புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக்: முன்பதிவு துவக்கம்
published on அக்டோபர் 21, 2015 02:17 pm by அபிஜித் for லேண்டு ரோவர் ரேஞ்ச் rover evoque 2016-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் இவோக் காருக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் வரும் பண்டிகை காலத்தில் இது அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் உட்புறம் மற்றும் வெளிபுறத்தில் சிறிய அளவிலான மேம்பாடுகளை செய்து, புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளி உலகிற்கு காட்டப்பட்டது. இந்நிலையில் BMW X3, ஆடி Q5 மற்றும் வோல்வோ XC60 ஆகிய கார்களுக்கு எதிராக இந்த கச்சிதமான SUV போட்டியிட உள்ளது.
இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை குறித்து பார்க்கும் போது, புதிதாக செதுக்கப்பட்டது போன்ற முன்புற மற்றும் பின்புற பம்பர் உடன் கூடிய விரிந்த ஏர் ஸ்னூப்ஸ் மற்றும் ஒரு புதிய தாழ்வான ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை வெளிபுற அமைப்பில் கொண்டுள்ளது. அடாப்டீவ் ஹெட்லெம்ப்கள் யூனிட்டில் முழுவதும் LED உடன் கூடிய ஒரு புதிய DRL செட்அப் மற்றும் அதன் பக்கவாட்டில் புதிய கிரில் டிசைன் என தற்போதைய காரை போன்றே சக்தி வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. பக்கவாட்டில் ஒரு ஜோடி அலாய் வீல்களை காண முடிகிறது. பின்புறத்தில் ஒரு புதிய டெயில் லிட் ஸ்பாய்லரை பெற்றுள்ளது.
உட்புறத்தை பொறுத்த வரை, புதிய சீட்கள், டோர் காஸிங் மற்றும் வெவ்வேறு விதமான நிறங்களின் தேர்வை கொண்டு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இதையெல்லாம் தவிர, உட்புறத்தில் ஒரு புதிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் மீடியா-நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரில் ஒரு புதிய TFT ஸ்கிரீன் காணப்படுகிறது. இதிலும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் போன்ற சில கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் உள்ள ரேஞ்ச் ரோவர் இவோக் 2.2-லிட்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு, 187 bhp ஆற்றலை வெளியிடும் நிலையில், இதே என்ஜினையே தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், ஆல் டெரேயின் ப்ரோகிரஸ் கன்ட்ரோல் என்று அழைக்கப்படும் JLR என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தின் பலன்களையும் பெறுகிறது. இந்த வாகனத்தை உள்ளூரிலேயே அசம்பிள் செய்யப்படுவதால், விலை சற்று குறைக்கப்பட்டு, தற்போதைக்கு பேஸ் வகைக்கு ரூ.49.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
- இது சிறப்பிற்கு எதிரான சிறப்பு: டிஸ்கவரி ஸ்போர்ட் போட்டிக்கு களமிறங்குகிறது
- முதல் முறையாக கவசம் கொண்ட வாகனத்தை லேண்ட் ரோவர் வெளியிடுகிறது: ரேஞ்ச் ரோவர் சென்டினல் (வீடியோ)
0 out of 0 found this helpful