இரண்டாம் தலைமுறை ஃபிகோவை, ஃபோர்டு இன்று அறிமுகம் செய்கிறது
modified on செப் 23, 2015 04:14 pm by manish for போர்டு ஃபிகோ 2015-2019
- 13 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்தியாவிற்கான இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக் காரான ஃபோர்டு ஃபிகோவை, போர்டு நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இது ஒரு ஹேட்ச்பேக் என்பதற்கு ஏற்ப, பூட்-லெஸ் பதிப்புகளான ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் சேடன் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆகியவற்றின் விலை நிர்ணயமும், ஆஸ்பியரை பின்பற்றியே அமையும். அப்படியே அமைந்தால், இந்த சிறிய காரின் விலை நிர்ணயம், கடந்த 2010 ஆம் ஆண்டு போட்டியிடும் வகையில் விலை நிர்ணயம் செய்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஃபிகோவை நினைவூட்டுவதாக அமையும். மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் i10 மற்றும் டாடா போல்ட் ஆகிய போட்டியாளர்களுடன், இந்த கார் போட்டியிடும்.
பின்புற தகவமைப்பை தவிர, ஆஸ்பியர் சேடனின் பெரும்பாலான அம்சங்களை ஃபிகோ பகிர்ந்து கொண்டுள்ளது. ஆஸ்டன் மார்டினில் உள்ளது போன்ற கிரில் உட்பட ஆஸ்பியரில் உள்ள அதே முக்கியத்துவம் கொண்ட வடிவமைப்பு அம்சங்களை, இந்த காரும் பெற்றுள்ளது.
ஆஸ்பியரில் உள்ளது போலவே, ஃபோர்டு SYNC இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபோர்டு மைகீ, மை டாக் உள்ளிட்ட அப்ளிகேஷன்களை ஃபிகோவிலும் காண முடிகிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் ஆஸ்பியரில் உள்ளது போல, ஃபோர்டு ஃபிகோவிலும் தரமான இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் காணப்பட வாய்ப்புள்ளது. உயர்தர மாடலான டைட்டானியம்+-ல், பக்கவாட்டு பகுதி மற்றும் திரைகளில் உள்ள ஏர்பேக்குகள் உட்பட இப்பிரிவிலேயே முதல் முறையாக, மொத்தம் 6 ஏர்பேக்குகளை பெற்றிருக்கும்.
முதல் தலைமுறை ஃபிகோவில் இருந்த மோட்டார்களுக்கு பதிலாக, ஆஸ்பியரில் அறிமுகம் செய்யப்பட்டவை பொருத்தப்படலாம். இதன் வகைகளை பொறுத்த வரை, பெட்ரோல் வகைகளில் 1.2-லிட்டர் TiVCT 4-சிலிண்டர் மோட்டார் மற்றும் கூடுதல் சக்தி வாய்ந்த 1.5-லிட்டர் TiVCT மோட்டார் பொருத்தப்பட்டு, அவை 6-ஸ்பீடு இரட்டை கிளெச் உடன் இணைந்து செயல்படும். டீசல் வகைகளில் 1.5-லிட்டர் TDCi மோட்டார் இடம்பெறும்.
0 out of 0 found this helpful