சென்னையில் டாட்சன் ரெடிகோ மீண்டும் வேவுப் பார்க்கப்பட்டது!
published on டிசம்பர் 16, 2015 10:21 am by sumit for டட்சன் ரெடி-கோ 2016-2020
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: சென்னையில் டாட்சன் ரெடிகோ மீண்டும் வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இது வேவுப் பார்க்கப்பட்ட நிலையில், காரின் முன்பக்கம் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 2014 ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த கார், மாருதி ஆல்டோ 800 காருக்கு ஒரு நல்ல மாற்று காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து, ஆரம்ப நிலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரெனால்ட் க்விட்டை போலவே ரெடிகோவும் காணப்படும் நிலையில், இவ்விரு மாடல்களும் CMF-A பிளாட்பாமை அடிப்படையாக கொண்டு, ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த ஒத்த தன்மையின் முடிவை, ரெடிகோ காரின் வெளிபுறத்திலும், உட்புற தோற்றத்திலும் முற்றிலும் மாறுபடும் தன்மையின் மூலம் காண முடிகிறது. மேலும் என்ஜின்கள் கூட ஒரே மாதிரியாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் க்விட் ஒரு 0.8 லிட்டர் என்ஜினைக் கொண்டு ஆற்றலை பெற்று, ஒரு அதிகபட்ச ஆற்றலான 54 PS-யும் மற்றும் 72 Nm முடுக்குவிசையையும் அளிக்கும் நிலையில், ரெடிகோவில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு புதிய என்ஜினை கொண்டு, இப்போதைக்கு ஒரு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு காணப்படலாம். ரெனால்ட்-நிசான் தயாரிப்பில் வெளியாகும் இந்த இரண்டாம் கார், க்விட்டிற்கு அடுத்தபடியாக மாருதி ஆல்டோ 800 உடன் போட்டியிட உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இது அறிமுகம் செய்யப்படலாம் என்பதை குறிக்கும் வகையில், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அதன் அறிமுகம் நடைபெறலாம் என்று சில வதந்திகள் தெரிவிக்கின்றன. இதே கண்காட்சியில், தனது கோ-கிராஸ் காரையும் டாட்சன் நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது.
சமீபத்தில் ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வாடிக்கையாளர்கள் இடையே ஒரு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள க்விட் மூலம், நிசான் நிறுவனமே அமைதி காக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful