இன்று வெளியாகும் ஹோண்டா BR-V-ன் படங்கள் முன்னதாகவே கசிந்தது

published on ஆகஸ்ட் 20, 2015 11:34 am by raunak for ஹோண்டா பிஆர்-வி

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தற்போது நடந்து வரும் காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில் (GIIAS) 2015 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருந்த ஹோண்டாவின் அடுத்த SUV தயாரிப்பான BR-V யின் படங்கள், இணையதளத்தில் கசிந்துள்ளன. ஜப்பான் வாகன தயாரிப்பாளரான ஹோண்டா, இதை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. இந்தியாவில் அதன் அறிமுகம் குறித்து கேட்டதற்கு, ஹோண்டா தரப்பில் எந்த பதிலும் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், அது வெளியிடப்படலாம் என்று தோன்றுகிறது.

வாகனத்தின் ஸ்டைலை பொறுத்த வரை, கடந்த ஜூன் மாதத்தில் அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மாதிரிப் படத்துடன், தயாரிப்பு பதிப்பு மிக சரியாக ஒத்து போகிறது. இதன்மூலம் BR-V (ஃபோல்டு ரன் ஏஃபோவ்ட் வெஹிக்கிள்) ஹோண்டா பிரியோ-வின் பிளாட்பாரத்தில் இடம்பெற்று, அமேஸ் மற்றும் மொபிலியோ ஆகியவற்றை ஒத்து காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஹோண்டா தரப்பில் எந்த உத்தரவாதமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில உளவு படங்களை பார்த்த போது, இந்த வாகனத்தில் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், ஹோண்டாவின் சிறப்பான H கிரோம் கிரில் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. மொபிலியோவின் கதவில் உள்ள ஒழுங்கான முறுக்கு (கின்க்) போலவோ அல்லது அதே அமைப்பு கூட இதன் கதவிலும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. பின்புற கேபினின் படங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், மொபிலியோ அல்லது அமேஸை போல இல்லாமல், தரமான புதிய பின்புற கேபின் அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஜின் தேர்வுகளை பொறுத்த வரை, அதிகாரப்பூர்வமான மாதிரிப் படங்களை வெளியிட்ட போதே ஹோண்டா நிறுவனம் கூறியது போல, சிட்டி / மொபிலியோவை போல BR-V யும் 1.5-லிட்டர் i-VTEC மோட்டார் மூலம் இயங்கும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையை பொறுத்த வரை, 1.5-லிட்டர் i-DTEC மற்றும் 1.5-லிட்டர் i-VTEC பெட்ரோல் ஆகியவை வழங்க வேண்டியுள்ளது. தொழில்நுட்ப அடிப்படையில், மொபிலியோவை போன்ற என்ஜின் தேர்வுகளே வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிட்டியில் இருப்பது போன்ற ஆட்டோமேட்டிக் தேர்வையும் ஹோண்டா, இதற்கு வழங்க வாய்ப்புள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹோண்டா பிஆர்-வி

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience