ஆட்டோ எக்ஸ்போ 2016 க்கு முன்னதாகவே கோ க்ராஸ் வாகனங்களின் கான்செப்ட் டீசர ை டாட்சன் வெளியிட்டது.
published on ஜனவரி 19, 2016 12:59 pm by saad for டட்சன் கோ கிராஸ்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
மிகவும் எதிர்பார்க்கப்படும் 2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே தங்களது கோ க்ராஸ் கான்சப்ட் வெர்ஷனின் டீசரை டாட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் முதலில் கடந்த வருட டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த கோ க்ராஸ் வாகனங்கள் தனது பளிச்சென்ற தோற்றத்தால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. க்ராஸ்ஓவர்/ காம்பேக்ட் SUV கார்களுக்கு இந்திய சந்தையில் தற்போது நிலவி வரும் பெரிய வரவேற்பின் காரணமாக இந்த கோ க்ராஸ் வாகனங்கள் இந்திய சந்தையில் திட்டமிட்டதை விட முன்னதாகவே அறிமுகப்படுத்தலாம் என்பதை இந்த டீஸர் வெளியீடு நமக்கு சூசகமாக தெரிவிக்கிறது.
தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கோ+ MPV வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே ப்லேட்பார்மின் அடிப்படையை கொண்டு இந்த கோ க்ராஸ் கார்களும் தயாரிக்கப்பட உள்ளது. இந்த வாகனத்தின் முன்புற தோற்றத்தைப் பார்க்கையில், ஒரு ஆக்ரோஷமான , கட்டுறுதி மிக்க ஒரு க்ராஸ்ஓவர் வாகனத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதே சமயம் , ஸ்டைலான அல்லாய் சக்கரங்கள் மற்றும் உடல் பகுதி க்லேடிங் இவைகளைப் பார்க்கையில் ஒரு சுத்தமான க்ராஸ்ஓவர் கார் இது என்று நம்மை நினைக்க வைக்கிறது. உட்புற வடிவமைப்பு விவரங்களை டாட்சன் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் நிச்சயம் ஏராளமான அதி நவீன தொழில் நுட்ப அம்சங்கள் போதும் போதும் என்னும் அளவுக்கு இந்த வாகனத்தின் உள்ளே அடுக்கப்பட்டிருக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். 5 – இருக்கை அல்லது 7 – இருக்கை க்ராஸ்ஓவர் வெர்ஷனாக அல்லது இரண்டு வெர்ஷன்களுமே வெவ்வேறு ட்ரிம்களில் வெளியிடப்படலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.
இந்த அறிமுகமாக உள்ள கோ க்ராஸ், 1.2 லிட்டர் 3 - சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படும் என்று தெரிகிறது. 65 PS அளவு கூடுதல் ஆற்றல் மற்றும் 104nm அளவு டார்கையும் வெளியிடும் வகையில் இந்த என்ஜின் ட்யூன் செய்யப்பட்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோ + கார்களில் உள்ள 5 வேக கியர் பாக்ஸ் வசதி இந்த புதிய கோ க்ராஸ் வாகனங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோ க்ராஸ் வாகனங்களைத் தவிர இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ரெடி - கோ ஹேட்ச்பேக் கார்களையும் காட்சிக்கு வைப்பார்கள் என்று தெரிய வருகிறது. இந்த சிறிய கார் ஒரு ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காராக இருக்கும் என்று தெரிகிறது. நிஸ்ஸான்- ரெனால்ட் CMF பிளாட்பார்மை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள இந்த சிறிய கார்கள் , ரெனாட் க்விட் கார்களில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின் பொருத்தப்பட்டு வெளியாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful