பிஎஸ்6 மஹிந்திரா ஸ்கார்பியோ விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. புதிய-தலைமுறை மாதிரி 2020 இல் அறிமுகமாகாது
published on மார்ச் 07, 2020 11:39 am by rohit for மஹிந்திரா ஸ்கார்பியோ 2014-2022
- 71 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கார்பியோவில் தற்போது இருக்கின்ற 2.2-லிட்டர் இயந்திரம் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தல்களைப் பெறும் அதே சமயத்தில், 2021 இல் அதன் அடுத்த தலைமுறை மாதிரியில் புத்தம் புதிய 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
“பிஎஸ் 6 டீசல் மட்டும்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சமீபத்தில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.
-
அதனுடைய வெளியீட்டு அளவுகள் தெரியவில்லை ஆனால் பிஎஸ்4 பதிப்புகள் 120பிஎஸ் / 280என்எம் மற்றும் 140பிஎஸ் / 320என்எம் ஐ உருவாக்கியது.
-
சிறப்பம்சங்களின் பட்டியல் மாறாமல் இருக்க வாய்ப்புள்ளது.
-
ரூபாய் 1 லட்சம் வரை விலை அதிகமாக இருக்கும்.
-
புதிய-தலைமுறை ஸ்கார்பியோ 2021 இல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்6-க்கான காலஅவகாசம் வேகமாக நெருங்கி வருவதால், அனைத்து முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் வரவிருக்கும் மாசு உமிழ்வு விதிமுறைகளை எதிர்கொள்வதற்காக தங்களுடைய தயாரிப்புகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மேம்படுத்தியுள்ளனர். மஹிந்திரா சமீபத்தில் பிஎஸ்6 டீசல் இயந்திரத்தில் இயங்கக் கூடிய ஸ்கார்பியோவை சோதனை ஓட்டம் செய்தது. அது எங்களுக்கு எப்படித் தெரியும்? சரி, அதனுடைய எரிபொருள் மூடியில் இருக்கின்ற ஸ்டிக்கர் “பிஎஸ்6 டீசல் மட்டும்” என்று கூறுகிறது. இந்த குறிப்பிட்ட சோதனை ஓட்டம் ஒரு டி140 அடையாளத்தைக் காட்சிப்படுத்தியது, இது அதன் ஆற்றல் வெளியீட்டைக் குறிக்கிறது.
பிஎஸ்6 ஸ்கார்பியோ அதே 2.2-லிட்டர் எம்ஹாக் டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படும், இது சமீபத்திய மாசு உமிழ்வு விதிமுறைகளை எதிர்கொள்ளும் அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிஎஸ் 6 அமைப்பின் வெளியீட்டு அளவுகள் குறித்து இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் பிஎஸ்4 பதிப்பானது தேர்ந்தெடுக்கும் வகையைச் சார்ந்து 120பிஎஸ் / 280என்எம் அல்லது 140பிஎஸ் / 320என்எம் நிலைகளில் கிடைக்கிறது. மஹிந்திரா இந்த இயந்திரத்தை 5-வேகக் கைமுறை அல்லது 6-வேகக் கைமுறை பற்சக்கரபெட்டி விருப்பத்துடன் வழங்குகிறது.
மேலும் படிக்க: அடுத்த-தலைமுறையான மஹிந்திரா எக்ஸ்யூவி 500-ஐ வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்
பிஎஸ் 6 ஸ்கார்பியோ அதன் முந்தைய பிஎஸ்4 மாதிரிகளின் சாதனப் பட்டியலைத் தக்க வைத்திருக்க வேண்டும், இதில் தானியங்கி முறையிலான குளிர்சாதன வசதி, பயணவேகக் கட்டுப்பாடு, எல்இடி டிஆர்எல்களுடன் தானியங்கி முறையில் எரியக்கூடிய முகப்பு விளக்குகள், மழை நீரைத் துடைக்கக் கூடிய தானியங்கி முறையிலான வைப்பர்கள் மற்றும் திசைத் திருப்பியில் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடுகள் போன்றவை அடங்கும். மஹிந்திரா ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பை பிஎஸ்6 புதுப்பிப்புடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய-தலைமுறையான ஸ்கார்பியோவைப் பொறுத்தவரை, இது 2021 இல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா அதை பிஎஸ்6-இணக்கமான 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்க வேண்டும். தற்போது இருக்கின்ற 2.2-லிட்டர் டீசல் இயந்திரத்தைக் காட்டிலும் 2.0-லிட்டர் டீசல் மோட்டார் அதிக ஆற்றல் மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு தானியங்கி முறையிலான பற்சக்கர பெட்டி விருப்பத்துடன் நிலையான 6-வேகத் தானியங்கி முறையிலான செலுத்துதல் விருப்பத்துடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா தற்போதைய மாதிரியில் இருப்பதைப் போலவே ஒரு ஏடபில்யுடி (ஆல்-வீல் டிரைவ்) ஆற்றல் இயக்கியை ஒரு விருப்பமாக வழங்க முடியும்.
பிஎஸ்6 ஸ்கார்பியோ வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும். பிஎஸ்4 ஸ்கார்பியோவின் விலை ரூபாய் 10.19 லட்சத்திலிருந்து ரூபாய் 16.83 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) வரை இருக்கும், இதைக் காட்டிலும் இதன் விலை ரூபாய் 1 லட்சம் வரை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டூர், நிஸான் கிக்ஸ் மற்றும் க்யா செல்டோஸ் போன்ற கார்களுடன் தொடர்ந்து போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: ஸ்கார்பியோ டீசல்