ஒப்பீடு : டாடா ஸிகா VS அதன் போட்டியாளர்கள்
published on ஜனவரி 11, 2016 10:48 am by sumit
- 13 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது டாடா ஸிகா கார்களை அடுத்த மாத மத்தியில் அறிமுகப்படுத்த உள்ளது . பல ஆண்டுகளாக இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த தங்களது இண்டிகா கார்களுக்கு மாற்றாக இந்த புதிய சிகாவை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. அதுமட்டுமன்றி சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட எந்த ஒரு வாகனமும் வாடிக்கையாளர்களை பெரிய அளவில் கவர தவறியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் , இந்த ஸிகா கார்கள் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் களமிறங்குகிறது.
டாடாவின் புதிய வடிவமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்களில் , நிறைய வெளிப்புற மற்றும் உட்புற கேபின் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் வெளியாக உள்ள இந்த ஸிகா முறையே 83 பிஎச்பி மற்றும் 69 பிஎச்பி அளவு சக்தியை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி செலீரியோ மற்றும் செவர்லே பீட் கார்களுடன் இந்த புதிய ஸிகா போட்டியிடும் என்று தெரிகிறது.
இந்த புதிய ஸிகா ஹேட்ச் தன்னுடைய பிரிவில், தனது போட்டியாளர்களை எந்தெந்த அம்சங்கள் மூலம் அசத்தப்போகிறது என்பதை விளக்கும் வகையில் ஸிகா பற்றிய அனைத்து தகவல்களையும் உங்களுக்கென திரட்டி உள்ளோம்.
புதுப்பிக்கப்பட்ட உட்புற வடிவமைப்பு மற்றும் பொருட்கள் வைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் இட வசதி ஆகிய அம்சங்களுடன் தனது பிரிவில் உள்ள மற்றப் போட்டியாளர்களை சந்திக்க ஸிகா தயாராக உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் , இந்த புதிய ஸிகா கையாள்வதற்கும் மிகவும் வசதியாகவே உள்ளது எனலாம். டாடா நிறுவனம், இந்த புதிய சிகாவின் விலையை சரியாக நிர்ணயம் செய்யுமேயானால் , தனது புதிய அம்சங்களுடன் இந்த கார் நிச்சயம் பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful