சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பிஎஸ் 6 ரெனால்ட் டஸ்டர் ரூபாய் 8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது

published on மார்ச் 24, 2020 06:24 pm by rohit for ரெனால்ட் டஸ்டர்

டஸ்டர் தற்போது பெட்ரோல் இயந்திரத்தை மட்டுமே வழங்குகிறது, இது நீண்ட காலமாக இயங்கி வந்த 1.5-லிட்டர் டீசல் இயந்திரத்தை நிறுத்திவிட்டது

  • ரூபாய் 50,000 வரை விலை உயர்ந்துள்ளது.

  • தற்போது மூன்று வகைகளில் கிடைக்கிறது: ஆர்‌எக்ஸ்‌இ,ஆர்‌எக்ஸ்‌எஸ் மற்றும் ஆர்‌எக்ஸ்இசட் (புதியது).

  • பிஎஸ்6 டஸ்டருக்கு இதுவரை கூடுதல் சிறப்பம்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

  • 1.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் இனி சிவிடி தானியங்கி முறை விருப்பத்துடன் வழங்கப்படாது.

  • டீசல் இயந்திரம் நிறுத்தப்பட்ட நிலையில், இப்போது ஆல்-வீல்-டிரைவ் விருப்பமும் கிடையாது.

  • சிவிடி (விரும்பினால்) மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்துடனான டஸ்டர் டர்போ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜனவரி 2020 இல் பிஎஸ்6 க்விட் மற்றும் ட்ரைபரை அறிமுகம் செய்த பிறகு, ரெனால்ட் தற்போது பிஎஸ்6 டஸ்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்யூவி தொடர்ந்து மூன்று வகைகளில் அளிக்கிறது: ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எஸ் மற்றும் ஆர்எக்ஸ்இசட். மேம்படுத்தலுடன் வரும் டஸ்டர் தற்போது பெட்ரோல் மட்டுமே உடைய இயந்திர மாதிரியை வழங்கும், ஏனெனில் ரெனால்ட்-நிஸான் பிஎஸ்6 வரலாற்றில் எந்தவொரு டீசல் இயந்திரம் உடைய மாதிரிகளையும் வழங்காது. மேம்பாடு காரணமாக டஸ்டரின் விலை ரூபாய் 50,000 வரை அதிகரித்துள்ளன. அதன் மாற்றம் செய்யப்பட்ட விலைப் பட்டியலைப் பாருங்கள்:

வகை(பெட்ரோல்)

பி‌எஸ்4 விலைகள்

பி‌எஸ்6 விலைகள்

வேறுபாடு

ஆர்‌எக்ஸ்‌இ

ரூபாய் 7.99 லட்சம்

ரூபாய் 8.49 லட்சம்

ரூபாய் 50,000

ஆர்‌எக்ஸ்‌எஸ்

ரூபாய் 9.19 லட்சம்

ரூபாய் 9.29 லட்சம்

ரூபாய் 10,000

ஆர்‌எக்ஸ்‌எஸ் (0) (சி‌வி‌டி-மட்டும்)

ரூபாய் 9.99 லட்சம்

என்‌ஏ

ஆர்‌எக்ஸ்இசட்

-

ரூபாய் 9.99 லட்சம்

-

பிஎஸ்4 டஸ்டரின் சிவிடி-மட்டுமே உடைய ஆர்எக்ஸ்எஸ் (ஓ) வகை இனி விற்பனைக்கு கிடையாது. இது பிஎஸ்4 டஸ்டரின் உயர்-சிறப்பம்சம் பொருந்திய பெட்ரோல் இயந்திர வகையாகும். பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் கேமரா, உயரத்தைச் சரிசெய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, வேகக் கட்டுப்பாடு மற்றும் பின்புற மழை நீர் துடைப்பான் மற்றும் வாஷர் போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இதில் கிடையாது. இந்த சிறப்பம்சங்கள் அனைத்தும் உயர்-சிறப்பம்சம் பொருந்திய டீசல் இயந்திர ஆர்எக்ஸ்இசட் வகையில் மாறுபடும். டீசல் இயந்திரம் இனி விற்பனைக்கு வராது என்பதால், ரெனால்ட் பிஎஸ் 6 டஸ்டரில் பெட்ரோலுடன் நேர்த்தியான ஆர்எக்ஸ்இசட் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய ஆர்‌எக்ஸ்இசட் கைமுறை வகையாகும் மேலும் இதில் சிவிடி விருப்பம் கிடையாது. உண்மையில், பிஎஸ்6 டஸ்டர் சிவிடி விருப்பத்தை முழுவதுமாக இழக்கிறது.

பிஎஸ்6 டஸ்டர் பெட்ரோல் அதே 1.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரத்துடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இது அதன் பிஎஸ்4 அளவைப் போலவே 106பிஎஸ் ஆற்றலையும் 142 என்எம் முறுக்கு திறனையும் வெளியிடுகிறது. இது 5-வேகக் கைமுறை பற்சக்கர பெட்டியுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. பிஎஸ்6 டஸ்டரின் கோரப்பட்ட எரிபொருள் செயல்திறன் அளவு லிட்டருக்கு 14.26 கிமீ ஆகும். டீசல் இயந்திரம் இனி கிடைக்காததால், எஸ்யூவி இப்போது ஏ‌டபில்யு‌டி வகையையும் இழக்கிறது.

மேலும் காண்க: இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கின்ற ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் ரஷ்யாவில் காட்சிப்படுத்தப்பட்டது

டஸ்டரின் சிறப்பம்ச பட்டியலில் ரெனால்ட் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. இது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் கேமரா மற்றும் வேகக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் 7-அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்பைப் பெறுகிறது. பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் உணர்விகள், இரு முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், முன்பக்க இருக்கையின் வார்பாட்டைக்கான நினைவூட்டி மற்றும் வேக எச்சரிக்கை போன்ற நிலையான பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் பிஎஸ்6 டஸ்டர் வருகிறது.

இதற்கிடையில், 156பிஎஸ் தொகுப்புக் கொண்ட புத்தம் புதிய 1.3-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரம் உடைய அதிக ஆற்றல்மிக்க டஸ்டர் டர்போ மாதிரி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதில் பெரிய 8-அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு மற்றும் தொலைதூர இயக்கி மூலம் உட்புறத்தை குளிர்விக்கும் அமைப்பு போன்ற கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும், இது டஸ்டரின் தயாரிப்பு வரிசையில் புதிய உயர்-சிறப்பம்சம் பொருந்திய வகையாக மாறும்.

க்யா செல்டோஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா 2020 போன்ற பிஎஸ் 6-இணக்கமான காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு போட்டியாக பிஎஸ்6 டஸ்டர் இருக்கும்.

அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் டெல்லி

மேலும் படிக்க: இறுதி விலையில் ரெனால்ட் டஸ்டர்

r
வெளியிட்டவர்

rohit

  • 57 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ரெனால்ட் டஸ்டர்

A
atul mishra
Apr 20, 2020, 6:36:33 AM

Duster सबसे ज्यादा डीजल इंजिन मे बिकती थी। अब सिर्फ पैट्रोल मॉडल लांच करके कम्पनी इस मॉडल का अन्तिम संस्कार कर रही है।

Read Full News

explore மேலும் on ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் டஸ்டர் ஐஎஸ் discontinued மற்றும் no longer produced.
டீசல்19.87 கேஎம்பிஎல்
பெட்ரோல்16.42 கேஎம்பிஎல்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை