ஃபோர்டின் சிறிய ரக ஃபிகோ கார்கள் தீபாவளிக்கு முன் அறிமுகப்படுத்தப்படும்
manish ஆல் ஆகஸ்ட் 13, 2015 02:40 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
இன்று ஃபோர்டின் ஃபிகோ அஸ்பையர் வெளியீட்டின் போது, ஃபோர்ட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர், 2015 ஃபோர்ட் பிகோ சிறிய கார் (ஹாட்ச் பாக்) தீபாவளிக்கு முன்பு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். இதற்கு முன்பு, இந்த கார் தீபாவளி வெளியீடாக இந்திய சந்தைக்கு வரும் குறிக்கப்பட்டு இருந்தது. ராஜஸ்தானில் உள்ள ஃபோர்ட் விநியோகிஸ்தர்கள் உளவு பார்த்து, இந்த தகவல் மாறுபட்டதாக இல்லை என்று கண்டுகொண்டனர். ஃபோர்டின் மற்றைய மாடல்களில் உள்ள அம்ஸங்களைப் போல, இந்த காரிலும் ஆஸ்டன் மார்டினில் உள்ளது போல கிறில்லும், பின்புற கதவுகள் வரை ஒட்டுமொத்த தோற்றமும் அஸ்பையரை ஒத்த மாதிரி உள்ளது.
ஃபிகோ ஹாட்ச் பேக் காரின் உட்புறத்தில் முழுவதுமாக கருமை நிறத்திலும், அதன் மேல் வெள்ளிக் கோடுகளையும் கொண்டு அமர்க்களமாக உள்ளது. இதில், டைடனியம் ரக கார்களில், ஃபோர்டின் 4.2 அங்குல SYNC இன்ஃபோடய்ன்மெண்டோடு ஆப் லிங்க்கும் (Applink) பொருத்தப்பட்டுள்ளது. அஸ்பையர் கார்களைப் போல இந்த சிறிய காரும், தானியங்கி தட்ப வேட்ப கட்டுபாடு அமைப்பை (கிளைமேட் கண்ட்ரோல்) பெற்றுள்ளது. கலப்புலோக (அலாய்) முறையும் அதே வகையில் உள்ளது, ஆனால் அளவு மட்டும் வேறுபட்டதாக, 14 அங்குலம் என்று உள்ளது. தகதகவென்ற தங்க நிறத்தில் இந்த கார், அஸ்பையரைப் போலவே மிண்ணுகிறது. இரட்டை பாதுகாப்பு காற்று பைகள், மற்றைய பிகோ வகை கார்களைப் போலவே உள்ளன. மேலும், அஸ்பையரைப் போல டைடனியம் + வகை கார்களில், 6 பாதுகாப்பு காற்று பைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இயந்திரங்கள்
2015 ஃபிகோ ஹாட்ச் பேக் கார், அஸ்பையாரின் கச்சிதமான செடான் வகை கார்களின் இயந்திர அமைப்பையே கொண்டுள்ளது. அஸ்பையரைப் போல, 1.5 லிட்டர் Ti-VCT 4 சிலிண்டர் பெட்ரோல் வகையில், 6 வேக தானியங்கி இரட்டை கிளட்சும் இடம்பெறும் என்று தெரிகிறது. எனினும், தற்போது இந்த சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளன.
1.2 லிட்டர் Ti-VCT – இது ஒரு ஃபிகோவின் 1.2 டியூராடெக் மோட்டாரின் மிகுதியான மாறுபட்ட பதிப்பு. 4 சிலிண்டர் அமைப்பில், உட்கொள்ளல் மற்றும் வெளியேற்றும் வால்வுகள் இரண்டுக்கும், தனித்தனியே மாறுபட்ட வால்வு நேரங்கள் கொடுக்கப்படுள்ளது.. மேலும், இந்த இயந்திரம் இப்போது 88 PS @ 6300 rpm மற்றும் 112 முறுக்குவிசை @ 4000 rpm என்ற சுழர்ச்சியை அதிகபட்ச முறுக்கு விசையில் உருவாக்குகிறது. இது 5 வேக ஆளியக்கி மூலம் சக்தியை உட்செலுத்தும் அமைப்போடு பொருத்தப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் TDCi – ஃபிகோவில் அதிகப்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் TDCI டீசல் இயந்திரத்தில், 10 PS ஆற்றல் மற்றும் அதிகமான திருகுவிசை; 100 PS @ 3750 rpm உருவாக்க கூடிய எண்ணை எரிகலனும் (ஆயில் பர்னர்) மற்றும் மிகச் சிறந்த முறுக்கு விசையான 215 NM @ 1750 – 3000 rmp வரை தரவல்லதாக உள்ளது. இதன் ஆற்றல், 5 வேக ஆளியக்கி பல்லிணைப்பு பெட்டிக்கு (கியர் பொக்ஸ்) சென்று, வசீகரமான 25.83 kmpl- லை இந்த சிறிய அஸ்பையர் செடான் வகை காருக்கு தருகிறது.
1.5 லிட்டர் Ti – VTC பெட்ரோல் வகையில் 6 வேக DCT – இந்த இயந்திரம் 112 PS @ 6,300 rpm மற்றும் 136 Nm @ 4250 rpm முறுக்கு விசையை அதிகபட்ச திருப்பத்தில் உருவாக்குகிறது. மேலும், இந்த காரில் 6 வேக இரட்டை கிளட்ச் செயல்திறனோடு இதன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.