ஹோண்டா BR – V வண்ண விவரங்கள் வெளியிடப்பட்டது
ஹோண்டா பிஆர்-வி க்காக அக்டோபர் 12, 2015 10:44 am அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- 4 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
இந்தோனேசிய வாகன சந்தைக்கான BR – V காம்பாக்ட் க்ராஸ்ஓவர் மாடலின் கலர் விவரங்களை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கார் ஆறு விதமான கவர்ச்சிகரமான வண்ணங்களில் வலம் வரவுள்ளது. இதன் கலர் பட்டியலில் லூனார் சில்வர் மெட்டாலிக், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக், கிரிஸ்டல் பிளாக் பியர்ல், மிஷ்டி க்ரீன் பியர்ல், மற்றும் பேஷன் ரெட் பியர்ல் ஆகியன அடங்கும். புதிய BR-V மாடலுக்கான சில்வர், பச்சை, மற்றும் சிகப்பு நிறங்கள் ஹோண்டா நிறுவன தயாரிப்புகளுக்கு புது ரத்தம் பாய்ச்சும். மேலும் ஹுண்டாய் கிரேட்டாவுடன் போட்டியிட, இந்த கார் 16 அங்குல அலாய் சக்கரங்களுடன் சந்தையில் அடிஎடுத்து வைக்கவுள்ளது.
சமீபத்தில், இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட தரமான 1.6 லிட்டர் i-DTEC மோட்டார் பொருத்தப்பட்டு, ஹோண்டா BR-V கார் இயக்கபடும் என்று தெரிகிறது. இதே இஞ்ஜின் திறன் பொருத்தபட்ட கார் ஐரோப்பாவில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த இஞ்ஜின் 120PS மற்றும் 300NM திறன் கொடுக்கும் வல்லமையுடன் உள்ளது. இந்த இஞ்ஜின் தவிர, ஹோண்டா சிட்டி மாடலில் பொருத்தப்பட்ட 1.5 லிட்டர் i- VTEC மோட்டார் இந்த காரிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 1.5 லிட்டர் i- VTEC இஞ்ஜின், 120PS@ 6600rpm மற்றும் அதிகபட்சமாக 145NM @4600 rpm திறனை உற்பத்தி செய்யக்கூடியது. இந்த இஞ்ஜின்கள், CVT அல்லது 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அம்ஸத்துடன் இணைந்து வரும்.
இதன் இந்தோனேசிய் விலை முக்கிய குறிப்பாக இருக்குமேயானால் இக்காரின் விலை ரூ11 லட்சத்திற்கும் குறைவாகவே, உதாரணமாக ரூ.10.80 முதல் 12.40 லட்சத்திற்குள்ளாகவே நிர்ணயம் செய்யப்படும். இந்த கார் 4455 மிமீ நீளம், 1735 மிமீ அகலம், 1650 மிமீ உயரம், 2660 மிமீ சக்கர இடைவெளியுடன் 200 mm தரை இடைவெளியுடன் (கிரவுண்ட் க்ளியரன்ஸ்) இருக்கிறது. இந்த கார் தயாரிப்பாளர்கள், ராஜஸ்தானில் டாபுகாரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் 2016 ஏப்ரல் மாதத்தில் BR-V கார் தயாரிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க:
ஹோண்டா BR –V: இந்தோனேசியாவில் ஹோண்டா BR-V அறிமுகம் – விரைவில் இந்தியாவில் வெளிவரும்.
இந்தோனேஷியாவில் ஹோண்டா BR –V சிறப்பம்ஸங்கள் வெளியீடு - விரைவில் இந்தியாவில் வெளிவரும்.
நாளை வெளிவர உள்ள ஹோண்டா BR-V -இன் விவரங்கள் இன்றே வெளியானது
ஹோண்டாவின் அதிக விற்பனையாகும் மாடல்: ஹோண்டா அமெஸ் விற்பனை விவரங்கள் வெளியீடு