• English
  • Login / Register

பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை சௌமியா டாண்டன் புதிய Mercedes-Benz E-Class காரை வாங்கியுள்ளார்

modified on ஜூன் 25, 2024 05:37 pm by rohit for மெர்சிடீஸ் இ-கிளாஸ்

  • 23 Views
  • ஒரு கருத்தை எழுதுக

E-கிளாஸ் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது - E 200, E 220d மற்றும் E 350d. இதன் விலை ரூ. 76.05 லட்சம் முதல் ரூ. 89.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.

Saumya Tandon's new Mercedes-Benz E-Class

பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை சௌமியா டாண்டன் சமீபத்தில் வாங்கிய மெர்சிடிஸ்-பென்ஸ் மூலம் மேலும் பிரபலமாகிவிட்டார். பிரபலங்கள் பெரும்பாலானோர் எஸ்யூவி -யை தேர்ந்தெடுக்கும் வேளையில் இவர் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரை வாங்கியிருக்கிறார்.  ஜப் வி மெட் திரைப்படத்தில் நடித்ததால் பிரபலமான இவர் அவரது சொகுசு செடானுக்கு சப்டில் போலார் ஒயிட் நிறத்தை தேர்வு செய்தார்.

இ-கிளாஸ் பற்றிய கூடுதல் தகவல்கள்

Mercedes-Benz E-Class

E-கிளாஸ் என்பது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் உலகளவில் மிகவும் பிரபலமான மாடலாகும். தற்போது இந்தியாவில் லாங் வீல்பேஸ் (LWB) பதிப்பில் வழங்கப்படுகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா-ஸ்பெக் செடானை E 200, E 220d மற்றும் E 350d ஆகிய மூன்று வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது - இதன் விலை ரூ. 76.05 லட்சம் முதல் ரூ. 89.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). புதிய தலைமுறை E-கிளாஸ் LWB இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவர்டிரெயின்கள்

நடிகை சௌமியா எந்த பவர்டிரெய்னை தேர்வு செய்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதே சமயம் மெர்சிடிஸ் E-கிளாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது. அவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் கீழே உள்ளன:

விவரங்கள்

2-லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல்

2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல்

3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல்

பவர்

197 PS

200 PS

286 PS

டார்க்

320 Nm

440 Nm

600 Nm

டிரான்ஸ்மிஷன்

9-ஸ்பீடு AT

9-ஸ்பீடு AT

9-ஸ்பீடு AT

இதன் மிகவும் சக்தி வாய்ந்த டீசல் வேரியன்ட் 0-100 கி.மீ வேகத்தை 6 வினாடிகளுக்குள் எட்டும்.

மேலும் பார்க்க: எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியாவில் 2025 Skoda Kodiaq சோதனை செய்யப்படும் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

இது என்ன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது?

Mercedes-Benz E-Class cabin

இந்தியா-ஸ்பெக் இ-கிளாஸ் டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்க்கு மற்றும் இன்னொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்க்கு), ஒரு பனோரமிக் சன்ரூஃப், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் (முன் மற்றும் பின்புறம்) மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற வசதிகளுடன் வருகிறது. .

இதன் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பல அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -கள் (ADAS) ஆகியவை உள்ளன.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரின் போட்டியாளர்கள்

Mercedes-Benz E-Class rear

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் E-கிளாஸ் ஆனது ஆடி A6, வால்வோ S90, மற்றும் BMW 5 சீரிஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் பார்க்க: ஜூலை 24 அன்று புதிய BMW 5 Series LWB கார் வெளியிடப்படவுள்ளது, முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது

வாகனங்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடருங்கள்.

மேலும் படிக்க: மெர்சிடிஸ்-பென்ஸ் E-கிளாஸ் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மெர்சிடீஸ் இ-கிளாஸ்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience