2016 ஆட்டோ எக்ஸ்போவில் ASIMO ஹியூமனாயிடு ரோபோ: நிஹால் என்னும் சிறுவனை சந்தித்தது
published on பிப்ரவரி 08, 2016 10:23 am by nabeel
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், தனது மனித உருக்கொண்ட ரோபோவான ASIMO (அட்வான்ஸ்டு ஸ்டெப் இன் இன்னொவேட்டிவ் மொபிலிட்டி) ஹியூமனாய்டை, பிரோகேரியா என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிஹால் என்னும் 14 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கக் கொண்டு வந்தது. கண்காட்சியில், நிஹால் மற்றும் அவனது குடும்பத்தினரையும் ASIMO வரவேற்றது, பின்னர், ‘இந்தியா வாலே...’ என்ற பிரபலமான இந்தி பாடலுக்கு அவர்களுடன் நடனம் ஆடியது. நிஹாலின் சிறப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ASIMO, 6 வருடங்கள் கழித்து இந்தியாவிற்கு வந்துள்ளது. ASIMO- வைப் பார்த்ததும் பரவசமான நிஹால், அதனுடன் பேசிவிட்டு, “எனக்கு மிகவும் பிடித்த ரோபோவை சந்திக்க முடிந்ததை என் வாழ்நாளில் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாக நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். அது, என்னுடனும், என் குடும்பத்தாருடனும் நேரம் செலவளித்தது ஆச்சரியமாக இருக்கிறது. எனது வாழ்க்கையில், இத்தகைய பொன்னான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்த ஹோண்டா நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கனவு நனவானது,” என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. காட்சுஷி இனோயே, “ASIMO ரோபோவைச் சந்திக்க வேண்டும் என்ற நிஹாலின் ஆசையை நிறைவேற்றி வைத்தத்தில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ASIMO –வைப் பார்த்த போது நிஹாலின் முகத்தில் ஏற்பட்ட பரவசத்தைப் பார்க்கும் போது, எங்களின் முயற்சிக்கு முழு பலன் கிடைத்து விட்டதைப் போல இருந்தது. இந்த நிகழ்ச்சி, நிஹாலுக்கு ஒரு தன்னிகரில்லாத விலைமதிப்பற்ற அனுபவமாக இருந்ததைப் போலவே, எங்களுக்கும் விலைமதிப்பற்றதாக இருந்தது,” என்று ஆர்வத்துடன் கூறினார்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில், அனைவரும் வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த BR-V காரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டது. BR-V காரை பயன்பாட்டு க்ராஸ்ஓவர் கார் என்று இந்நிறுவனம் குறிப்பிட்டாலும், 7 நபர்கள் அமர்ந்து செல்லக் கூடிய MPV காம்பாக்ட் SUV பிரிவில் உள்ள கிரேட்டா மற்றும் டஸ்டர் கார்களுடன் போட்டியிடும். பிப்ரவரி 5 -ஆம் தேதி முதல் 9 –ஆம் தேதி வரை க்ரேட்டர் நொய்டாவில் நடைபெறும் 2016 ஆட்டோ எக்ஸ்போ வளாகத்தில் உள்ள 9 –ஆம் எண் அரங்கத்தில், ஹோண்டா நிறுவனத்தின் ஏனைய தயாரிப்புகளைக் கண்டு மகிழலாம்.
மேலும் வாசிக்க : ஹோண்டா ப்ராஜெக்ட் 2&4 கேலரி: ஹோண்டா ப்ராஜெக்ட் கார் ஒரு முன்னோட்டம்
0 out of 0 found this helpful