ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட BYD Sealion 6
இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால் இது BYD -ன் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் காராக இருக்கும்.
BYD நிறுவனம் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் சீலையன் 6 பிளக்-இன்-ஹைப்ரிட் எஸ்யூவி -யை காட்சிப்படுத்தியுள்ளது. சீலையன் 6 இந்தியாவில் வெளியிடப்படுமா என்பதை BYD இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்டால் இது BYD நிறுவனத்தின் முதல் பிளக்-இன்-ஹைப்ரிட் மாடலாக இது இருக்கும். BYD சீலையன் 6 பற்றி விரிவாகப் பார்ப்போம்:
வெளிப்புறம்
BYD சீலையன் 6 ஆனது C-வடிவ LED ஹெட்லைட்களுடன் BYD சீல் போன்ற முன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும் இது கிடைமட்ட ஸ்லேட்டுகள் மற்றும் குரோம் எலமென்ட்களுடன் வேறுபட்ட பம்பர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பம்பரின் கீழ் பகுதி பிளாக் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட்டை கொண்டுள்ளது.
பக்கவாட்டில் பார்க்கும் போது இது 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், ஜன்னல்களில் குரோம் சரவுண்ட்ஸ் மற்றும் சில்வர் ரூஃப் ரெயில்களுடன் வருகிறது.
இது பின்புறத்தில் வளைவான பாடி வடிவமைப்பைப் கொண்டுள்ளது. மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் டெயில்கேட்டின் கீழ் ஒரு பிளாக் டிரிம் ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்கத்தைப் போலவே பின்புற பம்பரின் கீழ் பகுதியும் பிளாக் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் வருகிறது.
இன்ட்டீரியர்
உள்ளே BYD சீலையன் 6 ஆனது 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ரொட்டேட்டபிள் டச் ஸ்கிரீன் மற்றும் BYD சீலையன் 7 போன்ற சில லைட்டிங் எலமென்ட்களுடன் கிளாஸி பிளாக் பேனலுடன் வருகிறது. இந்த லைட்டிங் எலமென்ட்களுடன் கதவுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள ஏசி வென்ட்கள் கான்ட்ராஸ்ட் சரவுண்டிங்ஸ் மற்றும் சென்டர் கன்சோலில் கிரிஸ்டல் போன்ற டிரைவ் செலக்டர் மற்றும் பல்வேறு பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கேபினில் டூயல்-டோன் தீம் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் சீட்கள் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகின்றன .
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்யும் 15.6-இன்ச் ரொட்டேட்டபிள் டச் ஸ்கிரீன் மற்றும் 10-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம் போன்ற பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது. இது டிஜிட்டல் கீ, கீலெஸ் என்ட்ரி மற்றும் கீலெஸ் ஸ்டார்ட், வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்களுடன் வருகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் குளோபல்-ஸ்பெக் சீலியன் 6 -ல் 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கொலிஷன் மிட்டிகேஷன் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
BYD சீலையன் 6 வெளிநாட்டில் இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் பிளக்-இன்-ஹைப்ரிட் அமைப்புடன் வருகின்றன, அதன் விவரங்கள் பின்வருமாறு:
வேரியன்ட் |
டைனமிக் |
பிரீமியம் |
இன்ஜின் |
1.5 லிட்டர் பிளக்-இன்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் |
1.5 லிட்டர் பிளக்-இன்-ஹைப்ரிட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
217.5 PS |
323.5 PS |
டிரைவ்டிரெய்ன் |
ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் (FWD) |
ஆல்-வீல் டிரைவ் (AWD) |
எதிர்பார்க்கப்படும் விலை
VF e34 இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பதை BYD இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் இதன் விலை ரூ. 30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.