மு ழு வசதிகளை உள்ளடக்கிய கியா செல்டோஸ் GT லைன் டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோமாடிக் வண்டிகளின் விலைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
published on செப் 03, 2019 03:30 pm by raunak for க்யா Seltos 2019-2023
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தாலும் செல்டோஸின் உண்மையான முதல்தர லைன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டொமாடிக் வகைகளின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
கியா செல்டொஸ் இரு வகை வடிவமைப்பில் கிடைக்கிறது: டெக் லைன் மற்றும் GT லைன்.
-
செல்டோஸின் GT லைன் ஆனது டெக் லைன் வாகனங்களைக் காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.
-
டெக் லைன் மற்றும் GT லைன் இரண்டும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டுள்ளது.
-
ஆயினும் இரண்டு வகைகளும் வெவ்வேறு பெட்ரோல் எஞ்சின் மாதிரிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பைக் கொண்டுள்ளன.
-
டெக் லைன் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரையும் GT லைன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரையும கொண்டுள்ளன.
-
GT லைன் டீசல் வகை ஆட்டோமாடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது.
-
கியா செல்டோஸ் ரூ. 9.69 லட்சம் முதல் ரூ. 15.99 லட்சம் வரை (ஷோரூம் வரையரைக்குள்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
தனது உயர்தர GT லைன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோமாடிக் வகைகளுக்கு கியா இன்னும் விலைகளை அறிவிக்கவில்லை.
இந்தியாவில் தனது செல்டோஸ்,விற்பனையை ரூ.9.69 லட்சம் முதல் ரூ. 15.99 லட்சம் வரை (இந்திய ஷோரூம் வரையறைக்குள்) அறிமுக விலையில் கியா துவக்கியுள்ளது. ஆனால் இன்னும் இரு வகைகளுக்கு விலை அறிவிக்கப்படவில்லை. அவை என்னென்ன? இனிக் காண்போம்.
TECH லைன் (ஆரஞ்சு) மற்றும் GT லைன் (வெண்மை) ஆகிய இரு வடிவமைப்பில் 18 வெவ்வேறு பவர் ட்ரெயின் தேர்வு செய்யும் வாய்ப்புகளுடன் கியா செல்டோஸை அளிக்கிறது. HTE, HTK, HTK+, HTX மற்றம் HTX+ ஆகிய வகைகளை டெக் லைன் உள்ளடக்கியுள்ளது. மற்றொரு புறம் GT லைன், GTK, GTX மற்றும் GTX+ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது.
-
2019 கியா செல்டோஸ் முதல் ஓட்ட விமர்சனம்: டீசல் மற்றும் பெட்ரோல்
செல்டோஸின் டெக் லைன் மற்றும் GT லைன் ரகங்கள் இரண்டும் பொதுவான 1.5 லிட்டர் டீசல் மோட்டார் பயன்படுத்துகின்றன. எனினும் பெட்ரோல் ரகங்கள் மாறுபடுகின்றன. டெக் லைன் இயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் பயன்படுத்தும் 1.5 லிட்டர் மோட்டாரையும் GT லைன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரையும் கொண்டுள்ளன.
மூன்று எஞ்ஜின்களும் வெவ்வேறு தானியங்கி ட்ரான்ஸ்மிஷன்களையும் பெற்றுள்ளன. டீசல் எஞ்ஜின் 6 வேகங்களுடன் கூடிய டார்க் கன்வர்ட்டருடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் CVTயைப் பெறுகிற்து. மற்றொருபுறம் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 7 வேகங்களுடன் கூடிய இரட்டைக் க்ளட்ச் ஆட்டோமாடிக் இணைப்பைப் பெற்றுள்ளது.
தனது உயர்தர லைன் முதலிடதில் இருக்கும் GTX+1.4 லிட்டர் டி.ஸி.டி மற்றும் ஆட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை கியா வெளியிடவில்லை. தற்போது மிக அதிக வசதிகளை உடைய 1.4 லிட்டர் என்ஜின் மற்றும் கைகளால் இயக்கப்படும் GTX+ லைன் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. கியா அவற்றின் விலைகளை வெளியிடாத போதிலும் விற்பனைப் பிரதிநிதிகள் முன்பதிவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். GT லைன் லைன் அறிமுக விலைகளை இனிக் காணலாம்.
GT லைன் |
பெட்ரோல் |
டீசல் |
GTK |
ரூ 13.49 லட்சம் |
|
GTX |
ரூ 14.99 லட்சம் / ரூ 15.99 லட்சம் DCT |
|
GTX+ |
ரூ 15.99 லட்சம் / பெட்ரோல் DCT* |
டீசல் AT* |
* விலைகள் பின்னர் அறிவிக்கப்படும்
வரும் வாரங்களில் கியா இந்த வகைகளை அறிமுகப் படுத்தும் என எதிர்பாரக்கப்படுகிறது. இரண்டு வகைகளுமே கிட்டத்தட்ட ஒரே அறிமுக விலையான ரூ. 16.99 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த உயர் லைன் நிலை வகைகள் பிற போட்டி SUVக்களை விட மேலும்அதிக விலையுடையதாக இருக்கும். ரூ.15.67 லட்சம் (டெல்லி ஷோரூம் வரையரைக்குள்) விற்பனையாகும் க்ரெட்டாவின் மிக அதிக விலையுடைய வகையை விட இது அதிகமாகும்.
GTX+ இன் டீசல் வண்டிகள், இவற்றிற்கு இணையான பவர் ட்ரெயின் அம்சங்களில்லாத MG ஹெக்டர், டாடா ஹாரியர் போன்ற நடுத்தர லைன் SUVக்களுடன் போட்டியிட வல்லது. இதற்கிடையே செல்டோஸின் உயர்தர லைன் பெட்ரோல் ஆட்டோமாடிக் வண்டிகள் தற்போது ரூ. 16.78 லட்சம் (இந்திய ஷோரூம் வரையறைக்குள்) விலையுடைய ஹெக்டரின் உயர்தர லைன் வண்டிகளுக்கு நேரடிப் போட்டியாக இருக்கும்.
எனினும் நீங்கள் 2020 ற்குள் ஒரு புதிய கியாவை வாங்க முடியும். தற்போது ஒரு MG SUVயை வாங்கினீர்களானால் அது இயலாது.
மேலும் படியுங்கள்: கியா செல்டோஸின் சாலை விலை விவரம்