• English
  • Login / Register

வோல்வோ S90 சேடனின் இறுதி வடிவமைப்பு மாதிரி வெளியானது.

published on ஆகஸ்ட் 31, 2015 05:58 pm by manish

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அடுத்து வரவிருக்கும் வோல்வோ S90 சேடனின் வடிவமைப்பை காட்டும் மாதிரி படங்கள் இணைதளத்தில் கசிந்துள்ளது. இந்த காரை அடுத்தாண்டு வெளியிடும் வகையில், தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. வோல்வோ S80-க்கு மாற்றாக வெளிவர உள்ள இந்த காரின் ஸ்டைலின் மூலம் வோல்வோ நிறுவனத்தின் கூபே தொழில்நுட்பம், காரின் ஸ்டைலில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை அறிய முடிகிறது.

S90-யில் வோல்வோவின் அடையாளமான செவ்வக வடிவ கிரில் மற்றும் கிரோம் மூலம் சூழப்பட்டு அதிக காற்றை உள்ளிழுக்க கூடிய வகையிலான ஒரு பெரிய பம்பர் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் உள்ள சில ஸ்டைலுக்கான சங்கதிகள், புதிய தலைமுறை வோல்வோ மாடல்களான S60 சேடன் மற்றும் XC90 ஆகியவற்றுடன் ஒத்துக் காணப்படுகிறது. இந்த காரின் அடையாளமாக ‘தோர்ஸ் ஹேம்மர்’ LED டேடைம்-ரன்னிங் லைட்களை கொண்டுள்ளது. இந்த லைட்களை XC90-ல் முதல் முதலாக காண முடிந்தது.

இந்த காரில் சரிந்த மேற்கூரை அமைப்பு மற்றும் ஒரு சாய்வான பின்புற ஜன்னல் ஆகியவை மூலம் ஒரு கூபேயின் ஸ்டைலை பெறுகிறது. ரேர் குவாட்டர் கிளாஸ் மூலம் வோல்வோ S90-ல் தாராளமான உட்புற இடவசதி காணப்படுவதை அறிய முடிகிறது. சமீப கால வோல்வோ தொழில்நுட்ப கார்களில் உள்ளது போன்ற C-வடிவ டெயில்-லேம்ப்கள், மாதிரி கார் மாடலில் காணப்படுகிறது. அதேபோல இந்த காரில் இரட்டை செவ்வக வடிவ வெளியீடுகள் (ட்வின் ரெக்டாங்கிள் எக்ஸ்சாஸ்ட்) உள்ளது.

புதிய XC90-ல் காணப்படும் 2.0-லிட்டர் ட்வின்-டர்போ நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜினையே, பெரும்பாலும் S90-யின் இயக்கத்திற்கும் பயன்படுத்தப்படலாம். முடிவாக, இந்த காரில் T8 ஹைபிரிட் சிஸ்டம் காணப்படலாம். S90 சேடனை மையமாக கொண்ட V90 வேகனையும், வோல்வோ நிறுவனம் அறிமுகப்படுத்த போவதாக, சில வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு S90 சேடன் சர்வதேச அளவில் அறிமுகமான பிறகே, வேகன் ஷோரூம்களுக்கு வந்து சேரும்.


 

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience