தள்ளுபடி விலையின் கெடு முடிவதற்குள் மாருதி கார்களை வாங்குங்கள்: விலை உயருகிறது எச்சரிக்கை!
published on டிசம்பர் 14, 2015 09:39 am by manish
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: வரும் 2016 ஜனவரி மாதத்தில் இருந்து, தனது தயாரிப்பு வரிசையில் உள்ள கார்களின் மீது ரூ.20,000 விலை உயர்வை அமல்படுத்தப் போவதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளதால், இந்த புத்தாண்டு நாம் எதிர்பார்ப்பது போல மகிழ்ச்சிகரமானதாக அமையாது என்ற நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க டாலர்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதை ஈடுசெய்யும் வகையிலும், பணவீக்கத்தில் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முடியும் முன், சாத்தியப்படும் வாடிக்கையாளர்களை தாங்கள் வாங்க விரும்பும் காரை விரைவில் வாங்கும் முடிவை எடுக்க உற்சாகப்படுத்தவும், டீலர்களிடம் இருக்கும் பழைய இருப்புகளை காலி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையவும், இந்நிறுவனம் இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இது குறித்து மாருதி சுசுகி இந்தியாவின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்படுவதால் செலவுகள் அதிகரிப்பதாலும், நிர்வாக பெருக்கம் மற்றும் இதர செலவுகள் போன்ற காரணங்களால், இந்த விலை உயர்வு கட்டாயமான ஒன்றாகிவிட்டது” என்றார்.
இதனால் ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்ன?
இப்போது நீங்கள் ஒரு காரை வாங்கினால், அதை ரூ.20,000 தள்ளுபடியோடு வாங்க முடியும். ஆனால் இந்த ஆண்டு முடிவதற்கு ஒரே ஒரு மாதம் மட்டுமே இருந்தாலும் கூட, அந்த காரை 2015 மாடல் என்றே பதிவு செய்ய முடியும்.
காத்திருப்பு காலம் இல்லாத கார்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி விலை பொருந்தும் என்பதால், நீங்கள் காரை இப்போது வாங்கிவிட்டு, அது உங்களுக்கு அடுத்தாண்டு விநியோகிக்கப்பட்டாலும், அப்போது ரூ.20,000 அதிகமாகவே அளித்து அதை வாங்க வேண்டிய நிலை உருவாகும். இதன்மூலம் காருக்கு 2016 ஆம் ஆண்டு ரெஜிஸ்ட்ரேஷன் கிடைக்கும் என்பதை தவிர, விலை உயர்வில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த நடவடிக்கையை பார்த்தால், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான ஹூண்டாயின் பாதச்சுவடுகளை, இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் பின்பற்றுவது போல தெரிகிறது. ஏனெனில் தனது வாகனங்களின் விலையை அதிகரிக்கப் போவதாக, அந்த கொரியன் வாகன தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதேபோல BMW, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் டொயோட்டா ஆகிய வாகனத் தயாரிப்பாளர்களும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்