ஃபோர்ட் ஃபோகஸ் RS பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டது
போர்டு போக்கஸ் க்காக செப் 19, 2015 01:43 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
முடுக்கிவிடப்பட்ட 4.7 வினாடிக்குள், 0 –வில் இருந்து 100 கிலோ மீட்டர் வரை எகிறி, மணிக்கு 165 மீட்டர் ( மணிக்கு 265 கிலோ மீட்டர்) வரை வேகமாக செல்கிறது. முஸ்டங்கைப் போலவே, 2016 ஃபோகஸ் RS –சும் உலகம் முழுவதும் சுற்றி வர உள்ளது.
நடந்து கொண்டிருக்கும் 2015 பிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில் ஃபோர்ட் நிறுவனம் புகழ் பெற்ற 2016 ஃபோகஸ் RS மாடல் காரின் இயங்குதிறனையும் அதன் சிறப்பம்ஸங்களையும் வெளியிட்டது. 36,605 அமெரிக்க டாலர் (தோராயமாக 24 லட்ச ரூபாய்) விலையில் வரவுள்ள ஃபோகஸ் RS கார், 4.7 வினாடிகளுக்கு முன்பாகவே 0 –வில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை அடையும் திறனும், அதிகபட்சமாக மணிக்கு 165 மீட்டர் (மணிக்கு 265 கிலோ மீட்டர்) வரை செல்லும் திறனும் கொண்டதாக உள்ளது. இதன் இஞ்ஜின் சிறப்பம்ஸங்கள், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பாவில் நடந்த குட்வுட் பெஸ்டிவேல் ஆஃப் ஸ்பீட் என்ற நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியிடபட்டன.
முதலில் இஞ்ஜின் திறன் பற்றி பார்க்கலாம்- ஃபோகஸ் RS காரில் உள்ள 2.3 லிட்டர் இன்லைன்-4 டர்போ சார்ஜ்ட் மோட்டார் 350 PS திறனை 6800 rpm சக்தியிலும் மற்றும் 440 Nm முறுக்கு விசையை 2000-4500 rpm இடையிலும் தரவல்லதாக உள்ளது. இந்த அதீதமான சக்தி மூலம், துரிதமான ஃபோகஸ் RS, அதிகபட்ச உந்து விசையான 470 Nm அளவை 15 வினாடிகளுக்குள் அடைந்து விடுகிறது!
“ஃபோகஸ் RS மாடல், ஃபோர்டின் பாரம்பரியமிக்க பெயர்பலகையை உலகத்தில் உள்ள புதிய தலைமுறை வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் முதல் முறையாக கொண்டு சேர்க்க உள்ளது” என ஃபோர்ட் செயல்பாட்டு இயக்குனரான டேவ் பேரீகக் கூறினார். இந்த விலையில், ஆச்சர்யம் தரும் செயல்திறன் மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தைக் கொண்ட ஃபோகஸ் RS , ஆர்வமிக்க நுகர்வோரையும், உயர்ரக வாகன தயாரிப்பாளர்கள் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
அனைத்து சக்கரங்களும் இணைந்து செயல்படும் AWD அமைப்பு முதன்முறையாக ஃபோகஸ் RS மாடலில் இடம் பெற்றுள்ளது. ஃபோர்ட் AWD அமைப்பில், மின் ஆற்றலால் இயங்கக்கூடிய கிளட்ச் அமைப்பு காரின் முன்புற மற்றும் பின்புற சக்கரங்களுக்கு திருப்பு விசையை சீராக பகிர்ந்தளிக்கவும், பக்கவாட்டு திருப்பு விசையை பின்புற அச்சாணிக்கு சரியான விகிதத்தில் கொண்டு செலுத்துவதற்கு சிறப்பாக டார்க் வெக்டரிங்க் அமைப்பு மூலம் இயக்குகிறது.
அனைத்து சக்கரங்களின் மூலமும் இயங்கும் AWD அமைப்பு, நொடிக்கு 100 முறை வரும், பல வாகன சென்சார்களையும் கண்காணித்து, அருமையான பயணத்திற்கு வழி வகுக்கிறது. மிகச் சிறந்த முறையில் வண்டி ஓட்டுவதற்கு, இந்த AWD அமைப்பு காரின் மேம்பட்ட மின்னணு சீர்படுத்தும் அமைப்புடன் திறமையாக இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதன் அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் திருப்பு விசையை பகிர்ந்தளிக்க பிரேக் சாந்த டார்க் வெக்டரிங்க் கண்ட்ரோல் அமைப்பு மற்றும் டார்க் வெக்டோரிங்க் ஆல்-வீல் ட்ரைவ் அமைப்பும் இணைந்து உதவுகின்றன.