ஹோண்டா நிறுவனம்: 10 -வது தலைமுறை சிவிக் செடான் காரை அறிமுகம் செய்தது
published on செப் 18, 2015 05:21 pm by raunak for ஹோண்டா சிவிக்
- 11 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா நிறுவனம், தனது சிவிக் காரின் 10 -வது தலைமுறையை வட அமெரிக்காவில் வெளியிட்டது. இது, அமெரிக்கர்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 2016 சிவிக் செடான் கார், ஒரு புதிய தொழில்நுட்பத்தில் தயாராகிறது. அதாவது, இதன் மேற்கூரை நளினமாக கீழ் நோக்கி சரியும் ஃபாஸ்ட் பேக் வடிவமைப்பில் வருகிறது. மேலும், இதன் உருவ வடிவமைப்பு கூபே, Si மாடல், 5 கதவுகளைக் கொண்ட சிறிய ஹாட்ச் பேக் ரகம் மற்றும் அமெரிக்க சந்தையில் முதல் முறையாக வந்த சிவிக் டைப்-R மாடல் போன்ற பல் வேறு விதங்களில் வருகிறது. இந்த வாகனம், இந்த வருட இறுதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் இந்திய அறிமுகம் பற்றி பேசுகையில், ஹோண்டா நிறுவனம் சிவிக் செடானை மீண்டும் அறிமுகப்படுத்த இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறது. எனினும், இந்த வருடத்தின் முதலில், ராஜஸ்தானில் உள்ள ஹோண்டாவின் டபுகரா ஆலையில், 9 -வது தலைமுறை சிவிக் காரை நாம் உளவு பார்த்தோம். இந்தியாவில் சிவிக் காரை அறிமுகப்படுத்த பச்சை கொடி காட்டப்பட்டு விட்டால், நாம் 10 -வது தலைமுறை சிவிக் செடான் காரை, இன்னும் இரண்டு வருடத்தில் உறுதியாக பெறுவோம்.
முதலில், இதன் இஞ்ஜினில் இருந்து ஆரம்பிப்போம். உலகளவில், இது 2.0 லிட்டர், 16 வால்வு, நேரடியாக இஞ்செக்ட் செய்யப்பட்ட DOHC i-VTEC 4 சிலிண்டர் மோட்டார் மற்றும் டர்போ சார்ஜ்ட் இன்லைன்-4 1.5 லிட்டர் i- VTEC மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இஞ்ஜின்கள் 6 வேக ஆளியக்கி பெட்டி அல்லது தொடர்ந்து மாறுபட்டு கொண்டிருக்கும் தானியங்கி ட்ரான்ஸ்மிஷனுடன் (CVT) இணைக்கப்பட்டிருக்கின்றன. (1.5 லிட்டர் i- VTEC மோட்டார் தனிச்சிறப்பான CVT –யுடன் மட்டுமே வரும்)
அடுத்ததாக, வடிவமைப்பின் அடிப்படையில் பார்க்கும் போது, இதற்கு முன்பு வந்த சிவிக் தலைமுறைகளைப் போல இல்லாமல், 2015 சிவிக் புது விதமாக மேற்கூரை நளினமாக கீழ் நோக்கி சரியும் ஃபாஸ்ட் பேக் வடிவமைப்பில் உள்ள பின்புறத்தைக் கொண்டுள்ளது. இந்த கார், இதற்கு முந்தைய மாடலின் அகலத்தை விட சுமார் 2 அங்குலம் அதிகமாக மற்றும் அதன் சக்கர அகலத்தை விட 1 அங்குலம் குறைவாக, 1.2 அங்குலத்தில் வருகிறது. கவர்ச்சியான ஃபாஸ்ட் பாக் பின்புறத்தை தவிர, முன்புறத்தில் பந்தைய காரைப் போல நீண்டு, அருமையாக செதுக்கப்பட்டு உள்ளது. மேலும், இதன் முன்புற விளக்குகளில் காலையிலும் எரியும் LED பொருத்தப்பட்டுள்ளன. பின்புற விளக்குகளோ, C வடிவத்தில் அனைவரையும் கவர்கின்றன. இதன் உட்புறத்தில், ஆப்பிள் CarPlay மற்றும் ஆண்ட்ராய்ட் Auto ஆகியவற்றோடு இணைக்கக் கூடிய 7 அங்குல HD தொடு திரை இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் அடி பாகத்தில் உள்ள அமைப்புகளைப் பார்க்கும் போது, தாராளமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ள அதிவலிமையான எஃகு மூலம், இந்த கார் சுமார் 25 சதவிகிதம் அதிகமான உறுதியைப் பெறுகிறது, என்று ஹோண்டா பறை சாற்றுகிறது. இந்த வாகனம், கிட்டத்தட்ட 30 கிலோ குறைவாக இருப்பதாலும், புதிய பாடி-சீல் செய்யும் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும், இதன் காற்று கசிவு அளவு கிட்டத்தட்ட 58 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று, இந்த நிறுவனம் உறுதி கூறுகிறது. இதன் மூலம், அதிக சத்தம், அதிக அதிர்வு மற்றும் சீரற்றதன்மை, ஆகியவை பயணத்தின் போது குறைக்கப்படுகின்றன.
0 out of 0 found this helpful