ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் செவ்ரோலேட் ஸ்பின் MPV காட்சிக்கு வைக்கப்படலாம்
published on ஜனவரி 19, 2016 11:47 am by konark for செவ்ரோலேட் ஸ்பின்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
அடுத்து நடக்கவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில், MPV பிரிவின் கீழ் தனது புதிய தயாரிப்பான ஸ்பின் காரை, செவ்ரோலேட் நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது. MPV பிரிவை சேர்ந்த ஹோண்டா மொபிலியோ மற்றும் மாருதி சுசுகி எர்டிகா ஆகியவற்றுடன் ஸ்பின் போட்டியிட உள்ளது. தற்போது இந்த MPV பிரிவில் செவ்ரோலேட்டின் சார்பாக உள்ள என்ஜாய், அதிகளவில் டெக்ஸி துறையில் செயலாற்றி வரும் நிலையில், இந்த ஸ்பின் ஒரு பிரிமியம் MPV-யாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு இந்தியாவில் சோதனையில் ஈடுபட்ட போது, இந்த ஸ்பின் காரை நாங்கள் படம் பிடித்தோம். இதோ பாருங்கள்:
ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஸ்பின், ஏறக்குறைய 90 PS ஆற்றலையும், 200Nm முடுக்குவிசையையும் வெளியிட்டு, பெரும்பாலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் வகையில், ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கூட அளிக்கப்படலாம். இதன் துவக்கம் விலை ரூ.7 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கடந்தாண்டு நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில், வரும் ஆண்டுகளில் நமது சந்தையில் ரூ.6,660 கோடி முதலீடு செய்யப் போவதாகவும், இந்த முதலீட்டை பயன்படுத்தி இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் கார் ஸ்பின் MPV-யாக இருக்கும் என்றும் செவ்ரோலேட் இந்தியா அறிவித்திருந்தது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கேமரோ, கோர்விட்டி ஆகியவை உடன் மேம்படுத்தப்பட்ட க்ரூஸையும், செவ்ரோலேட் மூலம் கொண்டு வரப்படலாம் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. தனது நுகர்வோருக்கு கூடுதலான தொடர்பு அனுபவத்தை அளிக்கும் வகையில், ஒகுலஸ் ரிஃப்ட் விர்ச்சூவல் எக்ஸ்பிரியன்ஸ் போன்ற தொடர்பு அப்ளிகேஷன்களை, இந்நிறுவனம் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்க உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான இந்நிறுவனத்தின் திட்டங்களை குறித்து பேசிய GM இந்தியா தலைவர் மற்றும் MD-யான காஹிர் காஸிம் கூறுகையில், 2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு வரும் பார்வையாளர்கள், முற்றிலும் புதிய செவ்ரோலேட்டை காண உள்ளனர் என்றார். அவர் மேலும் கூறுகையில், “இந்தாண்டின் இந்நிகழ்ச்சியில் எங்கள் தரப்பில் இருந்து வெளிவரும் சில முக்கியத்துவம் வாய்ந்த செவ்ரோலேட் தயாரிப்புகள், இந்திய நுகர்வோரின் விருப்பங்களை எதிரொலிப்பதாகவும், இந்திய வாகன சந்தையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளுடன் போட்டியிடுவதாகவும் அமையும்” என்றார்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful