செவர்லே கமேரோ : இந்த அமெரிக்க கட்டுமஸ்தான வாகனத்தின் தெளிவான படங்களை தொகுப்பில் கண்டு களியுங்கள்
#முதலில் நாங்கள் - மிகப்பெரிய ஊடக குழுவினருடன் இணைந்து நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ 2016 நிகழ்வின் விரிவான மற்றும் தெளிவான செய்திகளை கார்தேகோ உடனுக்குடன் வழங்கி வருகிறது.
அமெரிக்க கார் தயாரிப்பாளர்களான செவர்லே நிறுவனத்தினர் தங்களது மிகவும் பிரபலமான கமேரோ ஸ்போர்ட்ஸ் காரை இன்று காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த கார் அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ளது போன்ற இடது பக்கம் அமர்ந்து ஓட்டும் வசதி ( லெப்ட் ஹேன்ட் ட்ரைவ் ) கொண்டுள்ளது. ஆறாவது தலைமுறை கமேரோ கார்களான இவை போர்ட் முஸ்டாங் GT கார்களுடன் போட்டியிடும் என்று தெரிகிறது. முஸ்டாங் கார்களை விட குறைந்த எடையையும் அதிக சக்தியையும் இந்த கமேரோ கார்கள் கொண்டுள்ளது. மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.