• English
  • Login / Register

செவர்லே டிரைல்ப்ளேசர் நாளை அறிமுகமாகிறது. நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்.

published on அக்டோபர் 20, 2015 06:34 pm by nabeel for செவ்ரோலேட் ட்ரையல்

  • 19 Views
  • 1 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

 Chevrolet Trailblazer

செவர்லே நிறுவனம் மிகவும் எதிர்பார்கபட்ட தங்களது ப்ரீமியம் SUV பிரிவு வாகனமான டிரைல்ப்ளேசர் கார்களை நாளை அறிமுகப்படுத்துகிறது. இதற்கு முந்தைய அறிமுகமான கேப்டிவா எதிர் பார்த்த வெற்றியை பெறாமல் போன பிறகு , ப்ரீமியம் SUV பிரிவில் காலூன்ற ஜிஎம் நிறுவனம் செய்யும் இரண்டாவது முயற்சியாக இந்த டிரைல்ப்ளேசர் அறிமுகம் பார்க்கப்படுகிறது. இந்த புதிய டிரைல்ப்ளேசர் சிபியூ (CBU) முறையில் ( முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு ஓட்டுவதற்கு தயார் நிலையில் இறக்குமதி செய்யப்படும் முறை ) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஒரு வேரியன்ட் ( ஆடோமேடிக், 4X2 ) மட்டும் தான் வெளியிடப்பட்ட உள்ளது என்பதும் கூடுதல் செய்தி. விலை ரூ. 29 லட்சங்கள் (எக்ஸ்- ஷோரூம் ) ஆக இருக்கும் என்றும் தெரிகிறது. 2000 rpm ல் 500  nm அளவிலான அசாத்தியமான டார்க் உற்பத்தி செய்யும் டியுராமாக்ஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதேஇந்த ப்ரீமியம் SUVயின் அதி முக்கிய சிறப்பம்சமாக சொல்லலாம். மேலும் கிரவுன்ட் கிளியரன்ஸ் 231  மீ மீ அளவு கொடுக்கப்பட்டிருப்பதும் விசேஷமான ஒரு அம்சமாகும்.

என்ஜின்

இந்த பெரிய கம்பீரமான ப்ரீமியம் SUV வாகனம் 2.8 லிட்டர், 4 - சிலிண்டர் டியூராமேக்ஸ் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ப்ரீமியம் SUV பிரிவிலேயே மிக அதிகபட்சமாக 200 PS சக்தியை 3600  rpm ல் 500 nm டார்குடன் வெளியிடும் அபார திறன் இந்த எஞ்சினுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. 6 - வேக தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மிகவும் நம்பிக்கை தருவதாக இருந்தாலும், 4X4  வேரியன்ட் அறிமுகப்படுத்தப் படவில்லை என்பது ஒரு சிறிய பின்னடைவாக தான் தோன்றுகிறது. மேலே குறிப்பிட்டுள்ளது போல் ஒரே ஒரு வேரியன்ட் (4X2 ) மட்டும் தான் நாளை அறிமுகமாகிறது.

அளவு

இந்த SUV வாகனம் 4,878மீ.மீ நீளம், 1,902மீ.மீ அகலம் , 1,847மீ.மீ உயரம் மற்றும் 3,096மீ.மீ. வீல்பேஸ் ஆகிய அளவுகளில் உள்ளது. இந்த ப்ரீமியம்

SUV பிரிவிலேயே பெரிய வாகனம் என்ற சிறப்பையும் இந்த டிரைல்ப்ளேசர் பெறுகிறது. எத்தகைய கரடு முரடான பாதைகளிலும் சர்வ சாதரணமாக பாய்ந்து செல்லும் வகையில் மிக அதிகப்படியான கிரவுன்ட் க்லியரன்ஸ் 231மீ.மீ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2,068  கிலோ வரை பாரத்தையும் சுமந்து செல்ல கூடியது இந்த புதிய டிரைல்ப்ளேசர்.

பாதுகாப்பு

டிரைல்ப்ளேசர் SUV முன்புற இரட்டை காற்று பைகள் (ஏயர் பேக்ஸ்), மின்னணு ஸ்டெபிலிடி கண்ட்ரோல், ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் மற்றும் ABS+EBD பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பெற்றுள்ளன,

வெளிப்புறம்

வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரை செவேர்லே வாகனத்தில் நன்கு பார்த்து பழக்கப்பட்ட இரட்டை - போர்ட் க்ரில் அமைப்பு, கூடவே சற்று சாய்வான ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் குரோம் பூச்சு கொண்ட பாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டு தோற்றத்தில் பெரும்பகுதியை பெரிய அளவிலான ஜன்னல்கள் நிரப்பி விடுகிறது என்றே சொல்லலாம். பின்புற விண்ட்ஸ்க்ரீன் மற்றும் பெரிய அளவில் எடுப்பாக தெரியாத வீல் ஆர்செஸ் இணைக்கப்பட்டிருப்பதையும், பின்புறத்தை பொறுத்தமட்டில் குரோம் பூச்சுடன் கூடிய LED டெயில்லேம்ப் க்ளஸ்டர் போன்ற அம்சங்களும் வெளிப்புற தோற்றத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடியவை.

உட்புறம்

டிரைல்ப்ளேசர் SUV வாகனத்தில் செவேர்லே நிறுவனத்தின் சிறப்பு அம்சமான மைலிங்க் 7- அங்குல டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இந்போடைன்மென்ட் அமைப்பில் சேட்டிலைட் நேவிகேஷன், சென்சார்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்கிங் கேமெரா மற்றும் இன்னும் பல தகவல் இணைப்பு அம்சங்களும் உள்ளன.

போட்டி

இந்த பெரிய டிரைல்ப்ளேசர் டொயோடா பார்சூனர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், ஹ்யுடை சாண்டா பி , இஸுசு எம்யு 7, ஹோண்டா சிஆர் - வி மற்றும் விரைவில் வர உள்ள போர்ட் எண்டீவர் வாகனங்களுடன் போட்டியிடும். இதில் சிஆர் - வி மட்டுமே 5 சீட்டர் பெட்ரோல் வாகனம் என்பதால் டிரைல்ப்ளேசர் வாகனத்திற்கு சரியான போட்டி என்று சொல்ல முடியாது.

இதையும் படியுங்கள் :

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Chevrolet ட்ரையல்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience