பிரத்தியேகமாக : வோல்வோ S90 உறுதியாக 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகும் .

modified on sep 21, 2015 04:48 pm by manish

  • 8 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் : வோல்வோ நிறுவனம் தனது  S90  மாடல் கார்களை 2017 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சொகுசு செடான் பிரிவு காரைச் சுற்றி உலவிய வதந்திகளுக்கு   முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்  சுவீடன் நாட்டு கார் தயாரிப்பாளர்கள் இந்த மேம்படுத்தப்பட்ட  S90 கார் அறிமுகத்தை உறுதி செய்துள்ளனர்.  முதல் உண்மையான S90 கார்களுக்கு மாற்றாக 2014 ஆம் ஆண்டு வோல்வோ S80  கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த சுவீடன் நாட்டு கார் தயாரிப்பாளர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக  இருந்ததும் கடைசியாக உருவாக்கப்பட்ட ரியர் - வீல் - ட்ரைவ் தொழில் நுட்பத்துடனான கார் முந்தைய ஒரிஜினல் S90 மாடல் தான் என்பது இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும். கடந்த இரண்டு தலைமுறையாக சொகுசு செடான் பிரிவில் S90 கார் விட்டுச் சென்ற வெற்றிடத்தை வெற்றிகரமாக  S80  கார்கள் தொடர்ந்து நிரப்பி வருகிறது என்றால் அது மிகை இல்லை.  

சமீபத்தில் இந்த புதிய S90 கார்களின் புகைப்படம் வலைதளங்களில் கசிந்தது. இந்த  படங்கள் அறிமுகமாக உள்ள S90 கார்களின் வடிவமைப்பை உறுதிபடுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. வோல்வோ தயாரிப்புக்களில் இன்னொரு மைல் கல்லாக இந்த கார்  இருக்கும் என்றும் கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக  வடிவமைப்பில் இந்த கார் பெரிதாக பேசப்படும் என்றே தோன்றுகிறது. அறிமுகமாக உள்ள இந்த  S90 கார்கள் வோல்வோ நிறுவனத்தின் டாப் - ரேன்ஜ் மாடலாக இருக்கும் என்றும் ஒரு வதந்தி நிலவுகிறது. வடிவமைப்பை பொறுத்தவரை  வோல்வோ நிறுவனத்தின் பிரத்தியேக சிறப்பு வடிவமைப்பான  நீள் சதுர கிரில் மற்றும் பிரபல அமெரிக்க காமிக் கதாபாத்திரம் தோர் பயன்படுத்தும் சுத்தியல் போன்ற அமைப்பிலான LED பகல் நேரத்தில் ஒளிரும் முகப்பு  விளக்குகள்  உள்ளிட்ட வோல்வோ தனது கான்சப்ட் கூபே கார்களில் காட்டிய அதே வடிவமைப்பு உத்திகள் இந்த புதிய S 90 கார்களிலும் பயன்படுத்தியுள்ளது. மேலும் இந்த செடான் ஹாலரின் வடிவமைப்பு கோட்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சொகுசான உட்புற அலங்கரிப்புகளுடன் ( வோல்வோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்  உதவியுடன் ) மிக கம்பீரமாக இந்த S 90 கார்கள் வளம் வர  உள்ளன.


 
XC90  கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே என்ஜின் தான் அநேகமாக இந்த புதிய S 90 கார்களிலும்   பயன்படுத்தப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. 2.0 லிட்டர் இரட்டை - டர்போ நான்கு -  சிலிண்டர் டீசல் என்ஜின் தான் இந்த புதிய காரை சக்தியூட்டும் சக்தி மையமாக திகழும். அதன் பிறகு வரும் காலங்களில் T8   ஹைப்ரிட் சிஸ்டம் இந்த கார்களில் பொருத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்க படுகிறது. V90 வேகன் என்று அழைக்கப்பட இருக்கும் வோல்வோ நிறுவனத்தின் அடுத்த வேகன் மாடல் கார்களுக்கு இந்த S 90  கார்கள் ஒரு நல்ல அடித்தளமாக அமையும் என்று வோல்வோ எண்ணுகிறது.  V90 வேகன் மாடல் வாகனங்கள் அடுத்த ஆண்டு உலக சந்தையில்  S90 கார்கள்  அறிமுகமான பிறகு  அறிமுகமாகும். இந்த கார் ஆடி A6 , BMW 5 சீரிஸ், மெர்சிடீஸ் E - கிளாஸ் கார்களை   போன்ற விலையுடன் சந்தைக்கு வந்தாலும்  மெர்சிடீஸ் S கிளாஸ், BMW 7 சீரிஸ் மற்றும் ஆடி A8   கார்களுடன் தான் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.   

  • New Car Insurance - Save Upto 75%* - Simple. Instant. Hassle Free - (InsuranceDekho.com)
  • Sell Car - Free Home Inspection @ CarDekho Gaadi Store
வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News
×
We need your சிட்டி to customize your experience