சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

8 வருடங்களுக்குப் பிறகு ஃபியட் 500, தற்போதைய விரிவான புதுப்பித்தலில், புது பொலிவு பெற்றுள்ளது

published on ஜூலை 28, 2015 12:05 pm by raunak

ஃபியட்டின் 500 ஃபேஸ்லிப்ட்டின் அதிகாரபூர்வமான அறிவிப்பு 2015-ல் வெளிவந்தாலும், இந்த வருட இறுதியில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது.

ஃபியட் 500, தன்னை புதியது என்று கூறிக்கொண்டாலும், அது புதிது அல்ல. ஆனால், இப்போது கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. மேம்படுத்தப்பட்ட இயந்திரங்களும், மெருகூட்டப்பட்ட அழகும், இந்த மாடலை சந்தையில் தனித்து காட்டுகின்றன. இந்தப் புதிய ரகம், மொத்தம் 1800 மாற்றங்களைக் கொண்டுள்ளது என்று இதன் இத்தாலிய உற்பத்தியாளர்கள் உறுதியளிக்கின்றனர்.

வடிவமைப்பில் தொடங்கி, பியட்டின் முகப்புகளில் பல்வேறு மாற்றங்களும்; முட்டுத்தாங்கியில் (பம்ப்பர்) புதுவிதமான பல்வேறு குரோமிய வேலைப்பாடுகளும்; மற்றும் உயர் ரக மாடல்களில் உள்ள காற்று விலக்கி (ஏர் டாம்) அழகிய குரோமிய பொத்தான்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த வண்டியில் புதிய சரிவகவடிவமான காற்றோட்ட வலையின் (கிரில்) பக்கவாட்டில் மேம்படுத்திய மற்றும் அதிக சரிவுடன் கூடிய முன்புற விளக்குகள் அழகாக பொருத்தப்பட்டுள்ளன.

ஃபியட் 500 இன் பனி விளக்குகள் (ஃபாக்)தற்பொழுது வட்ட வடிவமாகவும், பகல் நேரத்திலும் இயங்கும் LED விளக்குகளுடன் பொருத்தப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளன. இது தவிர, பின்புறத்திலுள்ள விளக்குகளும் புதுமையாகவும், முக்கோண வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்விளக்குகளின் நடுவில் உள்ள தட்டு (சென்டர் பாலட்) காரின் வண்ணத்திலேயே அமைந்திருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த கார் 15 மற்றும் 16 அங்குல அலாய் சக்கரங்களை கொண்டு கம்பீரமாக ஓடுகின்றது. ஃபியட் 500 வாடிக்கையாளர்களுக்காக மேலும் இரண்டு புதிய வண்ணங்களான மிடுக்கான கோரல்லோ சிகப்பும், நேர்த்தியான ஒபேரா பர்கண்டியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிப்புறம் போலவே, உட்புறமும் அப்படியே ஃபியட் 500 போலவே உள்ளது, ஏனெனில், உட்புறம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. வேறு எந்த மாற்றமும் இல்லையென்றாலும், மிகவும் முக்கியமான யு கனைக்ட் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை காரின் உட்பகுதியில் இணைத்து பெரிய மாற்றத்தை பயண நேரத்தில் அனுபவிக்கச் செய்கின்றனர். இதன் மூலம், பயணம் செய்பவர்கள் 5 அங்குல தொடுதிரையுடன் (டச் ஸ்கிரீன்) கூடிய பயண வழிகாட்டும் (நேவிகேஷன்) வசதியை பயன்படுத்தி எளிதாகவும், இனிதாகவும் பயணிக்கலாம்.

மேலும், பியட்டின் உயர்தர கார் பிரிவில், வாடிக்கையாளர்கள் 7 அங்குல முழுமையான இலக்கமயமான (டிஜிடலைஸ்ட்) இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை தேவையென்றால் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயந்திர ரீதியில் பார்க்கும்போது, ஃபியட் 500 ஃபேஸ்லிப்ட்டில் இதற்கு முன் பின்பற்றிய அதே இயந்திர வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது பெட்ரோல் ரகத்தில் 0.9 லிட்டர் டிவின் ஏர், 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் வகைகளும்; டீசல் ரகத்தில் 1.3 லிட்டர் மல்டிஜெட் II-ம்‌ கிடைக்கின்றன. மேலும், சக்தியை கடத்தும் முறையில் 5 மற்றும் 6 வேக ஆளியக்க மற்றும் பியாட்டின் டூயலோஜிக் ரோபோட்டைஸ்ட் தானியங்கி பல்லிணைப்புப் பெட்டியையும் (கியர் பாக்ஸ்) வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பின் குறிப்பு:

ஃபியட் இந்தியா தனது ஃபியட் 500-ஐ புதிதாக அபார்த் அவதார் – 595 காம்பெட்டிஜியோன் என்று பெயர் மாற்றம் செய்து வரும் வாரங்களில் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.8.95 - 10.52 சிஆர்*
புதிய வகைகள்
Rs.18.90 - 26.90 லட்சம்*
புதிய வகைகள்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வகைகள்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை