N 2025 விஷன் GT தொழில்நுட்பத்தை வெளியிட ஹூண்டாய் தயார்: முதல் படங்கள் (டீஸர்) வெளியீடு
published on ஆகஸ்ட் 28, 2015 03:46 pm by nabeel
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
அடுத்து நடக்க உள்ள பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் தனது துணை பிராண்ட்டான ‘N’-னை காட்சிக்கு வைக்க, ஹூண்டாய் நிறுவனம் தயாராக உள்ளது. தற்போது வோல்டு ரேலி சாம்பியன்ஷிப்பில் பயன்படுத்தப்படும் இந்த ‘N’ பிராண்ட், ஹூண்டாயின் எதிர்கால உயர்-செயல்திறன் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் இது காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
N 2025 விஷன் கிரான் டுரிஸ்மோ தொழில்நுட்பத்தின் சில புத்திசாலித்தனமான படங்களை, தனது வாடியாளர்களுக்கு முதல் படமாக (டீஸர்) வெளியிட்டுள்ள ஹூண்டாய் நிறுவனம், “இதில் ரேய்ஸ் கார் டிசைன் மற்றும் நிலையான தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் (ஹைய்லைட்ஸ் சஸ்டெயினபிள் டெக்னாலஜி), இது உண்மையில் ஹூண்டாய் N-னின் எதிர்கால ஆற்றல் வளத்தை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. இதில் நிலையான நிகழ்தகவு என்ற வார்த்தை பயன்படுத்தி இருப்பதன் மூலம், சில மாற்று எரிபொருள் பயன்பாடு அல்லது ஹைபிரிட் தொழில்நுட்பம் மூலம் இந்த காரை இயக்க செய்யலாம் என்பது புரிகிறது. ஹூண்டாய் N 2025 விஷன் கிரான் டுரிஸ்மோ தொழில்நுட்பத்தை, டுரிஸ்மோ ரேய்ஸிங் கேம் சீரிஸில் உள்ள பிளேஸ்டேஷன் கிரானில் பெறலாம். இந்த காரில் ஏரோடைனாமிக் பாடி டிசைன் உடன் ஆங்குலார் லேம்ப்கள் மற்றும் முன்புறம் ஹூண்டாய் லோகோ ஆகியவற்றைக் கொண்டு எதிர்காலத்திற்கு ஏற்றதாக காட்சியளிக்கிறது. கார் ஒரு திரைசீலையினால் மூடிய நிலையில் இருந்தாலும், இதை எதிர்காலத்தில் இருந்து எடுத்து வந்தது போல காட்சி அளிக்கிறது.
2025 விஷன் கிரான் டுரிஸ்மோவின் பக்க பகுதியில் இருந்து பார்த்தால், தென் கொரியன் தயாரிப்பாளரான அந்நிறுவனம், இதற்கு எடை குறைந்த வலுப்படுத்திய கார்பன்-ஃபைபர், மிட்-என்ஜின், 2.0-லிட்டர்-300ps RM15 ரேலி தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது. இதை முதல் முதலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த சீயோல் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம், அடுத்த ஆண்டின் வோல்டு ரேலி சாம்பியன்ஷிப்பில் களமிறங்கும் வகையில், ஹூண்டாயின் அடுத்த-தலைமுறைக்கு முன்மாதிரியாக அமையும் i20 ஹேட்ச்பேக் அடிப்படையிலான ரேலி காரை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ரேலே மவுண்டி கார்லோவில் நடைபெற உள்ள FIA வோல்டு ரேலி சாம்பியன்ஷிப்பிற்கு ஏற்ற காராக விளங்கும் வகையில், இந்த காரை தற்போது கடும் சோதனைகளுக்கு உட்படுத்தி வருவதாக, ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
0 out of 0 found this helpful