ஃபோர்ட் நிறுவனத்தின் ராலீ இன்ஸ்பயர்ட் ஃபோகஸ் ST கார்கள் : SEMA –வில் காட்சிக்கு வைக்கப்படும்
published on நவ 02, 2015 02:19 pm by அபிஜித்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
லாஸ் வேகாஸில், நவம்பர் 3 – ஆம் தேதி முதல் 9 –ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, ஆண்டு தோறும் நடக்கும் SEMA கண்காட்சியில், ஃபோர்ட் மோட்டார் நிறுவனம், ராலீயில் உள்ள கார்களைப் போன்ற வடிவத்திலும், அருமையான தரத்திலும் உருவான, தனது ஃபோகஸ் ST காரை காட்சிக்கு வைக்க உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காருடன், ஃபோர்ட்டின் தயாரிப்பில் ஏற்கனவே வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் சில பிரபலமான கார்களும் இடம்பெறக் காத்துக்கொண்டிருக்கின்றன. அவை, கஸ்டமைஸ் மற்றும் ட்வீக் செய்யப்பட முஸ்டாங்கள், F-150 பிக்அப் டிரக், பியேஸ்டா ST-க்கள் மற்றும் ஃபோர்ட்டின் செயல்திறன் மிக்க பிரிவுகளில் உள்ள பலவிதமான கார்களும் காட்சிப்படுத்தப்படும்.
தனிச்சிறப்புடைய ஃபோகஸ் ST கார் ஆர்ப்பாட்டமான ஸ்டைலில் வருகிறது. வெள்ளை வண்ணத்தில் வரும் இந்த காரின் சில இடங்கள் தனித்து தெரிவதற்காக, ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் ஹைலைட் செய்யபட்டுள்ளன. கூர்மையாக உள்ள முன்புறத்தில், கீழே உள்ள நேர்த்தியான லிப் ஸ்ப்லிட்டர் மற்றும் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் உள்ள ஸ்பாய்லர்கள், இதன் மிடுக்கை பறைசாற்றுகின்றன. இதன் முன்புற கிரில்லில், மஹிந்த்ரா தார்களில் வருவதைப் போல, LED பார் லைட் பொருத்தப்பட்டுள்ளது. நிட்டோ NT555 டயர்கள் பொருத்தப்பட்ட, பெரிய 19 இன்ச் கிராஃபைட் ஃபினிஷ் சக்கரங்கள் மீது இந்த கார் பவனி வரும்.
ஃபோர்ட் ST காரின் உள்ளே சென்று பார்த்தால், மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த பந்தய கார்களில் வரும் பக்கெட் சீட்கள், 4 பாயிண்ட் ஹார்நெஸ்கள் இணைக்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை பலப்படுத்த அவை 4 பாயிண்ட் ரோல் கேஜ்ஜூடன் இணைக்கப்பட்டுள்ளன. சுகவசதிகளை மேம்படுத்த, உட்புறத்தில் LED விளக்குகள் மற்றும் பயணம் இன்பமாகக் கழிய பொழுது போக்கு அம்சமாக ம்யூசிக் சிஸ்டம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. எனினும், பயணிகள் இனிய இசையை அனுபவிக்க மிகக் கவனமாக கவனிக்கவேண்டும், ஏனெனில், இந்த வண்டியின் இஞ்ஜின் இதன் ம்யூசிக் சிஸ்டத்தின் சத்தத்தை விட சற்றே அதிகமாக இருக்கும்.
2.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் 4 சிலிண்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார், சிறந்த செயல்திறனை உள்ளேடுத்துக் கொள்ளும் அமைப்பு (பெர்ஃபார்மன்ஸ் இன்டேக் சிஸ்டம்); ஸ்போர்ட்ஸ் எக்ஸாஸ்ட் அமைப்பு; மற்றும் ஒரு சிறந்த அலுமினிய இண்டர் கூலர் போன்ற சிறப்பம்சங்களுடன் வருகிறது. தற்போது, 252 bhp சக்தி மற்றும் 366 Nm டார்க் என்ற அளவில் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் சக்தியை விட, இந்த புதிய காரில் அதிகமான சக்தி உருவாக்கப்படும் என்று தெரிகிறது. அபாரமான செயல்திறனைக் கொடுக்கும் விதத்தில் இதன் இஞ்ஜின் செயல்படுவதற்கு, காயில்ஓவர் சஸ்பென்ஷன், ஸ்லாட்டட் ராட்டர்கள் மற்றும் பேட்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க:
- வேவு பார்க்கப்பட்டது: 2016 ஃபோர்ட் எண்டேவர் உளவாளிகளின் கண்களில் பட்டுவிட்டது
- ஃபோர்ட் இந்தியாவின் ஜெநுயின் பார்ட்ஸ் சில்லறை விநியோகம் விரிவாக்கம்: கோவா மற்றும் மகாராஷ்ட்ரா இணைக்கப்பட்டது
SEMA –வில் (சிறப்பு உபகரணங்கள் மார்க்கெட் சங்கம்) இடம்பெறவுள்ள மற்ற ஃபோர்ட் கார்களை, கீழே உள்ள ஸ்லைட் ஷோவில் பார்த்து மகிழவும்.
0 out of 0 found this helpful