சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பிகோ ஆஸ்பியர் : ஒரு புதிய பரிணாமத்தில் ஃபோர்ட் நிறுவனம்

modified on ஆகஸ்ட் 04, 2015 12:40 pm by அபிஜித் for போர்டு ஆஸ்பியர்

நம் இந்தியர்களுக்கென அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோர்ட் கார் தயாரிப்பாளர்களின் பிரம்மாண்ட மாடல், எக்கோ ஸ்போர்ட். ஃபோர்ட்டின் பியெஸ்டா ஒரு மிகச் சிறந்த மாடலாக இருந்தாலும், வெளியிட்டு வெகு காலம் ஆகியதால் பெரும்பான்மையரின் மனத்தைத் தொடர்ந்து கவர முடியவில்லை. இந்த சரியான தருணத்திலேயே எக்கோ ஸ்போர்ட்ஸ் காரை ஃபோர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஃபோர்ட் தன் வியாபாரத் திட்டத்தை, அப்படியே எக்கோ ஸ்போர்ட் மூலம் நிலை நாட்டியது. அதிரடியான முன் பதிவு இலக்கங்களிலிருந்து, விண்ணை முட்டும் விற்பனை வரை அமோகமாக இருந்தது. ஆனால், டஸ்டர் வகை கார்கள் கச்சிதமான SUV ஆக இருந்ததால், அனைத்து பிரச்சனைகளையும் ஊதி தள்ளிவிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்தது. அதைத் தொடர்ந்து, இந்த 2015 வருடத்தில், ஃபோர்ட் பலவிதமான கார்களைத் தன் விற்பனை அங்காடியில் நிறுத்தி உள்ளது. அதன் வரிசை பின் வருமாறு:

  • பிகோ ஆஸ்பையர்
  • அடுத்த தலைமுறை பிகோ
  • புத்தம் புதிய எண்டேவியர்
  • மற்றும் வெற்றிச் சின்னமான முஸ்டாங்

இத்தகைய மாபெரும் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள, ஃபோர்ட் நிறுவனம் பெரிதும் விற்கப்படும் கார் வகைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதனால்தான், ஃபோர்ட் புதிய அஸ்பையர் மேல் கவனம் செலுத்துகிறது. அஸ்பையர் தான் ஃபோர்டின் முதல் முதலாக அனைவரின் கவனத்தையும் அதிகமாக ஈர்த்த கச்சிதமான செடான் ரக கார். இதன் காரணமாகவே, இந்த கார் ஃபோர்ட் நிறுவனத்தை ஒரு புதிய பரிமானத்திற்கு இட்டுச் செல்லும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இந்த கார் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மூலம் ஆய்வு மதிப்புரை செய்யவும், முன் பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் சோதனை ஓட்டம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற ஃபோர்டின் பிகோ, ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதிக்குள், இந்திய வாகனச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய ஆஸ்பையர் உருவாக்கத்திற்குப் பின் முதல் தரமான ஃபோர்டின் சமீபத்திய வடிவமைப்பு தத்துவம் அடங்கி உள்ளது. நாம் அதை பியேஸ்டாவில் பார்த்து அனுபவித்திருந்தாலும், இப்போது அது பல மடங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. பியெஸ்டாவின் அதே வடிவைக் கொண்டிருந்தாலும், அனைத்து அமைப்பிலும் ஆஸ்பையர், அதைவிட கனகச்சிதமாக உள்ளது. இதன் முகப்பு சிறிது பெரிதாக இருந்தாலும், இது மிகவும் பருமனாக காட்சியளிக்கவில்லை. மொத்தத்தில், ஆஸ்பையர் ஒடுக்கமாகவே இருக்கிறது. இதன் ரேக் பகுதியானது, புற கண்ணாடியிலிருந்து (விண்ட் ஸ்கிரீன்) உயர்ந்து பின்புறத்தை நோக்கி சீராக குறைந்து பின்புற கதவு வரை நேர்த்தியான வடிவத்தைக் கொடுக்கிறது.

ஆஸ்பையரின் இரு புறங்களிலும், இடையின் உயரத்தையும், கீழ் பகுதியையும் நுட்பமாக வரையறுக்க கண்கவர் வளைவுகள் உள்ளன. ஒரு அழகான நுட்பமான வளைவு காரின் பூட் பகுதியின் இடையிலிருந்து நேர்த்தியாக ஆரம்பித்து, சீராக பின்புற பயணிகள் புற கண்ணாடியை நோக்கி உயர்ந்து, நளினமாக பின்புற கதவின் மேல்பகுதியில் இணைகிறது. இந்த வேலைப்பாடு மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கிறது.

பூட் பகுதியின் மூடியானது மிகவும் துல்லியமாகவும்; குரோமியத்தில் செய்த அழகிய வேலைப்பாடு மூடியின் அகலம் முழுவதும் பரவி பூட் பகுதி கவர்ச்சியாக உள்ளது.

ஆஸ்பையரின் பின்புற விளக்குகளானது, இரு புறங்களின் இறுதியிலும் உள்ளன. மேலும், இந்த விளக்குகள் ரூபி சிகப்பு வண்ணத்தில் மிகவும் அழகாக தோற்றமளிக்கின்றன. இவை அனைத்தும் இருந்தாலும், ஃபோர்டின் அடையாளச் சின்னமான சற்று தூக்கலான சக்கர வளைவுகள் இதில் இல்லை. எனினும், இதன் காரணமாக அஸ்பையர் தன்னுடைய வடிவத்தை இழந்து விடக்கூடாது என்று, ஃபோர்டின் வடிவமைப்பாளர்கள் மிக நேர்த்தியாக சற்றே தளர்ந்துள்ள வளைவுகளைப் பொருத்தி அதன் உருவத்தை சீர் செய்துள்ளார்கள்.

ஃபோர்ட் ஆஸ்பையரின் உள்ளே பார்க்கும் போது, பிகோ காரின் உட்புற தோற்றத்தில் சற்றே சிறிதாக ஆனால் கனகச்சிதமாக இருப்பதை காணமுடிகிறது. காட்சித் தோற்றத்தில் சிறிதாக இருந்தாலும், இதனுள்ளே நல்ல இட வசதியும், பயன்படுதுவதற்க்கு இலகுவாக அனைத்தும் முறையாக சரியான இடதில் பொருத்தபட்டுள்ளதையும் நாம் காண முடிகிறது. S Y N C திரை (ஃபோர்ட் மைடாக் நுண்ணறி பேசி மூலம் இயக்க கூடிய அமைப்புடன்), இதற்கு சற்று கீழே அனைத்தையும் இணைக்கும் மைய இணைமையம், துருத்திய வண்ணம் உள்ள A/C ஐ கட்டுப்படுத்தும் பொத்தானும், இரு பக்கமும் பொருத்தப்பட்ட A/C காற்று போக்கி ஆகியனவும் உள்ளன. இது போன்ற அம்சங்கள், ஃபோர்ட் நிறுவனத்தினர் எவ்வளவு துல்லியமாக அனைத்தையும் பார்த்து பார்த்துச் செய்துள்ளனர் என்பதற்கு உதாரணமாக உள்ளன. மேலும், ஆஸ்பையரின் மேற்கூறிய சில வசதிகளை, மற்ற கச்சிதமான செடான் வகை கார்களில் காண இயலாது.

ஆஸ்பையரின் தாராளமான இட வசதிகளைப் பற்றிப் பேசும் போது, இதன் முன்பக்க கத்வில் உள்ள குடுவை வைப்பறை, 1.5 லிட்டர் குடுவையை வைக்கவும், அதற்கு மேலும் 2 சோடா குடுவைகளை வைக்கும் அளவிற்கு இட வசதி இரு பக்க கதவுகளிலும் உள்ளன என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும். பின்புற இருக்கைகள் தேவையான அளவு இட வசதியும், மற்ற போட்டியாளர்களின் கார்களை விட நேர்த்தியாகவும், அழகாகவும் உள்ளன. இதன் பூட் இட வசதி 359 லிட்டர் அளவையும், அத்துடன் உங்களின் குறும்புக்கார குழந்தை உள்ளே மாட்டிக் கொண்டால், தானாகவே பூட்டின் உள்ளேயிருந்து திறக்கும் வசதியையும் கொண்டுள்ளது.

ஃபோர்ட் ஆஸ்பையர் மூன்று வித இஞ்ஜின் தெரிவுகளில் வருகிறது, 1.2 TiVCT 88 PS பெட்ரோல், 1.5 TDCi 100 PS டீசல் மற்றும் பந்தைய விரும்பிகளுக்காக 1.5 TiVCT 112 PS பெட்ரோல் வகை இஞ்ஜின்களுடன் சந்தையில் கிடைக்கின்றன. முதல் இரண்டு வகை கார்களும் இந்தியாவில் சந்தையிடப்படும், ஆனால், மூன்றாவது வகை கார் குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் பகுதியில் உள்ள ஃபோர்ட்டின் மிக பெரிய தொழிற்சாலையிலிருந்து சிறப்பாக உற்பத்தி செய்து வரவுள்ளது என்பது சிறப்பான செய்தி. இதே தொழிற்சாலையிலிருந்து அதிக அளவில் முதல் இரு வகை கார்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது, 1.5 TiVCT இஞ்ஜின்னும் கடல் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால் கம்பீரமான பந்தைய வகை பிகோ ஆஸ்பையர் காரை நமக்கு அளிப்பது ஃபோர்ட் நிறுவனத்திற்கு ஒரு கடின செயலாக இருக்காது.

ஆஸ்பையரின் கதை இத்துடன் முடியவில்லை, இதன் முழு வடிவ பாகங்களும் சட்டங்களும் உயர்தர உறுதிமிக்க இரும்பினால் உருவாக்கபட்டு வலுவுடன் அமைந்துள்ளது. முன்புறத்தில் இரண்டு அழகிய பாதுகாப்பு காற்று பைகள் பொருத்தபட்டுள்ளன. 6 பாதுகாப்பு காற்று பைகள் உயர் ரக பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் பொருத்தபட்டு பயணிகளின் பாதுகாப்பு அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயர் ரக 1.5 TiVCT வகைகளில், சீரான மின் அழுத்த கட்டுபாடு (ESP )வசதியும், ஹில் லாஞ்ச் அஸ்சிஸ்ட் (HLA) வசதியும் மற்றும் இலுவை கட்டுபாட்டு சாதனமும் (TCS ) பொருத்தப்பட்டுள்ளது, ஆஸ்பையரின் சிறப்பான அம்சமாகும்.

வெளியிட்டவர்

அபிஜித்

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது போர்டு ஆஸ்பியர்

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை