• English
  • Login / Register

2016 ஆட்டோ எக்ஸ்போவில் இல்லாத பிராண்டுகள் எவை?

published on ஜனவரி 29, 2016 10:34 am by nabeel

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உலகமெங்கும் உள்ள வாகனத் தயாரிப்பாளர்களுக்கு, தங்களின் தயாரிப்புகளை காட்சிக்கு வைக்க தகுந்த மிகப்பெரிய மேடையாக, ஆட்டோ எக்ஸ்போ உள்ளது. இது வாகனத் தயாரிப்பாளர்களுக்கு பிரபலத்தை தேடி தரும் ஒரு வாய்ப்பு மட்டுமின்றி, வாகன உரிமையாளர்களுக்கு பிராண்டுகளையும் அவற்றின் தயாரிப்புகளையும் குறித்த தெளிவான நுண்ணறிவையும்  அளிப்பதாக அமைகிறது. இந்திய சந்தையில் அறியப்பட்ட பெரும்பாலான எல்லா வாகனத் தயாரிப்பாளர்களும், எக்ஸ்போவில் காட்சியளிக்கும் நிலையில், அதில் ஒரு சிலர் மட்டும் இந்நிகழ்ச்சியை தவிர்க்கலாம் என்று தீர்மானித்துள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த ஸ்கோடா மற்றும் வோல்வோ ஆகியோர், பயணிகள் கார் பிரிவில் இருந்து விலகியுள்ள நிலையில், 2-வீலர் பிரிவில் இருந்து பஜாஜ், ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹார்லே-டேவிட்சன் ஆகியோர் பின்வாங்கி உள்ளனர். டெய்ம்லரின் துணை நிறுவனமான பாரத்பென்ஸ், கனரக வாகனங்களுக்கான பிரிவில் தனது ட்ரக்குகளை காட்சிக்கு வைக்காமல் தவிர்த்துள்ளது. இந்நிலையில் மேற்கண்ட பிராண்டுகள் ஒருவேளை எக்ஸ்போவிற்குள் அடியெடுத்து வைத்திருத்தால், அவை என்னென்ன தயாரிப்புகளை களமிறங்கி இருக்கலாம் என்பது குறித்த ஒரு பட்டியல் இதோ!

ஸ்கோடா

2016 ஸ்கோடா சூப்பர்ப்


அதிக காத்திருப்பு மற்றும் நீண்ட எதிர்பார்ப்பைக் கொண்ட ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா நிறுவனத்தின் நட்சத்திர தயாரிப்பாக ஜொலித்து இருந்திருக்கும். இந்தியாவில் அதன் நவீன ஆடம்பர சேடனை அறிமுகம் செய்ய, இந்த வாகன தயாரிப்பாளருக்கு ஆட்டோ எக்ஸ்போ ஒரு தகுந்த தளமாக இருந்திருக்கும். ஆனால் நம் நாட்டில் இந்த காரின் அறிமுகத்திற்கு, இந்தியாவின் சூப்பர்ப் ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது ஒரு வருந்தத்தக்க செய்தி ஆகும்.
ஸ்கோடா ஃபேபியா R5


கடந்த 2014 எஸ்ஸன் மோட்டார் ஷோவில், ஃபேபியாவின் அடிப்படையைக் கொண்ட ஸ்கோடா குழுவின் போட்டியிடும் வாகனம் (ரேலி வார்ஷிப்) முதல் முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த காருக்கு, ஒரு 1.6-லிட்டர் டர்போ என்ஜின் ஆற்றல் அளிப்பதோடு, ஒரு வரிசையில் அமைந்த 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு, மேக்பெர்சன் சஸ்பென்ஸன் உடன் வீரநடை போட்டு முன்னேறி செல்கிறது. இந்த குறிப்பிட்ட ரேலி காரை நன்கு-மெருகேற்றவும், அதன் நவீன கூறுகள் சுமூகமாக மற்றும் செயல்திறனோடு செயல்படுகிறது என்பதை உறுதி செய்யவும், 15 மாத கால மேம்பாட்டு பணிகள் தேவைப்பட்டது.
ஸ்கோடா ஆக்டேவியா RS 230


கடந்த 2015 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற 85வது ஜெனீவா மோட்டார் ஷோவில், இந்த காரின் சர்வதேச அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் ஒரு 2.0-லிட்டர் TSI டர்போ பெட்ரோலை கொண்டு, 230bhp ஆற்றலை வெளியிடுகிறது. 6.7 வினாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ. வேகத்தை எட்டிச் சேரும் ஆக்டேவியாவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. ஆகும். இந்திய சாலையில் சீறிப் பாய்ந்து செல்லும் வகையிலான இந்த கார், பெரும்பாலும் நம் நாட்டிற்குள் எட்டி சேருவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், இதன் அழகை காண இந்திய வாகன ரசிகர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பையும், அது தற்போது இழந்துள்ளது.

வோல்வோ

வோல்வோ S90


இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் இந்த கார், ஆட்டோ ஸ்பேஸிற்குள் நுழைந்து சில காலம் ஆகிவிட்டது. இந்தியாவில் இந்த சேடனின் அறிமுகம் ஏறக்குறைய வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெறலாம் என்ற நிலையில், எக்ஸ்போவின் மூலம் வோல்வோ விரும்பிகளுக்கு இந்த காரை நேரில் பார்க்கும் அனுபவம் பெறும் வாய்ப்பு ஒன்று இருந்தது. இந்நிலையில் இது அறிமுகமான பிறகு, மெர்சிடிஸ் E-கிளாஸ், ஆடி A6, BMW-5 சீரிஸ் மற்றும் ஜாகுவார் XF ஆகியவை உடன் போட்டியிடும்.

வோல்வோ ‘26’ தொழிற்நுட்பம்


இந்த தொழிற்நுட்பத்தின் மூலம் காப்புரிமை கொண்ட இயந்திரவியல் தன்மை மற்றும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட சீட் டிசைன் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படுகிறது. டிரைவ், கிரியேட் மற்றும் ரிலாக்ஸ் ஆகிய மூன்று மோடுகளை கொண்டு இந்த கார் செயல்படுகிறது. இதில் ‘டிரைவ்’ மோடு என்பது ஒரு சாதாரண காரின் கேபின் ஆகும். கிரியேட் மற்றும் ரிலாக்ஸ் ஆகிய மோடுகள், காரின் உட்புற அமைப்பை மாற்றி அமைத்து, அதிக இதமான நிலைக்கு கொண்டு செல்கிறது. இதில் டாஸ்போர்டிற்குள் அடங்கும் ஸ்டீயரிங் மற்றும் ஒரு பெரிய அளவிலான டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க இந்திய ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ 2016: மிகப் பெரிய அளவிலும், மிகச் சிறந்ததாகவும், அதிக உற்சாகமூட்டும் விதத்திலும் நடைபெறும்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience