப்பு, அனலாக் டயல்களால் சூழப்பட்ட 7 அங்குல திரை ஆகியவை இருக்கிறது.
திருத்தப்பட்ட உட்புற தளவமைப்பு மத்திய திரையானது நடுவில் இருக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்குள் தடையின்றி செல்ல அனுமதிக்கிறது, இது காலநிலைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது, மற்ற உட்புற அமைப்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் நவீனமானது. மத்திய கட்டுப்பாட்டின் கீழே கம்பி இல்லா தொலைப்பேசி மின்னேற்றி, பல மின்னேற்றம் செய்யும் போர்ட்கள், ஓட்டும் முறையைத் தேர்வு செய்யும் டயல் மற்றும் மின்னணு தடுத்து நிறுத்தும் கருவி போன்ற அம்சங்கள் உள்ளன. கியா செல்டோஸில் வழங்கப்படுவதைப் போலவே, ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டாவை ஒரு தானியங்கி காற்று சுத்திகரிக்கும் கருவியுடன் மத்தியில் இருக்கும் கை வைக்கும் இடத்தில் ஆர்ம்ரெஸ்டில் ஒருங்கிணைத்துள்ளது.
2020 கிரெட்டாவில் காற்றோட்டமான முன் புற இருக்கைகள் மற்றும் ஆற்றல் மிக்க சரிசெய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை போன்ற அம்சங்களைத் தொடர்ந்து வழங்குகிறது. புதிய கிரெட்டாவின் பின்புற இருக்கைகளில் நடுவில் அமர்பவர்களுக்கான தலை வைக்கும் இடங்கள் கிடையாது, ஆனால் இது மற்ற இருக்கைகளில் அமர்பவர்களுக்கு தலைவைக்கும் மெத்தைகளை வழங்குகிறது. இது கப்ஹோல்டர்களுடன் மடிக்கக்கூடிய பின்புற கை வைக்கும் இடங்களைப் பெறுகிறது. புதிய இருக்கை அமைப்பானது கருப்பு-கிரீம் நிற உட்புற கருப்பொருளுக்கும் பொருந்துகிறது. 2020 கிரெட்டா, அழகான சூரிய ஒளி மேற்கூரை மற்றும் ப்ளூலிங்க் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்திற்கான விசைகளுடன் புதிய ஐஆர்விஎம் ஆகியவை இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் 2020 கிரெட்டாவை இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய ஐந்து வகைகளில் வழங்கும். புதிய கிரெட்டாவிற்கான முன்பதிவு இப்போது தொடங்கி இருக்கிறது, இது வகை வாரியான ஆற்றல் இயக்கி விருப்பங்களை உறுதிப்படுத்துகிறது. கியா செல்டோஸுடன் பகிரப்பட்ட மூன்று இயந்திரங்களின் விருப்பத் தேர்வுடன் இது கிடைக்கிறது: 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் அலகுகள் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் ஆகியவை ஆகும். 1.5 லிட்டர் இயந்திரங்கள் 6-வேகக் கைமுறையுடன் பொருத்தப்பட்டுள்ளன, பெட்ரோல் இயந்திரம் ஒரு சிவிடி தானியங்கி தேர்வையும், டீசல் 6 வேக முறுக்கு விசை மாற்றி தானியங்கி செலுத்தும் விருப்பத்தையும் பெறுகிறது. இதற்கிடையில், டர்போ-பெட்ரோல் 7 வேக டிசிடி தானியங்கி மூலம் மட்டுமே வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்: 2020 ஹூண்டாய் கிரெட்டா வகை வாரியான இயந்திர விருப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது
புதிய கிரெட்டாவின் விலை ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 16 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதும், இது கியா செல்டோஸ், நிசான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டூர் மற்றும் டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டரின் சில வகைகளுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: கிரெட்டா டீசல்
0 out of 0 found this helpful