போர்ஸ் குர்கா ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ் (ஆர்எப்சி) இந்தியா: சீசன் 2

ஃபோர்ஸ் குர்கா 2017-2020 க்கு published on jul 30, 2015 02:10 pm by அபிஜித்

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மிக கடினமான 10 கரடுமுரடான பாதைகளில் நடைபெறும் சாவல்களில் ஒன்றான மழைகாட்டு சவாலின் (ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ்) இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியாவில் நடைபெறுகிறது. மலேசியாவில் உருவான இந்த போட்டி, இந்திய பகுதிக்கு ஏற்ப, தற்போது மழையில் நனைந்துள்ள கோவா நகரில், ஜூலை 24 ம் தேதி முதல் நடைபெறுகிறது. மொத்தம் 7 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டி, நம் நாட்டின் கரடுமுரடான பாதைகளில் ஓட்ட திறமையுள்ளவர்களின் உறைவிடமாக மாறிவிடும். ஏனெனில் கரடுமுரடான பாதைகளுக்கென மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை கொண்டு, அவர்களின் வாகன ஓட்டு திறன்களை இப்போட்டி சோதிப்பதாக அமையும்.

கடந்தாண்டை போலவே, ஆர்எப்சி 2015-யை போர்ஸ் குர்கா நடத்துகிறது. கடந்தாண்டு கிடைத்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன் பட்டத்தை போர்ஸ் குர்கா வென்றிருந்தது. இந்த முறை கிர்ராரி ஆப் ரோடர்ஸ் (சண்டிகர்), சார்மினார் ஆப் ரோடர்ஸ் கிளப், கேரளாவை சேர்ந்த ஆப் ரோடர்ஸ், கோவாவை சேர்ந்தோர், பெங்களூர், ஹைதராபாத், போலாரிஸ் இந்தியா ஆகிய குழுக்களை சேர்ந்த கரடுமுரடான பாதைகளில் ஓட்ட திறமையுள்ள வீரர்களுடன் களமிறங்கி, போட்டியில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.

இந்த சவால் மிகுந்த போட்டியின் மூலம் போட்டியாளர்களின் திறன்களான, வாகனத்தை கையாளும் திறன்கள், பாதுகாப்பு இயல்பு, நேரம், பாதுகாப்பு, மனதின் முன்னெச்சரிக்கை மற்றும் அணி செயல்பாடு ஆகியவை பரிசோதிக்கப்படும். இதற்கும் மேலாக, இப்போட்டியில் கலந்து கொள்ள மனம் மற்றும் உடலில் அதிகபடியான பொறுமை தேவைப்படுவதால், சுமார் ஓராண்டுக்கு மேலாக பல அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்தாண்டு ஆர்எப்சி உடன் ஒப்பிடும் போது, இந்த முறை பெரியதாக, கடுமையாக, மோசமானதாக போட்டி அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை போட்டியாளர்கள் சந்திக்க உள்ள முக்கிய சவால்கள் என்னென்ன என்பதை காண்போம்.

இந்த போட்டி - முகவுரை (ப்ரோலோக்), பிரிடெட்டர், டெர்மினேட்டர் மற்றும் ட்விலைட் என்ற நான்கு படிகளை கொண்டதாக இருக்கும். இந்நான்கு படிகளும் மேலும் 24 துணை படிகளாக பிரிக்கப்பட்டு, சிறப்பு நிலைகள் (ஸ்பெசல் ஸ்டேஜஸ்) என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு நிலைகளில் பல வாகன அடிசுவடுகள் கொண்ட பாதைகள், அடுக்குகள் கொண்ட இடுக்குகள், வெட்டப்பட்ட குழிகள், இயற்கையாக மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட இக்கட்டுகள், கடந்து செல்ல முடியாத நீர் நிலைகள் ஆகியவை கொண்ட சவால் மிகுந்த பாதைகளை கொண்டிருக்கும். இந்த போட்டியை குறித்து நாம் அறிந்திருப்பது இவ்வளவுதான். எனவே இதன் சமீப கால தகவல்களை பந்தய களத்திலிருந்து நேரடியாக கொண்டு வருகிறோம். எடுத்துக்காட்டு: கோவா.

ஆர்எப்சி நாள் 1

பொதுவாக முதல் நாளான்று துல்லியமான பத்திரிக்கையாளர் சந்திப்பை தொடர்ந்து, மீதமுள்ள வாகனங்களின் மீளாய்விற்காக ஒதுக்கப்பட்டது. இரவில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியோடு முடிந்த முதல் நாளின் இறுதியில், ஓட்டுநரின் விரிவுரை நடைபெற்றது.

ஆர்எப்சி நாள் 2

இரண்டாம் நாளில் ஆர்எப்சி 2015-யின் முதல் படியான முகவுரை (ப்ரோலோக்) உட்பட  1 முதல் 6 வரையுள்ள சிறப்பு நிலைகள் நடத்தப்பட்டது. இதில் கடந்த ஆர்எப்சி சீசனில் ஓட்டிய பல ஒட்டுநர்களுக்கும், தற்போதைய கடினமான நிலைகளை குறித்து பழகி கொள்ள முடிந்தது. அவர்களுடன் சார்மினார் ஆப்-ரோடு அட்வென்ச்சர் கிளப்பை சேர்ந்த இரட்டையரான டாக்டர் சைதன்ய சல்லா மற்றும் மன்பிரீத் சிங் போன்ற புதுமுகங்களும் சேர்ந்து கொண்டனர். தற்போது கோவாவில் கடும் மழை பொழிவு காரணமாக, கடந்தாண்டை விட இந்தாண்டு ஆர்எப்சி கடும் சவாலாக அமைகிறது. சிறப்பு நிலையில் மஹிந்திரா சிஜெ3பி ஜீப்பை ஓட்டி வந்த கபீர் வாராய்ச்-சிற்கு எதிர்பாராத நிலையில் வாகனம் கவிழ்ந்தது, பெரும் தடையாக மாறியது. கடந்தாண்டு கபீர் மூன்றாம் இடத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கவுகர் மோட்டார் ஸ்போர்ட் ப்ரைவேட் லிமிடேட் நிறுவுனரும் இயக்குநருமான ஆஷிஸ் குப்தா கூறுகையில், “இந்த போட்டி மிகவும் தீவிரமாக உள்ளது. கடந்தாண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆர்எப்சி மதர் போட்டிக்கு சென்ற இந்திய அணி, அனைத்து தந்திரங்களையும் குறித்து வைத்துள்ளதாக தெரிகிறது. இப்போது தான் முதல் நாள் என்பதால், தற்போதைய ஆரம்ப நிலையில் எந்த முடிவிற்கும் நம்மால் வர முடியாது. கடைசி வெற்றியாளர் அறிவிப்பதற்கு, இன்னும் நாம் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது” என்றார்.

ஆர்எப்சி நாள் 3

முகவுரை (ப்ரோலோக்) யின் தொடர்ச்சியான சிறப்பு நிலை 7 இருந்து 12 வரையுள்ள நிலைகள் மூன்றாம் நாள் தொடரப்பட்டது. மூன்றாம் நாளில் ஜீப் எண் 117-யை ஓட்டிய மனிந்தர் சிங் சிறப்பு நிலை 12ல் பக்கவழிகளில் சிக்கி கொண்டதால், டிஎன்எப் (போட்டியை முடிக்கவில்லை) என்று அறிவிக்கப்பட்டார். யூனிக் ப்ளூ ட்ரக் எண் 110-யை ஓட்டிய ஹைட்ரோஸ் நியஸ், நிலை 8ல் வாகனத்தின் முன் ஸ்டீயரிங் ஆக்சில் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்டார்.

சிறப்பு நிலை 8ல் மார்ஷல் ஓட்டிய ரன்தீப் மிக்லானி கூறுகையில், சிறப்பு நிலை 8-யை முடிக்க 8 நிமிடங்கள் மட்டும் அளிக்கப்பட்டது என்றார். சிறப்பு நிலை 8-யை 2 நிமிடம் 50 நொடிகளில் கடந்த டான் இங் ஜோ என்பவரே, இந்த இலக்கு நேரத்தை நிர்ணயித்தவர். இந்த நிலையில் பலமுள்ளவராக தெரிந்த கபீர் வராய்ச், தனது பாதையை இழந்து, டிஎன்எப் (போட்டியை முடிக்கவில்லை) என்று அறிவிக்கப்பட்டார்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஃபோர்ஸ் குர்கா 2017-2020

Read Full News

trendingஇவிடே எஸ்யூவி

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience