• English
  • Login / Register

புதிய ரெனால்ட் டஸ்டரைப் பற்றி முதன்முதலாக பெறப்பட்ட படங்கள் அது பெரிய அளவில் இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன

ரெனால்ட் டஸ்டர் 2025 க்காக ஏப்ரல் 12, 2023 06:32 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய டஸ்டர், ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை எஸ்யூவி -யின் வடிவமைப்பில் உள்ள முக்கிய பொதுத்தன்மைகளை தக்க வைத்துக் கொள்ளும் என்று படங்கள் காட்டுகின்றன

2025 Renault Duster rendered

  • மூன்றாம் தலைமுறை டஸ்டர் எஸ்யூவி ஆனது ரெனால்ட் மற்றும் டாசியா பிராண்டுகளின் கீழ் உலகளாவிய வெளியீட்டிற்கான தயாரிப்பு நிலையில் உள்ளது.

  • ரெனால்ட் இந்தியாவிற்கான இரண்டாம் ஜெனரேஷனை முழுமையாக புறக்கணித்தது; மூன்றாம் தலைமுறை எஸ்யூவி 2025 ஆம் ஆண்டில் வரலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஸ்பை ஷாட்கள் எஸ்யூவி பெட்டி போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதைக் காட்டின மற்றும் C -பில்லர் பொருத்தப்பட்ட பின்புற கதவு கைப்பிடிகளையும் காட்டின.

  • பெறபட்டுள்ள படங்கள் எல்இடி லைட்டிங் மற்றும் இரண்டாம் தலைமுறை டஸ்ட்டரின் அதே அலாய் வீல் வடிவமைப்பைக் காட்டுகின்றன.

  • ஸ்ட்ராங்-ஹைப்ரிட் செட்அப்  உட்பட பல பவர்டிரெய்ன் விருப்பங்களில் வழங்கப்படலாம்.

  • இந்தியாவுக்கான மூன்றாவது ஜெனரேஷன் டஸ்டரின் ஆரம்ப விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவியை அதன் உலகளாவிய துணை பிராண்டான டாசியா மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்கிறது. எஸ்யூவி இன் மூன்றாம் தலைமுறை அவதாரத்தை ரெனால்ட் குழு உருவாக்கி வருகிறது, இது 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்குள் வரக்கூடும். இது ஏற்கனவே சிலமுறை சர்வதேச அளவில் உளவு பார்க்கப்பட்டது, இப்போது அதன் சமீபத்திய உளவு காட்சிகளின் அடிப்படையிலான படங்களின் தொகுப்பு ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

இது நன்றாக இருக்கிறதா?

"டஸ்டர்" பெயர்ப்பலகை எப்போதும் பெட்டி போன்ற தோற்றத்தைக் கொண்டதாகவே இருந்துள்ளது ஆகவே மூன்றாம் தலைமுறையும் அதற்கு வேறுபட்டதல்ல. இதன் படங்கள், எஸ்யூவி அதன் வழக்கமான பண்புகளான பெரிய கிளாடிங், ரூஃப் ரெயில்ஸ், மஸ்குலர் வீல் ஆர்ச்சஸ் மற்றும் முன்புற பம்பரில் பெரிய ஏர் டேமுடன் கூடிய நேர்த்தியான கிரில் போன்றவற்றைத் தக்கவைத்துக் கொள்கிறது. டிஆர்எல் -களுடன் கூடிய மெலிதான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் முன்பக்க பம்பரில் சிறிய பக்க ஏர் இன்டேக்குகளையும் நாம் பார்க்கலாம்.

2025 Renault Duster side spied

படங்களின் ஆதாரம்

காரைப் பார்க்க்கும் போது, படங்கள் எஸ்யூவி -யை தற்போதைய மாடலாக ஒரே மாதிரியான மூன்று-கண்ணாடி-பேனல்கள் லேஅவுட்டைக் கொண்டதாக காட்டுகின்றன. இரண்டாவது வரிசைக்கான கதவு கைப்பிடி சி-பில்லரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இருந்த மாடலின் அலாய் வீல் வடிவமைப்பு போலவே தற்போதுள்ள மாடலிலும் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். பின்புறத்தில், "டாசியா" பிராண்டிங் மற்றும் Y-வடிவ எல்இடி டெயில்லைட் அமைப்பை நீங்கள் கவனிக்கலாம், பின்புற ஸ்கிட் பிளேட்டில் ஒரு பெரிய பின்புற பம்பர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதன் சில வடிவமைப்பு பிக்ஸ்டர் கான்செப்டிலிருந்தும் ஈர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது.
மேலும் படிக்க2023 மார்ச் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த 10 கார் பிராண்டுகள்

பிளாட்ஃபார்ம் மற்றும் பவர்டிரெய்ன் விவரங்கள்


இந்தியா-ஸ்பெக் ரெனால்ட் டஸ்டர் (இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது)
ரெனால்ட் மூன்றாம் தலைமுறை டஸ்ட்டரை புதிய CMF-B பிளாட்ஃபார்மில் அடிப்படையாக கொண்டு இருக்கும்படி வடிவமைக்கிறது - இரண்டாம் ஜெனரேஷன் ஐரோப்பா-ஸ்பெக் கேப்டூரைப் போலவே - இதன் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்கள் (ICE) மற்றும் EV பவர்டிரெய்ன்கள் இரண்டிற்கும் ஏற்றதாக உள்ளன. உலகளாவிய-ஸ்பெக் மாடலுக்கு ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் பவர்டிரெய்ன் கிட்டத்தட்ட உறுதி என்றாலும், இது இந்தியாவிற்கும் கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளது. கார்டுகளில் எஸ்யூவி இன் ஆல்-எலக்ட்ரிக்  எடிஷனையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் டீசல் எடிஷன் இதில் சாத்தியமில்லை.

இந்தியாவில் இதன் விலை என்னவாக இருக்கும்?

2025 Renault Duster rear rendered

மூன்றாம் தலைமுறை டஸ்ட்டர் இந்தியா வந்தவுடன் அதன் விலை ரூ.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும். கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ,எம்ஜி ஆஸ்டர்  ஆகியவற்றுடன்  ரெனால்ட்டின் காம்பாக்ட் எஸ்யூவி  போட்டியிடும். அதே அடித்தளத்தில் பகிர்ந்து கொள்ளும்  தனித்துவமான வடிவமைப்புடன் நிஸான் எடிஷன் காரும்  இருக்கலாம்.

படங்களின் ஆதாரம்

was this article helpful ?

Write your Comment on Renault டஸ்டர் 2025

3 கருத்துகள்
1
C
channu
Jul 25, 2023, 7:15:28 PM

Renault will loose the Market if they not bring back duster to Indian market.

Read More...
    பதில்
    Write a Reply
    1
    V
    vijay kumar garg
    Apr 18, 2023, 1:14:28 PM

    Eagrly waiting to replace old one

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      M
      manish kumar sahu
      Apr 11, 2023, 1:16:04 PM

      My favourite SUV abhi present mai mere pass hai sandstorm

      Read More...
        பதில்
        Write a Reply

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

        • லேட்டஸ்ட்
        • உபகமிங்
        • பிரபலமானவை
        • டாடா சீர்ரா
          டாடா சீர்ரா
          Rs.10.50 லட்சம்Estimated
          செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
        • நிசான் பாட்ரோல்
          நிசான் பாட்ரோல்
          Rs.2 சிஆர்Estimated
          அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
        • எம்ஜி majestor
          எம்ஜி majestor
          Rs.46 லட்சம்Estimated
          ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
        • டாடா harrier ev
          டாடா harrier ev
          Rs.30 லட்சம்Estimated
          மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
        • vinfast vf3
          vinfast vf3
          Rs.10 லட்சம்Estimated
          பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
        ×
        We need your சிட்டி to customize your experience